Sunday, July 08, 2018





த .மு.எ.க.சங்கத்தின் 

14வது மாநாட்டில் ...!!!m 





1989ம் ஆன்டுஜனவரி மாதம் முதல் தேதி ! வேலை முடிந்து தீக்கதிரலுவலகத்திலிருந்து புறப்படுமுன்,யு.என் ஐ பிரிண்டரை பார்ப்பது வழக்கம் . "jana naattya manch theatre person attacked  in Gaziabad " என்று வந்திருந்தது. இது மார்க்சிஸ்ட் கடசியின் நாடகக் குழு.

வீட்டிற்கு வந்து விட்டேன்.இரவு ஆங்கில செய்தியில் சசிகுமார் "the cpi (m )activist Safdar hashmi was attacked " என்று வாசித்தார். 

டெல்லியின் புறநகர் பகுதியான காஜியாபாத்தில் தொழிலாளர்களபோராட்டம்நடக்கிறது.அவர்களுக்கு ஆதரவாக சன நாட்டிய மான்சி என்ற விதி நாடக  அமைப்பு "ஹால்ல போல் " என்ற நாடகத்த்தை நடத்தியுள்ளது .ரவுடிகள் நாடகாக்காரர்களை  தாக்கியுள்ளனர்> இதில் சப் தார் ஹாஷ்மி படுகாயம் அடைய மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார் . சிகிசை அளித்தும் பலனில்லாமல் சபித்தார் ஹாஷ்மி 2ம் தேதி இறந்தார்  மூன்றாம் தேதி அடக்கம் செய்த பிறகு சப்தரின் மனைவி மாலாஸ்ரீ எந்த இடத்தில் நாடகம் போட தடை செய்தார்களோ அதே இடத்தில் ஹல்லாபோல் நாடாகத்தை நடத்தி காட்டினார்.ஹல்லோ போல் என்றால் உறக்கப்போச்சு என்று அர்த்தம் .

ஜனவரி 17ம் தேதி சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமாகியது> அந்த விழாவின் வர்ணனையாளராக ஷப்னா ஹாஸ்மி இருந்தார்> வீழா  ஆரம்பமாகும் பொது ஷப்னா "ஒரு நடிகனை அடித்தே கொன்று விட்டவர்கள் நடத்தும் இந்தவிழாவில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை என்று அறிவித்து அரங்கத்தையே கதிகலங்க வைத்தார்> சர்வதேச பத்திரிக்கையாளர்மற்றும் ஊடகங்கள் முன் அரசு அமபலப்பட்டு திணறியது>

சப் தார் ஏப்ரல் 12ம் தேதி பிறந்தவர்> 1989ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதியை அவர்நினைவாக டெல்லியில் கொண்டாடினார்கள்> இந்தியாமுழுவதிலிமிருந்த ஆர்வலர்கலகலந்து கொண்டனர்> மராட்டியத்திலிருந்து விஜய்,டெல்லியில் வைவான் சுந்தரம், எம்.எஸ்.சத்யு, ஹபீபிதந்விர் என்று கலந்து கொண்டனர்> தமிழ க்கத்திலிருந்து நான் கலந்து கொண்டேன்.

மண்டி ஹவுஸிலிருந்து பிரும்மாண்டமான ஊர்வலம் புறப்பட்டது.உள்துறை அமைசர் பூட்டா சிங்  வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்தருந்தார்கள் .அவர் விட்டு வாசலில் கயிருக்கட்டி எங்களை சுற்றி வளைத்து விட்டார்கள் .அங்கேயே அமர்ந்து நாடகம் போட்டோம். ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் .பார்வையாளர்களிடையே அமர்ந்திருந்தார்கள் ஷபானா ஹஸ்மியும் ,ஜாவேத் அக்தரும்.

சபித்தார்,ஜஹ்பனா,ஜாவேத் ஆகியோர் காஷ்மீரி கேட்டில் வசிப்பவர்களை. கம்யூனிஸ்ட் குடும்பம்.

தமுஎகசங்கத்தின் 14வதுமாநாட்டை  துவக்கி வைக்க ஜாவேத் வந்திருந்தார். முதல்நாள் கலைஇரவின் பொது அருகிலமர்ந்திருந்த நான் சப்தர் தார் நினைவு தினம் பற்றி சொன்னேன். ஜாவேத் உணர்சிவயப்பட்டார் .நீங்கள் முன்னாலேயே வந்திருக்கக்கூடாதா >வாருங்கள் நாம் அறையில் அமர்ந்துபேசலாம்> என்றார். எனது முதுமையையும் இயலாமையாயியும் எடுத்து சொன்னேன்.நாளை  வருவீர்களா? என்றுகேட்டார்> கண்டிப்பாக என்றேன்.

மறுநாள் அவருடைய துவக்க உரையை  கேட்டேன்.அற்புதம் 


"முற்போக்காளர்களா எல்லாரும் கம்யூனிஸ்ட் அல்ல ! ஆனால் கம்யுனிஸ்டுகள் முற்போக்காளர்களாக இருக்கவேண்டும்" என்றார் அவர் கூறியபோது கையொலி  எழுந்தது.

அவர் பேசி முடித்ததும் SATANDING OVATION அரங்கத்தில் நடந்தது.

14வது மாநாடு துவங்கியது கம்பிரமாக !!!













0 comments: