Thursday, April 22, 2010

charminar...

1958ம் ஆண்டு கோடையில் நான் முதன்முதலாக சார்மினாரைப் பர்த்தேன்.பிரும்மாண்டமான நாங்குதூண்களின் மெல் அமர்ந்துள்ள மசூதியாகும் அது. 1591ம் ஆண்டு முகம்மது ஷாஹி என்ற அரசர் கட்டிய அமைப்பாகும் அது.கீழ்தளத்தில் உள்ளதூண்களை ஒட்டி படிக்கட்டுகள் உள்ளன.அதன்மேலெதான் மசூதி இருக்கிறது.ஐம்பது பேர் அமரலாம்வெளியில் ஐம்பது பேரமரலாம். . ஹைதிரபாத்தில் "பிளெக்" நொயின் பதிப்பால் மக்கள் எலிக்ளைப்போல் செத்துமடினந்தனர்.அதனை எதிர்த் து ஷாஹி பணியற்றி வெற்றிபெற்றார்.அந்தநினைவைப்போற்று ம் வகையில்தான் நினைவுச்சின்னம் எழுப்பப்ப்ட்.டது. 1962ம் ஆண்டு நான் மதுரை வந்துவிட்டேன். அதன் பிறகு 1996ம் ஆண்டு என் மனைவியுடன் ஹைதிராபாத் சென்றேன்.சுந்தரய்யா கேந்திரம்,கொல்கொண்டா,சாலார் ஜங்,என்று என் மனைவியிடம் பெருமையாக காட்டினேன். பின்னர்சார்மினாருக்கும் சென்றேன்.அங்கு நான் கண்ட காட்சி என்னை குலைனநடுங்கவைத்தது.அந்த பிரும்மண்டமான கிழக்குத்தூணை ஒட்டி காளியம்மன் கோவில் கட்டப்பட்டிருந்தது. அங்க்கு பூஜை நட்ந்துகொண்டிருந்தது.அம்மா,அக்கா கெட்டவார்த்தைகளாக கொட்டித்தீர்த்துவிட்டென்.சுற்றி இருந்தவர்கள் என்னை ஆசுவாசப்ப்டுதினர் .ஹைதிரபத்தில் தற்பொது அநுமார் ஜெயந்தி நடக்கிற து.அதொடு கலகமும் நடக்கிறது.ஊரடங்கு உத்திரவு பொடப்பட்டுள்ளது.....என்ன செய்ய? மக்கா என்னசெய்ய?

9 comments:

jagannath said...

Dear Com.Kashyapan
I visited your blogspot just now. The way you have presented your reminiscences of Hyderabad and Charminar is really nice.As I have moved with you for the past 42 years, I could imagine as to how you would have reacted on seeing a forced structure on Charminar done with a malicious intent. - EM Joseph
- EM Joseph

kashyapan said...

Thank u Joseph,My first blog posting received by u and u r the very first to send comment.At the same time I like ur KUSUMBU in immagining my reaction to the structure Realy I enjoyed it....kashyapan.

charliecharlie2007 said...

அருமைத் தோழர் காஷ்யபன்,
வருக வருக! இளம் தோழர்கள் சார்பில் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்.
உங்களைப் போன்ற மூத்த தோழர்கள் இத்தனை நாள் சும்மா இருந்தீர்களா என நான் கேட்க மாட்டேன், ஏனெனில் நீங்கள் எங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பதும் கருத்துக் கூறுவதுமாக இருப்பது நான் அறிந்ததே. மூத்தவர்களின் தோள்களில் நின்றுதான் பிள்ளைகள் உலகத்தைப் பார்க்கின்றார்கள், 'உயரத்தையும்' எட்டுகின்றார்கள் என்பது உண்மை. எனவே உங்களை வரவேற்பதில் எனக்கு மகிழ்ச்சி.
உங்களது முதல் பதிவே அற்புதம். மனிதநேயமும் அன்பும் சுரக்கின்ற இடத்தில்தான் கோபம் குடியிருக்கும். உங்கள் கோபம் சத்திய ஆவேசம். 'தேன் கலந்த தண்ணீர்' ஞாபகம் வருகின்றது... நீங்கள் தொலைபேசியில் கேட்டுக்கொண்டபடி ஆனது ஆலோசனை: கிரிக்கெட்டும் ஐப்பிஎல்லும்... இது பற்றி உங்கள் அடுத்த பதிவை எழுதுங்களேன்?
இக்பால்

kashyapan said...

