Saturday, June 04, 2016







"நீலிமா சுனில்மைத்ரா"வும் 

"முத்துமீனாட்சியும் "......!!!




மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மறைந்த சுனில்மைத்ராவின் மனவி பெயர் "நீலிமா" . ஜனநாயக மாதர்சங்கத்தின் செயல்பாட்டாளராக அப்பொது டெல்லியில் இருந்தார். அந்த வரலாற்று வீரங்கனை விமலா ரணதிவே ,அகல்யா ரங்கனேகர் ஆகியோரோடு இணந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

மாதர்சங்கத்தின் செயல் திறனை மேம்படுத்த தலைமை ஒவ்வொரு மாநிலமாக சுற்றி  வந்தது. தமிழகத்திற்கும் வந்தார்கள். 

மதுரையில் சுதந்திர போராட்ட வீரங்கனை ஜானகி அம்மா ,நாகம்மா ,மற்றும் உறுப்பினர்களை சந்திக்க ஏற்பாடாகி இருந்தது. விமலா,அகல்யா ,நீலிமா ஆகியோர் ஆங்கிலம்,இந்தி ,வங்காளி,மராத்தி, ஆகிய மொழிகளில்  புலமைமிக்கவர்கள்   தமிழ் தெரியாது.( வாழ்க தமிழ் என்று சொல்லியே ஆண்டவர்கள் தமிழை வளர்த்தது தனிக் கதை) .மதுரைக்காரர்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும்.

மொழி பெயர்ப்பாளர் முத்து மீனாட்சியை கட்சி தேர்ந்தெடுத்தது.ஒரே ஒரு நிபந்தனை. அவர்கள் தங்கி இருக்கும் முன்று நாட்களும் அவர்களோடு தங்கி  இருக்கவேண்டும். இது பற்றி முத்து மிணாட்சிகூறூகிறார்:

"பி டி ஆர் பற்றி காஸ்யபன் முலம் கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்தேன். வரலாற்று நாயகன். அவருடைய மனைவியோடு மூன்றுநாள் தங்க - எப்பேர்பட்ட கொடுப்பினை. அவர் தங்கை அகல்யா ! சுனில்  அவர்களீன் மனை வி நீலிமா - யாருக்கு கிடைக்கும் ! என்ன ஆளுமை ! அவர்கள் ஒவ்வொரு செயலும் எனக்கு படிப்பினையாக இருந்தது."

" மதுரை பெண்கள் அரசியலில் எவ்வளவு துல்லியமாக கேள்விகளைக் கேட்கிறார்கள். அதற்கு தலைவர்கள்பொறுமையாக பதில் சொல்வது -எனக்கு இவை புதிய அனுபவங்களாக இருந்தன. ஒய்வு நேரத்தில் அவர்களை மதுரை  நகரத்தை சுற்றிப்பார்க்க அழைத்துச் என்றேன்". 

"மீனாட்சி அம்மன் கொவிலைப் பர்த்தும் சின்னக்குழநதைகள் போல மூவரும் குதூகலித்தார்கள்.சிலைகளை  தொட்டு தொட்டு பார்த்து மகிழ்ந்தார்கள். நீலிமா  என்னை கட்டிப்பிடித்தார். what a fine heritage  என்று கூவினார்."

 "மாலை நாயக்கர் மகாலுக்கு சென்றோம். உலோகமே பயன்படுத்தாத மண்ணால் கட்டப்பட்ட அரணம்னையின் உறுதியையும் பிரும்மாண்டத்தையும் பார்த்த விமலா அவர்கள் பிரமித்து நின்றார் "ஒலி யும் ஒளியும்" நிகழ்ச்சியை பார்த்தோம்.அதில் வந்த சிலப்பதிகாரம் பற்றி சொன்னேன் ' கணவனை இழந்த பெண் ஒருவள் சக்ரவர்த்தி பாண்டியனை எதிர்த்து நின்றதை அவர்கள் அதிசயத்தோடு கேட்டார்கள்". 

'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் நிற்கிறாள் .அவளின் போராட்டத்தை ஒரு கவிஞன் காவியமாக்கி இருக்கிறான். முட்டு மீனாட்டி  தயவு செய்து இந்தக்கதையை இந்தி மொழியில் எனக்கு எழுதி அனுப்பு. இது உலகம் பூராவும் கொண்டுசெல்லப்பட்வேண்டிய செய்தி என்று விமலா என்னை கேட்டுக் கொண்டார் ". .

முடிவில் "என்னால் மறக்க முடியாத அனுபவம். நான் பாக்கியசாலி " என்றார் முத்து மீனாட்சி .

அவர் குரல் உடைந்திருந்தது போல் எனக்கு பட்டது.









0 comments: