Saturday, April 24, 2010

they were........

அவர்கள். சமீபத்தில் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்ட தகவல் இது. இந்தியா சுதந்திரமடையும்பொது குஜராத் மாநிலம் உருவகவில்லை.பம்பாய் மகாணத்தில் தான் இருந்தது. அப்போது அந்த மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் மொரார்ஜி தெசாய்.அவ ருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகன்,ஒருமகள். மகள் மருத்துவம் படித்தாள். இறுதி ஆண்டில் ஒரு தேர்வில் தேர்ச்சியடையவில்லை.மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியுமடைந்தாள்.தந்தை மொரர்ஜியிடம் சென்று முறையிட்டாள்.தன்னுடைய தாளை மறு மதிப்பீட்டுக்கு அனுப்பும்படி கெட்டுக்கொண்டாள்.மமொரர்ஜி"மகளே நீ தேர்ச்சியடையாததால் நான் மகிழ்ச்சி யகத்தான் இருக்கிறேன்.நீ படித்து வெற்றி அடைந்தாலும் என்னைத்தான் பழிசொல்வார்கள்.இப்போது மறுமதிப்பீடு என்றால் நான் மதிக்கும் நேர்மை தவறியவனாக ஆகிவிடுவேன்.அடுத்தாஆண்டு எழுதிக்கொள்ளலாம்" என்று கூறிவிட்டார்......................
மகள் மனமுடைந்து விட்டாள். தலையில் மண்ணெண்ணையை ஊற் றி நெருப்பை வைத்து தற்கொலை செய்து கொண்டாள். "இந்த சோகம்தான் என்னுடைய நேர்மைக்கு கிடைத்த பரிசு என்றால் அதனையும் ஏற்றுக்கொள்கிறேன்"என்றார் மொரர் ஜி தேசாய்.

8 comments:

மாதவராஜ் said...

அரியதொரு வரலாற்றுச் செய்தி. அரியதொரு நேர்மை. தொடருங்கள் எங்கள் தோழரே!

ச. வீரமணி: said...

அன்புத் தோழர் காஷ்யபன் அவர்களுக்கு
உங்கள் அன்புத் தோழன் ச. வீரமணி.
உங்கள் இடுகையைக் கண்டேன்
இனிய அதிர்ச்சி கொண்டேன்.
நாள்தோறும் எழுதுங்கள்.
உங்கள் செறிந்த அனுபவங்களை இடுகையில் பதிவு செய்யுங்கள்.
உலகம் முழுதும் உள்ள இடதுசாரி இயக்கத் தோழர்களுக்கு
அவை பயன்படட்டும்.
இடுகை இடுவது தொடர்பாக ஏதேனும் ஐயமிருப்பின் எழுதுங்கள்.
எனக்குத் தெரிந்ததைப் பரிமாறிக் கொள்வோம்.
இயலுமாயின் என் இடுகையையும் கண்டு
தங்கள் விமர்சனங்களைப் படையுங்கள்.
என் இடுகை
www.illakkia.blogspot.com
www.youtube.com/veeramani1107
www.scribd.com/veeramani1107
தங்கள் தோழன்
ச.வீரமணி

Anonymous said...

நிமிசத்துக்கொருதரம் எட்டிப்பார்க்கிறது.வலைப்பக்கம் திறந்து ஒரு பக்கம் போவதற்குள் அலைஅயடித்த மாதிரி அடுத்த கட். இரண்டு நாளா பிடிக்க முடியல.இதோ வந்துவிட்டேன்.இது மிக அரிய ரோல்மாடல் சம்பவம்.ரெண்டு சல்யூட்.ஒண்ணு ப்ளைன் இன்னொன்னு ரெட்சல்யூட். தொடர்ந்து எழுதுங்கள் தோழரே.

தங்கவேல் said...

தவறாக தாங்கள் நினைத்துக் கொள்ளவேண்டாம். இந்த நிகழ்ச்சியைப் பற்றி நான் சில வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்ட போதே மொராஜி தேசாய் மேல் எனக்குக் கோபம் வந்தது. இதெல்லாம் வரட்டுப் பிடிவாதம். உண்மையிலேயே அவரது மகள் மொராஜியின் இச்செயலால் தற்கொலை செய்துகொண்டிருப்பார்களேயானால் அதற்கு முழுக்க முழுக்க அவர்தான் பொறுப்பு. தனது நேர்மையை நிருபிக்க ஒரு உயிரை பலியிடுதல் எந்த விதத்தில் ஞாயம்.

ஹரிஹரன் said...

வீரமணி அவர்கள் கூறியது போல உங்கள் அனுபத்திலிருந்து வலை அன்பர்களுக்கு மறைக்கப்பட்ட செய்திகளையும் நிறைய சொல்லுங்கள். நன்றி

sivakumaran said...

அதிர்ச்சியான் தகவல்.
சிறுவயதில் மூத்திரம் குடிக்கி மொரார்ஜி என்று கிண்டல் செய்திருக்கிறேன்.
வெட்கமாக இருக்கிறது.

கனாக்காதலன் said...

மொரார்ஜி தேசாய் மிக நேர்மையானவர் மட்டுமல்ல மிக மிக நன்னம்பிக்கை கொண்டவர்.
அவர் குறித்த எனது பதிவு :http://kanakkadalan.blogspot.com/2010/12/blog-post.html#comments

John Chelladurai said...

aiya vanakkam.
morarjee Desai patriya thahaval nehizchchiyaaha irundhathu. mikka nanRi.

I could not find your you tube interview. Is on youtube right url?