Thursday, July 30, 2015

"செம்மலர் " சிறுகதைகள்

"சம்ஸ்கிருத" மொழியில்......!!!


"செம்மலர் " பத்திரிகையில்  வந்த தமிழ் சிறுகதைகள சம்ஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு  தொகுப்பாக வெளிவந்துள்ளது. எழுத்தாளரும் ,மொழிபெயர்ப்பாளருமான மூத்து மீனாட்சி அவர்கள் இந்த தொகுப்பினை கொண்டுவந்துள்ளார்கள் .இது பற்றிய விபரமாவது  


1925,35,45,55,65,75, என்று 60 ஆன்டுகள் "இந்தி":சிறுகதைகளை ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தேர்ந்தெடுத்து ஆராய்ந்தார்.  இதன் மூலம் "இந்தி "சிறுகதைகளின் கட்டமைப்பு.வளர்ச்சிப்போக்கு,உள்ளடக்கம் ஆகியவற்றைபகுத்து தெரிந்து கொள்ள முடிந்தது. இதே காலகட்டத்தில் தமிழ் சிறுகதைகளையும் பகுத்தாய்ந்து ஒப்புநோக்கில்முனைவர் பட்டத்துக்கான தயாரிப்பு பணியிலீடுபட்டார். இந்தி பிர்ச்சார சபாவின் "உயர்கலவி ஆராய்ச்சி நிறுவனத்தில் " (Higer education and Reaserch Instiute ) பதிவு செய்ய சென்றார் . அவர்கள் வேண்டாத நிபந்தனைகLai போட்டனர். குறைந்தது 30 வருடமாவது ஆகியிருக்கும். 


பின்னர் "நாகபுரி பல்கலைகழகத்தை நாடினார். அவர்களும் நிபந்தனைகளை போட்டனர்.நொந்து நுலாகிப்போன முத்துமிணட்சி அவர்கள் அற்புதமான பிறமொழிகதைகளை மொழிபெயர்த்து "செம்மலர்" பத்திரிகைக்கு அனுப்பினார்அவர்கள் பிரசுரித்துஆதரித்தார்கள்.


"ஐந்து நிமிடம்" என்று கதை. மரண தண்டனை நிறைவேற்றும்முன்பு கைதி ஒருவனை அவனதுமனைவி,பள்ளிச்சிறுவனான மகன் பார்க்க வருகின்றனார் பார்க்க ஐந்து நிமிடம்  அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதூ.இந்த ஐந்துமிடத்தில் அந்த கைதி,மனைவி மகன் ஆகியோரின்பார்வையில் அந்த ஐந்து நிமிடம் சித்தரிக்கப்பட்டுள்ளது.நெஞ்சை உருக்கும் இந்த கதை  வியொகிஹரி என்பவரால் "1928" ம் ஆண்டு எழுதப்பட்டது.( யாகுப் மெமான் நினைவு வந்தால் வியொகி ஹரியைத்தான் கேட்கவேண்டும்) 


"துக்கம்" என்று ஒருகதை .பால் சோறு வேண்டாம் என்று அழும் குழந்தயின் துக்கமும் . காய்ந்த ரொட்டிக்கக அழும் குழந்தையின் துக்கமும் ஒன்றா? மனதை பிசைந்த்து எடுக்கும் இந்தகதையை 1938 ம் ஆண்டு எழுதியவர் "பகத் சிங்"கோடு  கைதாகி சிறை சென்று மீண்ட "யஷ்பால் " ! இவருடைய "காம்ரேட்" என்ற நாவல் 1946ம் ஆண்டு பிரிட்டிஷாரை எதிர்த்து நடந்த  கப்பற்படை  மாலுமிகளின் எழுச்சியை சித்தரிப்பதாகும்.


எட்டுவயது சிறுமியையும்.ஐந்து வயது சிறுவனையும் வளரும் போதே எப்படி பாரபட்சமாக நடத்து கிறார்களென்பதை கண்ணிர் பெருக சித்தரிக்கும்  இந்த "லட்கி"கதை ராம் தர்ஸ் மிஸ்ரா என்பவ்ரால் 1957ல் எழுதப்பட்டதாகும். இவை செம்மலரில் வந்த கதைகளாகும்.இவை தவிர காஸ்யபனின் கதைகள்,"கல்கி"யில் வந்த முருகானந்தம் அவர்களின் கதை ஆகியவற்றை முத்து மீனட்சி அவர்கள் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து "சம்பாஷன சந்தேஷ் ' என்ற பங்களுரிலிருந்து வரும் பத்திர்கைக்கு அனுப்பினார் சம்ஸ்கிருதத்தில் மாதந்தரியாக வரும் அந்த பத்திரிகை பிரசுரித்தது.


ஆந்திராவிலிருந்து வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தினசரி "பிராஜாசக்தி" . திருப்பதி சம்ஸ்கிருத பல்கலைகழகத்தின் அச்சுபணிகளையும் இதன் அச்சகம்செய்துவருகிறது.இந்த ஏழுகதைகளையும் "பிரஜாசக்தி" பிரசுராலயம்  வெளியிட்டுள்ளது.

இதற்கான முன்னுரையை வெங்கடெஸ்வர வேத வித்யாலயம் ( சம்ஸ்கிருத பல்கலை) பணியாற்றும் பேராசிரியர் எழுதியுள்ளார்1 சம்ஸ்கிருத மொழியில் முனவர் பட்டம் பெற்ற முகம்மதியரான டாகடர்.பாதன் முகம்மது வலி திருப்பதி தேவஸ்தானம்  நடத்தும் பல்கலையில் சம்ஸ்கிருத பேராசிரியராக பணியாற்றுகிறார். சம்ஸ்கிருத மொழையின் உரைநடையில் இந்த தொகுப்பு புதிய வீச்சை கோண்டுவரும் என்றும் இடது சாரி நவீன இலக்கியம் தன் வீச்சை செலுத்துவது நிச்சயம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


முத்து மீனாட்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....!!!

 







 


1 comments:

venu's pathivukal said...

அன்பின் தோழர் காஸ்யபன் அவர்களுக்கு


ஆத்தாடி....எத்தனை நேர்த்தியாக ஒரு படைப்பாளியையும், அவரது பணிகளையும், அவர் மொழிபெயர்த்த கதைகளின் மூலகர்த்தாக்களையும், எதிர்வரும் தொகுப்பின் அச்சகம் குறித்தும், திருப்பதி தேவஸ்தான பல்கலையில் இஸ்லாமிய அறிஞர் ஒருவர் சம்ஸ்கிருத பேராசிரியராக பணியாற்றும் விவரத்தையும் நறுக்கென்று குறுகத் தறித்த குறளாக எழுதி இருக்கிறீர்கள்.....கதைகளை ஒற்றை வரியில் எத்தனை அமர்க்களமாக அறிமுகப் படுத்தி அசத்துகிறீர்கள்! உங்கள் படைப்புகளையும் உள்ளடக்கிய அந்த சமஸ்கிருத தொகுப்பு வெற்றி பெறட்டும்...உங்கள் வாழ்க்கைத் துணை முத்துமீனாட்சி அம்மாள் அவர்களுக்கு பாராட்டுதல்கள்..அவரது திறமைக்கு உரிய அங்கீகாரம் பெரிய பல்கலைகளில் கிடைக்கவில்லை என்பது வருத்தம் என்றாலும், அதையும் மீறித் தமது கடமையை அவர் ஆற்றிக் கொண்டிருப்பது அசாத்தியமானது. கூடுதல் பாராட்டுதல்கள்.

வாழ்த்துக்கள்...

எஸ் வி வி