திவாலாகிப்போன,திவாலாகிக்கொண்டிருக்கும் அமெரிக்க இன்சூரன்சு கம்பெனிகள் இந்தியாவை
இராயாக்கிக்கொள்ள விரும்பின. அப்போதய அதிபர் கிளிண்டனை அணுகின.
"வாஜ்பாயும், மன்மோகனும் சரிங்கராங்கய்யா!.அங்கவுள்ள தொழிற்சங்கம் எதுக்கிது.அவங்களாலையும்சரி,நம்மளாலையும் சரி ஒண்ணும் செய்ய முடியவில்லை"என்றார் கிளிண்டன்.அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கம் தான் அது.இந்திய மத்தியதர மக்களின் துருவ
நட்சத்திரம் தானந்த சங்கம்.அந்த சங்கத்தின் அணுக்கத்தோண்டனாக செயல்படும் வாய்ப்பு எனக்குக்
கிடைத்த வரமாகக்கருதுகிறேன்.
சுனில் மைத்திரா,சரோஜ் சவுத்திரி,என்,எம்.சுந்தரம்,போஸ்,முகுல் முஸ்தவி,பிரத்யோக் நாக், எப்பேரற்பட்ட தலைவர்கள்!....அவர்களோடு பழக,பேச,உண்ண, வாய்ப்பு கிடைப்பது என்பது.லேசான தல்ல. சரோஜ் பல முறை மதுரை வந்திருக்கிறார்.ஒருமுறை அவர் வந்துள்ளபோது அவரைக் கவனித்துக்கொள்ளும்பொறுப்பு சங்கத்தால் எனக்கு அளிக்கப்பட்டது.மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தான்விடுதி.மதிய உண்விற்காக வெளியில் வந்தோம்.பிச்சைக்காரர்கள் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களிடமிருந்து மீண்டு டவுண் ஹால் ரோடு திரும்பினொம்.ஒரு கிழவி எங்களை விரட்ட்க்கொண்டே வந்தார்.நாங்கள் தாஜ் உணவு விடுதிக்குள் நுழைந்தோம்.உணவு அருந்தி வேளியே வந்தபொதும் அவர் நின்று கொண்டிருந்தார்.சரோ நஜை நெருங்கினார்.எனக்கு கோபம் வந்து விட்டது."ஏ!கிழவி!சனியனே"என்று கையை ஓஙகினேன்.தெருவில் எல்லாரும் திரும்பினார்கள்,சரோஜும் திரும்பினார்.
அமைதியாக ஜிப்பாவிர்க்குள் கையைவிட்டுத்துழாவினார்.ஒரு ரூபாய் நாணயத்தை
எடுத்து கிழவியிடம் கொடுத்தார்.மெதுவாக என் தோள்மீது கைபோட்டு"it is not her mistake,comrade" என்றார்
ஆம்! அவரைப் பிச்சை எடுக்கவைத்த நானும்,நீங்களும்,அவனும், அவர்களும்தான் தவறிழைத்த
ஆக்வர்கள் என்பதை இதைவிட மென்மையாக மேன்மையாக எவரால் சொல்லமுடியும்.............
9 comments:
bUT i WOULD SAY EMPLOYYES ASSOCIATIONS ONLY WERE BLOCKING THE GROWTH OF THOSE PUBLIC SECTOR COMPANIES.
A LIVE EXAMPLE, WHEN TELECOM WAS WITH PUBLIC SECTOR, KUPPAN AND SUPPAN WERE NOT ABLE TO USE PHONES.
WHEN IT IS HANDED OVER TO AIRTEL, RELAINCE, AIRCEL, MUNISAMY & MUTHUPECHI ARE ABLE TO HAVE MOBILE PHONES AND SMS ALERTS.