இக்பால் அவர்களுக்கு நன்றி.ஐ.பி.எல் பற்றி தகவல் செகரித்து வருகிறேன்.இவர்கள் விசாரணை மூலம் எதுவும் நடக்கப்போவதில்லை.சுவிஸ் பணம் வருவதரற்கா ன பாதையென்றும் கருதப்படுகிறது.இ.பிஎல் காட்சியும் களமும் தினமும் மாறிக்கொண்டு வருகிறது.எழுதுவே.ன்...காஸ்யபன்.

venu's pathivukal said...

அன்புத் தோழர் காஷ்யபன்

உங்கள் குரல் அளவிற்கு உங்கள் முகம் எனக்குத் தெளிவாக நினைவில் இல்லை. ஏனென்றால் குரல் அன்றாடம் கேட்பது. முகம் அத்தனை அருகில் அத்தனை முறை பார்த்ததுமில்லை. டிசம்பர் 2008 த மு எ ச மாநாட்டின்போது அறிமுகம் செய்து கொண்டபோது பார்த்தது தான். ஆனால் முன்னூறு முறையாவது தொலைபேசியில் பேசி இருப்போம்.
இருக்கட்டும். வலைப்பூவில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அதுவும், உலக புத்தக தினத்தை ஒட்டி...நல்லது கூடுதல் மகிழ்ச்சி. கூடுதல் வாழ்த்துக்கள்.
வரலாற்றில் சுயநலக் கை வைக்கப்படும் போதெல்லாம் பாழ்படுவது வரலாறு மட்டுமல்ல, தலைமுறைகள்...
உண்மையாக ஆன்மீகம் பேசுபவர்கள் பேதம் கடந்தவர்களாக இருக்க வேண்டும். உண்மையாக இறையுணர்வைப் பேசுபவர்கள் எல்லை கடந்தவர்களாக இருக்க வேண்டும். துவேஷம் விதிக்கப்படும் இடத்தில் கடவுளர்கள் இருந்தாலும் கூடத் தற்கொலை செய்து கொள்வார்கள். அவர்களை வைத்துக் கொண்டு மனிதர்களைப் பிரிப்பதை உண்மையான கடவுள் கொண்டாடிகள் ஏற்க மாட்டார்கள். மனித இரத்தம் குடிப்பவர்கள் மனிதர்களையே மதிக்காதவர்கள், சொந்த மதத்தில் இருப்பவர்களை உட்பட...
சார்மினார் பதிவு சுருக்கமான சுருக்....

தொடரட்டும் உங்கள் நடை...கடந்த காலத்தின் பதிவுகளே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையாவது பாதுகாக்கும் உரத்தையும், வெளிச்சத்தையும் தரும்...

எஸ் வி வேணுகோபாலன்

kashyapan said...

நன்றி.தோழர் எஸ்.வி.வி.

vimalavidya said...

My respect and vanakkam to you...We-friends- felt very happy about your blog...we all welcome you...I already send you many photos of you..you can use one of the best/bright photo in the blog..And in your "profile area" there are many spelling mistakes as well as article.Since this is the first article you have to learn TAMIL TYPING also..It is naturally difficult at beginning stage..
I felt more happy to see the blog..I am expecting more and more of your past experiences and contemporary personalities...we wish you BOTH very good health and happiness...you are not alone there..we are always with you..vimalavidya@gmail.com

kashyapan said...

தோழர் விமலாவிற்கு,மிகுந்த மகிழ்ச்சி.ஆங்கில,மற்றூம் தமிழ் தட்டச்சு தெரியாதவன்.என்ன செய்ய? முட்டி மோதி சமளிக்கிறேன்.....காஸ்யபன்.

மாதவராஜ் said...

ஆஹா... ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது தோழர். நெருக்கமாக பார்ப்பது போலவும் உணர்கிறேன். இனி அடிக்கடி சந்திக்கலாம்.

தமிழிஸ், தமிழ்மணம் ஆகியவற்றில் பதிவுகளை இணையுங்கள். இன்னும் பலரிடம் தங்கள் சிந்தனைகளும், கருத்துக்களும் செல்லுமே!

settings சென்று word verificationஐ எடுத்து விடுங்கள். அது பின்னூட்டமிடுகிறவர்களுக்கு ஒரு தொந்தரவு.