Wednesday, April 28, 2010

they were...2

அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.பனிரெண்டாம் வகுப்பில் அவருடையமகள் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். நண்பருடைய தந்தை தமிழகத்தில் மரியாதைக்குரிய பெரியவர்.என் நண்பரின் மகளுக்கு அறிவியல் பட்டப்படிப்பில் கணக்கினை சிறப்புப்பாடமாக எடுத்துக்கொள்ள விருப்பம்.இரண்டு கல்லூரிகளிலிருந்து இடம்கொடுத்தார்கள். நண்பருக்கு மகளை நாங்களிருந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள பிரபலமான கல்லூரியில் சேர்க்க விருப்பம்.நான் இருக்கும் சாந்தி நகரில் அந்தகல்லூரி பேராசிரியை ஒருவர் குடியிருந்தார்.என் மனைவிக்கு அவரை பழக்கம் உண்டு.நண்பர் என்னிடம் அந்தகுறிப்பிட்ட பேரசிரியை மூலம் இடம் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்."ஐயா உங்கள் தந்தை பெயரைச்சொன்னாலே கிடைக்குமே" என்றேன்.அவர் அதனை விரும்பவில்லை. என் மனைவி மூலம்பேரசிரியரை அணுகினேன். "என்னங்க! அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி யாமே..அவர் கூட சொல்லவெண்டாம். அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி என்றுநீங்கள் யாரா வது நிர்வாகத்திடம் சொன்னாலே போதும்,இடம் கிடத்துவிடும்"என்று பேரசிரியர்சொன்னதாக.கூறினார்.நிர்வாக்த்திற்கு போன் செய்யலாமா என்று யோசித்தேன் .ஏம்.பி ஏன்ன சொல்வாரோ என்ற பயமும் இருந்தது. நான் பணியாற்றும் தீக்கதிர் பத்திரிக்கையின் பொதுமேலாளராக் இருந்தவர் தோழர் அப்துல் வஹாப்.நாங்கள் "அத்தா" என்று அன்போடு கூப்பிடும் அவர் சுத்ந்திரபோராட்டவீரர்.பிரிட்டிஷ் விமானப்ப்டையில் சேர்ந்து கட்சிக்கிளையை உருவாக்கினவர்.அவர் மூலம் எம்.பியை அணுகிடலாமென்று நிணைத்து அவரை அணுகினேன்."பார்க்கலாம்.நீ ஏதாவது உறூதி கொடுத்திருக்கிறாயா? " என்று என்னை கேட்டார்நான் இல்லை என்று தலையாட்டினேன்.இரண்டு நாள் கழித்து அவரிடம் போய் கேட்டேன்."நல்லகாலம் தோழர் எம்.பி என்ன.சொன்னார் தெரியுமா?ஏன் அத்தா! என் பேத்திக்கு காலேஜில சீட்டு வாங்கத்தான் கட்சி என்னை எம்.பி ஆக்கியிருக்குன்னு நினைக்கேளா? என் று கேட்டதக சொன்னார்.அந்த எம்'பி, தமிழர்களுக்கு தமிழில் தந்தியடிக்கும் உரிமையைப்பெற்றுத்தந்த ஏ. நல்லசிவன் அவர்கள்தான்.

9 comments:

மாதவராஜ் said...

இப்படியான எளிமையும், அர்ப்பனிப்பும் மிக்க மனிதர்களை தொடர்ந்து அடையாளம் காட்ட வேண்டிய அவசியமிருக்கிரது தோழர். பகிர்வுக்கு நன்றி.

veligalukkuappaal said...