திரு ராம்ஜி யாகூ,
தகவல் தொழினுட்பத்தை பரவலாக்கி சாமானியனுக்கும் கொண்டு போய் சேர்ப்பது என்பது பிச்சை அல்ல, நமது உரிமை. ஊட்டியில் ரூம் போட்டு தனியார் செல்போன் வியாபாரி அதிகாரிகளுடன் பிசினஸ் பேசி முனுசாமி முத்துபேச்சிகளுக்கு துரோகம் செய்தது ஒரு bsnl அதிகாரிதான், இதை அம்பலப்படுத்தியது தொழிற்சங்க ஊழியர்கள்தான், அறிவீர்களா? நீங்கள் சொன்ன உதாரணத்தையே கூட என்னால் பதிலாக சொல்ல முடியும். ஞாபகம் உள்ளதா? பல நூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்திய மக்களின் சொத்தான vsnl ஐ அடிமாட்டு விலைக்கு டாட்டா என்ற பரம ஏழைக்கு விற்றது அரசாங்கமே, விற்க வேண்டாம் என்று சொன்னது தொழிற்சங்கங்கள். அதன் பின் அதே நிறுவனத்தை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றுத்தான் பரம ஏழை டாடா தனது அடுத்த வேளை சாப்பாடு சாப்பிட்டார் , பாவம். யார் தப்பு? யார் பாகெட் நிறைய யார் சொத்தை யார் விற்றது? பாம்பேயில் centaur என்ற பொதுத்துறை ஓட்டல் இருந்தது, அதையும் அரசாங்கம் விற்றது (டாடா அல்லது அவர் போன்ற ஒரு ஏழைக்குத்தான்). வாங்கிய அந்த ஏழை அந்த இடத்தை விற்று மட்டுமே பல நூறு கோடி ரூபாய் உதிரி வருமானம் சம்பாதித்தார், விற்றது அரசாங்கம், விற்க வேண்டாம் என்று சொன்னது தொழிற்சங்கம். ரிலையன்ஸ் தெரியும் அல்லவா, உழைப்பால் உயர்ந்த அம்பானி என்ற உத்தமர் கம்பெனி? அரசாங்கத்தின் தகவல்தொடர்பு சாதனங்களை ஏமாற்றி பயன்படுத்தி நானூறு கோடி ரூபாய் சம்பாதித்ததாக தெருத்தெருவாய் நாறியது, அம்பானி இடம் இருந்து அதைக் கைப்பற்ற வேண்டும் என்று சொன்னது சாமானிய இந்தியனும் தொழிற்சங்கங்களும். அரசாங்கம் எத்தனை கோடி ரூபாய் அம்பானி கும்பலிடமிருந்து கைப்பற்றியது? பல ஆயிரம் கோடி ரூபாய் நிலமதிப்பும் எந்திரங்கள் மதிப்பும் மட்டுமே சொத்தாக கொண்ட பால்கோ என்ற பொதுத்துறை நிறுவன அலுமினிய பாக்டரியை sterlit என்ற தனியார் ஏழைக்கு விற்றது அரசாங்கமே, விற்க கூடாது என்று சொன்னது தொழிற்சங்கங்களே. அட, நம்ம நெய்வேலி தெரியும்ல? அதன் சொத்து மதிப்பை அளவிட யாராலும் முடியாதய்யா! அதன் பங்குகளையும் தெருவில் வைத்து கூவிகூவி விற்கலாம் (அதாவது ஒட்டகத்துக்கு தலையை மட்டும் கூடாரத்துக்குள் நீட்ட அனுமதி....) என்று சொன்னது மத்திய அரசாங்கம், கூடாது என்று ஒற்றுமையாய் நின்று சதியை முறியடித்தது தொழிற்சங்கங்களே! இது வரலாறு.... பொதுத்துறை என்பது வாஜ்பேயி சொத்தோ மன்மோகன் சிங் சோனியா சொத்தோ அல்ல, நீங்கள் சொல்லும் குப்பன், சுப்பன், முனுசாமி முத்துபேச்சி சொத்துத்தான்.. ஆனால் நீங்கள் பேசுவது முனுசாமிக்கோ முத்துப் பேச்சிக்கோ சாதகமாக இல்லை. இறுதியாக இரண்டு தகவல்கள்: 1 ) காங்கிரஸ் அரசாங்கம் மட்டும் அல்ல, பிஜேபி அரசும் கூட அம்பானிகள் மேல் நடவடிக்கை எடுக்காது, ஏனெனில் கடந்த 2008 ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மன்மோகன் அரசு கவிழாமல் காப்பாற்றியது அம்பானிகளின் பணமே, அதற்கு ஏஜென்டாக இருந்தவர்கள் அமர்சிங்கும் பாரதீய ஜனதா கட்சியும். 