Sunday, July 01, 2018

த .மு.எ .க சங்கத்தின்
14 வது  மாநாட்டில் ...!!!





தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் பௌதிக ஆளுமையை சித்தரிக்கும் நடிகர்கள் உண்டு ! அதன் உணர்சசிகளை வெளிப்படுத்தி நம்மை பிரமிக்க சேய்யும் நடிகர்களும் உண்டு.
அந்த பாத்திரத்தன் ஆத்மாவேதனையை சித்தரித்து வெற்றி கண்டவர் மறைந்த நடிகர் ரகுவரன் ஆவார்கள். பயணசிட்டு வாங்காமல் ரயிலில் வந்து தலைவருக்கு வரவேற்பு கொடுக்கும் கும்பலோடு சேர்ந்து வெளியேறுமவருடைய முதல் படமான " ஏழாவது மனிதனி"ல் பார்த்தபோது தமிழ் திரைக்கு ஒரு"வசமான கை " கிடைத்ததாக மகிழ் ந்தேன் .
"ஆஹா " என்றபடம் .இளம் வயதில் காதலித்த காதலி யோடு திருமணம் நடக்கவில்லை. வேறொரு திருமண ம் செய்து கொண்டு வாழும்போது நோய்வாயப்பட்டு ,காதலி  இறக்கும் தருவாயில்  வருகிறாள்.மனைவி-காதலி இருவரையும் கைவிட முடியாமல் தவிக்கும்மனிதனின் ஆத்ம வேதனையை ரகுவரன் அற்புதமாக சித்ததரித்திருப்பார்.
எழுத்தாளர் சங்க மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது> அப்போது ஏ வி எம்  தயாரித்த படம்- பெயர் - நினவில் இல்லை - இளை ஞன் குடியால் கெட்டு திருந்தி  மிண்டும்குடித்து அழிந்து போவான். ரகுவரன் இளைஞனாக நடிப்பார்> அற்புதமாக இருக்கும் .
மிகசிறந்த அந்தநடிகர் பற்றி பல செய்திகள் உண்டு> அவரைப் புரிந்து கொண்டு அவரோடு தன வாழ்க்கையை இணைக்க தனித்த எண்ணம் வேண்டும். தோழர் ரோகினி அவர்களுக்கு அதற்கான "மனவளம் " இருந்ததால் அவர் வாழ்க்கை இனித்தது.
ரகுவரன் -ரோகிணி தாம்பத்தியருக்கு ரிஷி என்று மகன் இருக்கிறான். வாழ்க்கையில் சகல வெற்றிகளையும் அவன் பெற நானும் முத்து மீனாட் சியும் வாழ்த்துகிறோம்.
தோழர் ரோஹிணி அவர்களை மாநாட்டில் சநதித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
வாழ்த்துக்கள் ரோகினி அவர்களே !!!

0 comments: