Saturday, October 15, 2016


தமிழகத்திற்கு ,

"பெரியார் " கொடுத்த 

"கொடை ".......!!!தமிழ் ,தேசியம் என்று கூறிக்கொண்டு சில குழுக்கள் முக நூலில் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாமல்போய்க்கொண்டு இருக்கிறது. இவர்கள் பெரியார் அவர்களை திட்டுவது என்பது நாகரிக எல்லையை  தாண்டி அருவறுப்படைய செய்கிறது.பெரியார் அவர்கள் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் இவர்களின் எழுத்து விமரிசனமல்ல. அவதூறு.

நூற்ண்டுறாண்டுகளாக பார்ப்பன ஆதிக்கத்திலிருந்த  தமிழ்  சமூகம் கொஞ்சம் நிமிர்ந்தது என்றால் அது பெரியாரால் தான். மராட்டிய நண்பர் ஒருவர் கூறினார்" ஜோதிபா புலாவும்,அம்பேத்காரும் செய்ய முடியாததை பெரியார் செய்தார். பார்ப்பன ஆதிக்கம் முற்றிலும் ஒழிந்து விட்டது என்பதல்ல. அது மட்டுப்படுத்தப்பட்டது. அதற்காக அவர் செய்த ராஜ தந்திரம் வெற்றி பெற்றது. பிராமணரல்லாதவர்களை ஒன்று படுத்தி, அவர்களை போராட செய்வது என்பது சாதாரணமான காரியமல்ல . நீங்கள் அதிர்ஷ்ட சாலிகள் "என்கிறார்.

இதன் காரணமாக பார்ப்பனர்கள் பெற்று வந்த சலுகைகள் தமிழகத்தில் மட்டுப்படுத்தப்பட்டது. பார்ப்பனரல்லாத மக்கள் சில சலுகைகளையும், உரிமைகளையும் பெறறார்கள். நம் கண்முன்னால்நடந்தசமூக  மாற்றங்கள் இவை .  

இதன் அரசியல் லாபத்தை தன தாக்கி கொண்டவர்அறிஞர் அண்ணா ஆவர்கள். அதனை ரொக்கமாக்கிக்கொண்டவர் கருணாநிதி அவர்கள்.

இதில்வெடிக்கை என்ன வென்றால் பெரியாரின் கொள்கைகளை குழிதோண்டிப்  புதைத்து விட்டு தி.மு.க  என்ற கட்ச்சியை ஆரம்பித்து  நட்த்தினார்கள் .  

"கடவுள்  இல்லை ! இல்லவே இல்லை! " என்று தெருத்தெருவாக, கிராமம் கிராமமாக,ஊர் ஊராக  பிராசாராம்  செய்தவர் பெரியார். இது திமுகவின் அரசியலை பாதிக்கும் என்பதால் " ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் " என்று கூறினார் அண்ணாதுரை ,பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கொடூரத்தை சித்தரிக்க "பாம்பையும் ,பார்ப்பனனையும் கண்டால் பாம்பை விடு ! பார்ப்பானை அடி " என்கிறார் பெரியார். நாங்கள் பார்ப்பானரை  எதிர்க்கவில்லை பார்ப்பணியத்தை தான்   எதிர்க்கிறோம் என்று   சமரசம் செய்து கொண்டார் அண்ணாதுரை அவர்கள்.

சென்ற சட்டமன்ற தேர்தலின் பொது கொங்கு வேளாளர் கடசி யிலிருந்து, மண்பாண்ட கலைஞ்ர்கள் வரை ஸ்டாலினுக்கும் , கலைஞருக்கும் துண்டு போட்டு ஆதரவு கூறியதை நாம் பட காடசியாகப்பார்த்தோம். பிராமண ரல்லாதோரின் ஒன்றுபட்ட தன்மையை அழித்தவர்கள் இவர்கள்.

பெரியார் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லைபிராமணரல்லாதோருக்கு கிடைத்த பங்கில் நூறில்  ஓருபங்கு  தலித்துகளுக்கு போகவில்லையே " ஏன் ?

இன்று "போலி பெரியாரிஸ்டுகளின் " பேய் நடனம் தாங்கமுடியவில்லை. எல்லா  இயக்கங்களிலும் முற்போக்கு ,பிற்போக்கு, வலதுசாரி,இடது சாரி என்று ஊடுருவி குழப்பி  வருகிறார்கள்.இவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால் "பார்ப்பன ஆதிக்கம் " என்கிறார்கள்.

கவர்னர்கள் எத்தனைபேர் பார்ப்பனர்கள்,? நீதிபதிகள் எத்தனை பேர் பார்ப்பனர்கள்? துறை வாரியாக மத்திய மாநிலரசுபதவிகளில் உயரத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் எத்தனை பேர் ?என்று கணக்கு கேட்கிறார்கள். 

தமிழக அரசு ஊழியதில்    40000 காலி இடங்கள் உள்ளன, நியமனம் செய்ய அரசுமறுக்கிறது. கருப்பையா என்ற ஊழியர் வழக்கு  போட்டார் தலித்துகளுக்கு பதவி உயர்வு கொடுக்க கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பை அரசு காட்டு கிறது. நியமனம் வேறு. பதவி உயர்வு வேறு. இதில் 24000 இடங்களில் தலித்துகளுக்கானது. அதனை போடுங்கள் என்று நிதி மன்றம்  திர்பளித்தது . அரசு இதுவரை போடவில்லை. 

தலித் தலைவர்கள் வாய் முடி மவுனம் சாதிக்கிறார்கள். ஓட்டப்பிடாரம்  தொகுதியில் நான் எம்.எல்ஏ ஆனால் தலித்துகள் சுகவாழ்வு  காண்பார்கள் என்கிறார் தலைவர். காலையிலும்  மாலையிலும் சான் தொலைக்காகாட்ச்சியில் நான் வந்தால் பொதும்  என்கிறார் இளம் தலித் தலைவர்.

பாவம் ! தோல் திருமாவளவன் தனிக்கட்டையாக போராடி வருகிறார் .முடியவில்லை .

தீண்டாமை ஒழிப்பு முன்னணி நணபர்கள் சிலரை தொடர்பு கொண்டேன்.

தலித்துகளுக்காக அவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக வகுப்புகளை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.கள் "நாங்களும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துகிறோம்.75 பேர் வருவார்கள். அடிதடி,கொலை  என்றால் 120 பேர் வருவார்கள். 90சதம்  பேர் தலித்தல்லாதவர்கள்  .தலித் கள்  நம்மை நம்ப மறுக்கிறார்களோ என்று தோன்றிகிறது. உங்களுக்கென்ன ! ஆர்ப்பாட்டம் முடிந்து நாங்கள் எங்கள்கிராமத்திற்கு செல்லவேண்டும்.அங்கு தமிழக "ஜாட் "களும் ,பிள்ளை,முதலி என்று ஆதிக்க சாதிகளின் தயவில்லாமல் நாங்கள் வாழ முடியாது "என்கிறார்கள்.   

 சமூக நீதி என்பதை social engineering என்கிறர்கள்.

உள்ளே புகுந்து படிக்கும் பொது ஆசசரியங்கள்  தான்  மிஞ்சுகின்றன !!! 

1 comments:

பரிவை சே.குமார் said...

விவரம் அறிந்தேன்...