Wednesday, July 21, 2010

Theatre

இரண்டு மாதங்களாக தமிழகம், கர்நாடகம் என்று சுற்றினேன்.நண்பர்களையும், தோழர்களையும் பார்த்தும் பேசியும் மகிழ்ந்தேன். பலர் இடதுசாரி இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட கலைஞர்


கள் பற்றி எழுதுங்கள் என்று கேட்டார்கள்.மதுரையைவிட்டு நாகபுரியில் நிரந்தரமாக தங்க முடிவு செய்த போது என்னிடமிருந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் மதுரை பெத்தானியாபுரத்திலுள்ள

மார்க்ஸ் படிப்பகத்திற்க்குக் கொடுத்துவிட்டேன்.ஞாபகத்திலிருந்து எழுத்ம்போது தவறுகள் வரலாம்

என்ற எச்சரிக்கை உணர்வும் மனதில் ஊசலாடுகிறது.

இடதுசாரி கலைஞன் என்று என் மனதில் முதலில் வருபவர் உத்பல்  தத்  என்ற அந்த வங்க நாடக கலைஞன் தான்.little peoples theatre நாடககுழுவை நடத்திவந்தார்.மிகவும் புகழ்பெற்ற நாடகங்களான கல்லொல்(துரோகம்),துர்சொப்ன நகரே(கல்கத்தா), மாரீச வத்(மாரீசனின் சாவு) வங்க மக்களை புரட்டி எடுத்த நாடகங்களாகும்.இந்த நாடகங்களை வலதுசாரி அமைப்புகளோடு காங்கிரசும் சேர்ந்து கடுமையாக எதிர்த்தன.

அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள் அதுல்ய கோஷ்,பி.சி.சென், பின்னாளில் அரைப்பாசிஸ ஆட்சியை உருவாக்கிய சித்தார்த்த சங்கர் ரே ஆகியோராவர்.காங்க்கிரஸ் குண்டர்களும்,ரவுடிகளும் நாடகம் நடக்கும் இடத்திர்க்கு வந்து கலாட்டா செய்வார்கள்.நுழைவுச்சீட்டு வாங்கும் இடத்தில் நிற்பவர்களை கழிகளாலும்,கம்பாலும் தாக்குவார்கள். இந்தத்தாக்குதலில் முன்னால் நின்றவர்கள் சத்த்ர பரீஷத் குண்டர்கள். சத்திர ப்ரிஷத் என்றதும் என்னமோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம்.காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்புக்குப்பெயர்தான் சத்திர பரிஷத்.

இந்தரவுடி மாணவர் அமைப்பின் தலைவர்களாக அப்போது இருந்தவர்கள்ப்ரியரஞ்சன்  தாஸ்  முன்ஷி ,மம்தா  பானர்ஜி ,பிரமோத்  முகர்ஜி  ஆகியோர்.ஆனாலும் இத்தகைய தாக்குத்லையும் மீறி மக்கள் நாடகம் பார்க்க வந்தார்கள்.ஒரு கையால் தடியடியை தடுத்துக்கொண்டு மறுகையால் நுழைவுச்சீட்டை வாங்கிக்கொண்டு நாடகக் கொட்டகைக்குள் நுழைந்தார்களே ஏன்?

2 comments:

காமராஜ் said...

தோழர் இது தொடரா..
ஆர்வத்தை தூண்டுகிறது.

அருமை..

vimalavidya said...

Excellent ..You remember the past and document all facts.The future generation will be benefitted.