Monday, February 20, 2017தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியும் ,

ராவ்,ரெட்டி ,ஆகியோரின்  பங்கும் ....!!!இந்திய சுதந்திர போராட்டத்தில் தெலுங்கானா விவசாயிகள் எழுச்சி காவியத்தன்மை வாய்ந்தது . அப்போது தெலுங்கானா நிஜாம் அரசரின் ஆடசியில் தனி சமஸ்தானமாகஇருந்தது . இந்தியாவோடு சேராமல் தனி சுதந்திர நாடாக இருக்கவே நிஜாம் விரும்பினார் .பிரிட்டிஷ்,அமெரிக்க ஏகாதிபத்தியங்களும்  மறைமுகமாக இதை விரும்பின.

அமெரிக்காவின் கையாளா ன சவூதி அரேபியா நேரடியாகவே நிஜாமை ஆதரித்தது .தெலுங்கானாவில் நடைபெறும் சுதந்திரப்போராட்டத்தை நசுக்க காசிம்  ரஜ்வி தலைமையில் ஒரு கூலிப்படையை அனுப்பி உதவியது.

நிஜாமின் ஆடசி ஜமீன்தாரி முறையில் நடந்து வந்த காலம் அது.கமீன்தார்களுக்கும்,ஜாகிர்தார்களுக்கும், நிலம்  மட்டுமல்ல ,அதில்வாழு ம்மக்களும் சொந்தம் .அந்த விவசாயிகளை அவர்கள் சித்திரவதை செய்து வரிவசூலித்து வந்தனர்.

இதனை எதிர்த்து விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்கட்ச்சியின் தலைமையிலபோராடினார். நிஜாமின் கூலிப்படையை எதிர்க்க அவர்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்க வேண்டியதாயிற்று.

பிரிட்டிஷ் இந்தியாவின் நடுவில் மாட்டிக் கொண்ட விவசாய போராளிகளுக்கு யுத்த தளவாடங்களும், உணவு,உடை ஆகிய உதவிகளும் அப்போதைய மதராஸ் மாகாணத்திலிருந்து செல்ல வேண்டியதாயிற்று.

தெலுங்கானா விவசாயிகளுக்கு அப்போது தலைமை தாங்கியவர்கள் இரண்டு பேர். ஒருவர் பின்னாளில் மார்க்சிஸ்டாகடசியின் பொதுசெயலாளராக  வந்த பி.சுந்தரய்யா.மற்றோருவர்  அவருடைய சீட ரும் பின்னாளில்  இந்திய கம்யூனிஸ்ட் கடசியின் செயலராக வந்தவருமான ch ,ராஜேஸ்வர ராவ்.

தெற்கே சித்தூரில் இருந்து,நெல்லூர்,குண்டூர்,தெனாலி,விஜயவாடா என்று பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லைகள் வழியாக போராளிகளுக்கு உதவிகள் சென்று வந்தன> இந்தப்பகுதியில் உள்ள பள்ளிமாணவர்களிலிருந்து, வாலிபர்கள் மாதர்கள், என்று அத்துணை பெரும் இந்த வேள்வியில் ஈடுபட்டனர். அதில் நெல்லுரை சேர்ந்த  ஒருமாணவன் தான் ரெட்டி .

விவசாயிகள் ஜமீன்தார்களை ஹைதிராபாத் நோக்கி விரட்டி அடித்தனர்ஜமின் நிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்தனர் . மூன்று ஆண்டுகள் தெலுங்கானாவில் பெரும்பகுதி விடுதலைப்பெற்று கம்யூனிஸ்ட்கதிசயின் தலைமையின் நிர்வாகம் நடந்தது.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம்பெற்ற பொது இந்த விவசாயிகள்  மகிழ் ச்சிக்கு  அளவே இல்லை. சுதந்திர இந்தோயாவோடு சேர்ந்து விட துடித்தனர் .. 

ஆனால் நேருவும், ராஜாகோபாலாசசாரியும் செய்த துரோகத்தின் காரணமாக கர்னல் சௌத்திரியின் தலைமையில் வந்த இந்திய ராணுவம் விவசாயிகளை எதிர்த்து அவர்கள் நிலங்களை பிடுங்கி மீண்டும் ஜமீன்களிடம் ஒப்படைத்தது. தெ லுங்கானாவிலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் இருந்த கம்யூனிஸ்டுகள் நர வேட்டை யாடப்பட்டு விவசாயிகளின் எழுச்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

நெல்லூரில் தங்கமுடியாத சிறுவன் ரெட்டி சென்னை வந்தான்> அங்கு தன படிப்பை தொடர்ந்தான். மருத்துவ கல்லூரியில் இடம்கிடைத்தது. இந்தியாவிண்புகழ் பெற்ற டாக்ட்டரானான். மருத்துவத்துறையில்முதன் முதலாக கார்ப்பரேட் முறையை கொண்டுவந்து பிரும்மாண்டமான மருத்துவ சாம்ராஜ்யத்தை உருவாக்கினான்.

அதன் பெயர் தான் "அப்பல்லோ ஆச்பிடல்ஸ் ".

அந்த நெல்லூர் சிறுவன்தான் பிரதாப் c ரெட்டி .

மாற்றோரு தலைவரான ch ராஜேஸ்வர ராவுக்கு நான்கு தம்பிகள். அவருடைய கடைசி தம்பி ஹைதிராபாத்தில்படித்து சட்டவல்லுநரானான. அவனும் அரசியலுக்கு வந்தான் . ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கில்  சேர்ந்தான் .பாஜகவின் முன்னணித்தலைவர்களில் ஓருவராக ஆகி, இன்று தமிழகத்தின்  கவர்னராக இருக்கும்  வித்யாசாகர் ராவ்.தான் அவர்.

வரலாறு புரட்டிப்போடும் . 

அது உண்மையும்கூட !!!      0 comments: