Sunday, March 06, 2016

கொஞ்சம் "மொழி "இயல் 

பார்ப்போமா !!!.





1972-74 ம்  ஆண்டுகள் அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு சவாலான ஆண்டுகள். ஒருபக்கம் சிலர் சங்கத்தை துண்டாடிக்கொண்டிருந்தனர்  மற்றொருபக்கம் இதனை காரணமாக வைத்துக் கொண்டு சங்கத்தை தோற்கடிக்க நிர்வாகம் முயற்சித்து வந்தது.

சங்கத்தை கட்டிக்காத்து ஊழியர்களின் ஒற்றுமையை அடிநாதமாகக் கொண்டு சங்கம் வெற்றியை ஈட்டித்தர அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தது.

மும்பையில் ஊதிய உயர்வுக்கான பேசுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. மும்பை ஊழியர்களீடையே மதிய இடை வேளையின் பொது தமிழ்கத்தை சேர்ந்த அந்த வளர்ந்து வரும் தலைவர் பேசினார்..

ஆற்றோட்டம் போன்ற அற்புதமான ஆங்கில உரை .ஊழியர்களின் ஒற்றுமையும் சங்கத்தின் ஒன்றுபட்ட செயல்பாடும் அவருடைய பேச்சின் அடிநாதமாக இருந்தது. உழியர்கள் மெய்மறந்து அந்த பேச்சில் சொக்கிபோய் நின்றனர .

தமிழ்கத்தை சேர்ந்த வைத்தியநாதன் என்ற தொண்டர்  தலைவர்களை மதிய உணவிற்கு அழைத்துசென்று விடுதியில் தங்கி ஓய்வெடுக்கும் பொறுப்பை கவனித்து கொண்டார்.

உணவிற்குப்பின் சங்கத்தலைவர்கள் நடந்தது பற்றி பரி சீலித்து அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகளை ஓய்வாக விவாதிப்பார்கள்.

உத்திர பிரதேசத்தை சார்ந்த தோஈழர் திவாரி ஆங்கிலத்திலும்,இந்தியிலும் அற்புதமாக பேசக்கூடியவர்.
தோழர் ! இன்று உங்கள் பேச்சு அருமையாக இருந்தது.காரண காரியங்களை நீங்கள் எடுத்து அடுக்கியது சிறப்பாக இருந்தது.சங்கத்தை கட்டிக்காக்கவும், ஒன்றுபட்டு போராடவும் நீங்கள்  சொன்னது உணர்ச்சிகரமாகவும் அறி வார்ந்தும் இருந்தது. என்றார் .
"தவறாக எதுவும் பேசிவிடவில்லையே ?" என்றார் ..
"நிச்சயமாக இல்லை " என்று கூறிய திவாரி  "இந்த மதறாசிகளுக்கு ஆங்கில உச்சரிப்பு ஏன் தப்பு தப்பாக வருகிறது என்பது தான் எனக்கு புரிய மாட்டேன் என்கிறது 'என்றார்.
"எது தோழர் ? "
"it is not ஸ்பிளிட் com ! it is  இஸ்பிளிட்  " என்றார் 
இந்தியில் வார்த்தையின் முதல் எழுத்து உயிரெழுத்தில் இருக்க வேண்டும். அதனால் ஸ்பிளிட் என்பதை "இ" சேர்த்து "இஸ்ப்ளிட்" என்பார்கள்.ஸ்கூல் என்பதை இஸ்கூல் என்பார்கள்.

இதனை சாய்ந்து படுத்துக் கொண்டிருந்து கேட்டுக் கொண்டிருந்த பஞ்சாசாபிக்காரரான மன்சண்டா படக் கென்று எழுந்தார். "தோழர்  அருமையாக பேசினிர்கள். திவாரி சொன்னதைனான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் 
அவர் கடைசியாக சொன்னதை தயவு செய்து ஒப்புக்கொள்ளாதீர்கள். !  அது "ஸ்பிளிட்" அல்ல. "இஸ்பிளிட்" அல்ல"
"எது தான் சரி  தோழர்>?"
"சபிளிட்"என்பதுதான் சரியான உச்சரிப்பு என்றார .
பஞ்சாபி" குருமுகி"யில்  "ஸ் "என்ற எழுத்துக்கு பின்னால்  "அ " என்ற உயிரெழுத்தை சேர்த்து "சபிளிட் " என்கிறார்கள்.

இதனைக் கவனித்துக்கொண்டிருந்த மேற்கு வங்க தோழர் " பைத்திய நாத் ! கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டார்.

வாங்க மொழியில் "வ" எழுத்து கிடையாது> அதனால்" விஸ்வநாதன் " பிஸ்வனாதன் ஆகிறான். "வைகாசி" "பைகாசி"  ஆகிறது.வைத்தியநாதன் பாவம் பைத்தியனாதன் ஆனான்.



(இதனை முழுக்க முழுக்க தலைவர்களின் சம்பாஷணையின் போது கேள்விப்பட்டது .)



1 comments:

சிவகுமாரன் said...

ஆமாம் அய்யா. நானும் வியந்து போயிருக்கிறேன் அவர்களின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டு.