நல்லசிவன் பற்றி சொல்லும்போது பலரும் நினைவில் வந்து போகின்றார்கள்... அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து உயிரைவிட்ட மதுரை எம்.பி.மோகன் நினைவுக்கு வருகின்றார்... ஒரு கலெக்டர் மீது புகார் சொல்லப்பட, அது குறித்து விசாரிக்க நேரிலேயே அந்த கலெக்டர் வீட்டுக்கு சென்று பார்வையாலேயே அவரது நேர்மையை அளந்து சென்ற காமராஜ் நினைவுக்கு வருகின்றார்... முதலமைச்சர்கள் தேடி வந்து ஒரு நல்ல வீடு தர முன்வந்த போதும் தாம்பரத்தில் ஒரு குடிசையில் வாழ்ந்து மறைந்த ஜீவானந்தம் நினைவுக்கு வருகின்றார். கோடீசுவரர் வீட்டில் பிறந்து பார்-அட்-லா படித்து ஒரு எம்.பியாக இருந்தும் கம்யூனிஸ்டாக வாழ்ந்து சென்னை பொதுமருத்துவமனையில் தரையில் பாயில் படுத்து சிகிச்சை பெற்று உயிர் நீத்த கே.ட்டி.கே. தங்கமணி நினைவுக்கு வருகின்றார்.... என்ன செய்ய! காந்தின்னு பேர் வச்சுட்டா எல்லாரும் தண்டிக்கு போய்டுவாங்களா? பஞ்சாப்புல பொறந்துட்டதாலேயே எல்லாரும் பகத்சிங்கா மாறிடுவாங்களா? புள்ளக்கி ஸ்டாலின்னு பேர் வச்சுட்டா மட்டுமே புரட்சிக்காரனா வந்துடுவானா என்ன? (அப்பா முதலமைச்சரா இருப்பதால் மட்டுமே) பார்லிமென்ட் கூட்டத்துக்கு வந்தே தீரணும்னு மத்தியமந்திரிக்கு தலை எழுத்தா என்ன?
இக்பால்

veligalukkuappaal said...

தோழர் மாதவராஜ் உங்கள் பூத்தளத்தை மேலும் சிறப்பாக அணுகும் வகையில் சீர்செய்தும், அழகும் வனப்பும் மிளிரும் வகையிலும் மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்தீர்கள். உண்மையில் மிக அழகு. மாதவுக்கு நன்றி, பாராட்டுக்கள்.
இக்பால்

vimalavidya said...

இப்படியான எளிமையும், அர்ப்பனிப்பும் மிக்க மனிதர்களை தொடர்ந்து அடையாளம் காட்ட வேண்டிய அவசியமிருக்கிரது..No more words to say..

vimalavidya said...

இப்படியான எளிமையும், அர்ப்பனிப்பும் மிக்க மனிதர்களை தொடர்ந்து அடையாளம் காட்ட வேண்டிய அவசியமிருக்கிரது

vimalavidya said...

இப்படியான எளிமையும், அர்ப்பனிப்பும் மிக்க மனிதர்களை தொடர்ந்து அடையாளம் காட்ட வேண்டிய அவசியமிருக்கிரது

ராம்ஜி_யாஹூ said...

படிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது என்னவோ உண்மைதான். ஆனால் இப்படிப் பட்ட தலைவர்கள் ஒரு சில எம் எல் எ, எம் பி இடங்களுக்காக, போயஸ் கார்டனில் அம்மா முன்பு கூனி குறுகி பவ்யமாக நிற்பதை பார்க்கும் போது தான் பரிதாபமாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக டி ராஜா , ஸ்டாலின் மும்பும் அழகிரி முன்பும் கூழை கும்பிடு போட்டதெல்லாம் மறக்க வில்லை இன்றும் எமக்கு.

kashyapan said...

நண்பரே!மாநிலங்கள் அவை உறுப்பினர் டி.ரஜா அவர்களுக்கு சொத்து என்று எதுவும் கிடையாது.இத்தனை ஆண்டூகளாக கட்சி கொடுத்துவந்த 4500ரூ மாத அலவன்சில்தான் வண்டியோடிக்கொண்டிருந்தது.அவர் தேர்தலில் நின்றால் நிச்சயமாக நீங்கள் வாக்களிக்க மாட்டீர்கள்.இவர் ஒத்தையாள் போய் என்ன செய்துவிட முடியும் என்று சல்ஜாப்பு சொல்வீர்கள்.1952மாண்டு முதல் தேர்தலில் மெட்றாஸ் மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. உலகம் போற்றும் உத்தமர் ராஜாஜி மாணிக்கவேலர் காலிலும்,படையாச்சி காலிலும் விழுந்து ஆட்சிகட்டிலில் ஏறினார்.நேருவும்,ராஜேந்திர பிரசாத்தும்,பத்திரிகைகளும் அவரை சாணக்கியர் என்று புகழ்ந்தனர்.....வயத்தெரிச்சலை கிள்ப்பாதயும் ஐயா!...காஸ்யபன்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தொடர்ந்து எளிமையும்..அர்ப்பணிப்பும் உள்ள மக்களை...மனிதரில் சிறந்த அந்த மாணிக்கங்களை அடையாளம் காட்டுங்கள்.... நம்மில் யாராவது ஒருவர் அவர்களை மாதிரி உருவாக மாட்டார்களா என்ன?