Sunday, February 19, 2017





"தஞ்சைக்கு  

வாருங்கள் "





தமிகத்தில் "நாடகவியலில் " விற்பன்னரான      தோழர் பிரளயன்  நம்மை எல்லாம் தஞ்சை நாடகவிழாவிற்கு  வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்.

எவ்வளவுதான் விரும்பினாலும் முதுமையும்,இயலாமையும், என்னை பங்கு பெறவிடாமல் தடுக்கவே செய்கிறது.

தமுஎக சங்கத்தின் நாடகப்பணி பற்றி  விளக்கிய பிரளயன் அதன் ஆரம்பப்புள்ளி  கோவையில் நடந்த இரண்டாவது மாநிலமாநாடாக குறிப்பிடுகிறார்.

நாடு சுதந்திரம்பெற்ற பிறகுஇடது சாரிகள் நாடகப்பணி அதற்குமுன்பே துவங்கிவிட்டது.திருச்சி பொன்மலையில்  ரயில்வே தோழி \லாளர்கள் மாநாடு  நடந்தது. அந்த மாநாட்டில் நாடகம் போட்டார்கள். சாகித்ய அகத்தமிவிருது பெற்ற எழுத்தாளர்  டி.செல்வராஜ் எழு திய  "பாட்டு முடியுமுன்னே " என்ற நாடகம் நடத்தப்பட்டது.தற்போது மாநிலங்கள் அவை உறுப்பினராக இருக்கும் கனிமொழி அம்மையாரின் தாயார் தர்மாம்பாள்    இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார்கதாநாயகனாக அன்றைய பிரபல சினிமா நட்சத்திரம் என்.என். கண்ணப்பா நடித்தார். 

இடது சாரி கலைக்குழுக்கள் அப்போதும்  செயல்பட்டுக்கொண்டிருந்தன.

பொள்ளாச்சியில்  கவிஞர்  வேலுசாமி 'செம்மலர்" கலைக்குழுவை நடத்திவந்தார். பௌனார் ஆசிரமத்து சாமியார் வினோபா வின் பூமிதான் இயக்கத்தை விமரிசித்து " தானம் " என்ற புகழ்  பெற்ற  நாடகத்தை நடத்தினார்.

1971ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கடசியின் அகிலஇந்திய மாநாடு மதுரையில் நடந்தது. அதில் கண்டிப்பாக நாடகம் போட வேண்டும் என்று கே.முத்தையா அவர்கள் சொன்னார்கள்.அப்போது உருவானதுதான் "பீப்பிள்ஸ் தியட்டர் " என்ற குழு .

எழுத்தாளர் ப.ரத்தினம் அவர்கள் எழுதிய "நெஞ்சில் ஒரு கனல் " என்ற   நாடகத்தை "காஸ்யபன் " இயக்கினார். அப்போது வங்கதேச விடுதலை போர் நடந்ததால் மாநாடு 1972ம் ஆண்டு ஏப்ரலில் நடந்தது. பீப்பிள்ஸ் தியேட்டர்ஸ் நாடகத்தை நடத்தினார்கள். இதில் காலம்சென்ற மதுரை  மருத்துவர்.ராஜாமணி ஐயா நடித்தார்கள். மற்றோரு முக்கியமான நடிகர் , நமது அன்புத் தோழர் நன்மாறன் அவர்கள். 

இடது சாரி இயக்க கலைஞர்கள்   பற்றி ய குறிப்புகளை தேடி ஆவண ப்படுத்தவேண்டிய தருணம் இது.. தஞ்சை விழா இதனை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் .

தஞ்சை விழா வெற்றிபெற வாழ்த்துக்கள் !!!





2 comments:

ஸ்ரீராம். said...

//பிரபல சினிமா நட்சத்திரம் என்.என். கண்ணப்பா//
ஆனால் அப்படி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதில்லை! எம் கே டி, பி யூ சி, எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹொன்னப்ப பாகவதர் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தஞ்சை விழா சிறக்கட்டும். முன்னரே நான் சொல்லியிருக்கிறேன். அன்பு வேதாச்சலம் தலைவராக இருந்த காலத்தில் என் தந்தையும் இணைந்திருந்தார். கவிஞர் திருவாரூர் மா வரதராஜன், அன்பு வேதாசலம் ஆகியோர் அடிக்கடி எங்கள் இல்லத்துக்கு வந்ததுண்டு.

சரவணன் said...

தற்போது மாநிலங்கள் அவை உறுப்பினராக இருக்கும் கனிமொழி அம்மையாரின் தாயார் தர்மாம்பாள்

கனிமொழியின் தாயார் தர்மாம்பாளா, என்ன கூத்து இது?