Friday, July 23, 2010

theatre....4

மாரீச வத் (மாரீசனின் வதம்)


நாடகங்களை வகைப்படுத்தும்போது "அபத்தநாடகம்"(absurd drama) என்று வகைப் படுத்துவார்கள்.நாடகம் முழுவதும் "குண்டக்க,மண்டக்க"என்று இருக்கும்.ஒரு ஒழுங்கு இருக்காது. மிகவும் அபத்தமாக இருக்கும்.ஆனால் அதற்குள்ளாக ஊடும்,பாவுமாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கும்.மேலெழுந்தவாரியாக அபத்தமாகத் தெரிந்தாலும் சிறந்த கருத்து அதனுள் பொதிந்திருக்கும்.

முதல் காட்சியில் ராவணன் ,"உடனடியாக மான் வேடமிட்டு ராமனை ஏமாற்ற" மாரீசனுக்கு உத்திரவிடுவான்.மாரீசனோ தேவையில்லாமல் இப்ப செய்யவேண்டுமா? என்று மறு கேள்வி கேட்பான்.ராவணன் கோபப்படுவான்.

அடுத்தகாட்சியில் அமெரிக்க ஜனாதிபதி செனட்டர்களோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பார்.வியட்நாமுக்கு மெலும் படைகளை அனுப்ப விரும்புவார். செனட்டர் எதிர்ப்பார்.

அடுத்த காட்சியில் மேற்கு வங்க கிராமத்து கூலி விவ்சாயி ஒருவனிடம் மிராசுதரர் பேசிக் கொண்டிருப்பார்.முஸ்லீம் ஒருவனின் வைக்கப்படப்பிர்க்கு தீ வைக்கச்சொல்லுவார்.அதன் மூலம் வகுப்புகலவரத்தை உருவாக்குவது அவருடைய திட்டம்.கூலி விவசாயி வெண்டாம் என்பான்.

மீண்டும் ராவணன் காட்சி.மாரீசன் வசனத்தைமறந்து" வியட்நாமுக்கு படைகளை மெலும் அனுப்பினால் படுநாசம் விளையும்.கட்டாய ராணுவசெவையை எதிர்த்து சட்டம் கொண்டு வருவேன்"என்று கூறுவான்.

வசனத்தை மறந்த செனட்டர் கூலி விவசாயி பேச வேண்டிய வசனத்தைப் பேசுவார். விவசாயி மாரீசன் வசனத்தை பேசுவான்.நாடக நடிகர்கள் மோதிக்கொள்வர்கள். இறுதியில் இயக்குனர்,நாடக ஆசிரியர் அகியோர் வந்து பஞ்சாயத்து நடக்கும். முடிவு எடுக்கமுடியாமல் வால்மீகி முனிவரையே வரவழைப்பார்கள்."இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதினேன்.எந்த மாற்றமும் இல்லாதபோது வசனத்தை மாரீசன் சொன்னாலென்ன? செனட்டர் சொன்னாலென்ன?கூலி விவசாயி சொன்னால் என்ன?எல்லாம் ஒன்றுதான்.நாடகத்தை தொடருங்கள்" என்று சொல்லி வால்மீகி நாடகத்தை முடிப்பார்.

2 comments:

hariharan said...

அருமையான நாடகங்கள்.

பார்க்கத்தான் முடியவில்லை.

ராசராசசோழன் said...

நாடக கலை என்பார்கள்...எல்லாம் கேள்வி ஞானம் தான்..S.Ve.சேகர் நாடகத்தை ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறேன்...இது புது விடயமாக இருக்கிறது...