2 ) இன்றைக்கு வெளிவந்த நக்கீரனை பாருங்கள்: காலாவதியான தனது ரிலையன்ஸ் உணவுப்பண்டங்களை விற்பதற்காக மட்டுமே ரிலையன்ஸ் அம்பானி சென்னையில் தனியாக ஒரு ப்ராஜெக்டே நடத்துகின்றாராம்! அதாவது சாமானியர்களின் உயிரை எடுத்து பலகோடி ரூபாய் சம்பாதிக்கின்றாராம் உழைப்பால் உயர்ந்த உத்தமர் அம்பானி! ஒரு விஷயம் தெரியுமா? தொழிநுட்ப (இன்ஜினியரிங், மருத்துவம், MBA போன்ற படிப்புக்களில்) business, management பாடங்களில் அம்பானிதான் முக்கியமான உதாரணமாம்! ஜன கண மன.... ஜெய் ஹோ!
இந்த தகவல் உங்களுக்காக மட்டும் அல்ல, முனுசாமி சுப்பன் என்று எளிய வார்த்தைகள் பேசி ஆனால் உள்ளுக்குள் பெருமுதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவாக தொழிற்சங்கங்களை வெறுப்பாக பார்க்கின்ற, பிரச்சாரம்செய்கின்ற அனைவருக்காகவும் சமர்ப்பணம்.
இக்பால்
dear comrade kashyapan,
a nice memorabilia. i have read your story with this subject in 'vannakkathir' long back. sweet and remarkable nostalgia.
iqbal
குப்பனுக்கும் சுப்பனுக்கும் தனியார்மயத்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்ற மாயை இருக்கிறது. ஆனால் அமைச்சகமே அருத்துறையின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்ற உண்மையை மக்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை. ஊழல் செய்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது, எப்படி செய்கிறார்கள், அரசாங்கத்திற்கு / மக்களுக்கு எப்படி நட்டம் ஏற்ப்டுகிறது என்பதை யோசிக்கவேண்டும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாறிக்கொண்டிருக்கிறது. போதாதா? ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு.
well said.
truth will comeup but we have amnesia.
சட்டென்று முகத்தில் அறைந்தது போலிருக்கிறது.....
ராம்ஜி யாஹூ அவர்களுக்கு..
அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த தொலைத்தொடர்புத்துறை என்பது PSU வாக உருவானது 1.10.2000 (பி எஸ் என் எல்) முதல்தான். எம் டி என் எல் 1.10.1986 இல் உருவாக்கப்பட்டது. புதிய தொலைதொடர்புக்கொள்கை 1994 இன் அடிப்படையில் பேஜர், மொபைல் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்(Value added services) தருவதற்கு தனியார் கம்பெனிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் எம் டி என் எல் நிறுவனம் கோர்ட் சென்று ஆணை பெற்ற பிறகே மொபைல சேவையில் நுழைய முடிந்தது. தனியார் நிறுவனங்கள் அப்போது வசூலித்தது எவ்வளவு தெரியுமா? இன்கமிங் நிமிடத்திற்கு 8 ரூபாய் அவுட்கோயிங்க் நிமிடத்திற்கு 16 ரூபாய் மட்டுமே...
2002 அக்டோபரில் பி எஸ் என் எல் நிருவனம் மொபைல் சேவையில் நுழைந்த பிறகுதான் இங்கமிங் என்பது இலவசமானது என்பதுதான் உண்மை..
Such a leaderships now a day became rare..It is a fact also
தங்கள் எழுத்துக்களில் அனல் தெறிக்கிறது...
Post a Comment