விவசாய நாகரீகமும்......
1957-58மாண்டுகளில் ஒரு முறை சி.பி.ராமசாமி அவர்களின் சொற்பொழிவு ஒன்றை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.நாகரீகம் என்ற தலைப்பில் பேசினார்.பயிர்தொழிலைத் தெரிந்த்து கொண்ட பிறகு நாகரீகம் வல ர்ச்சியடைந்தது என்பது அவருடைய பேச்சின் சாரம்.பயிர்செய்ய ஆரம்பித்த பின்னர் தான் அவன் நிரந்தரமாக தங்க ஆரம்பித்தான்.இது அவனுடைய மொழி,பழக்கவழக்கங்கள் சகமனிதர்களொடு கூடிய உறவுகள் ஆகியவற்றில் மாற்றங்களை உருவாக்கியது.Agri என்றால் விவசாயம்.Culture என்றால் பழக்கவழக்கங்கள்,பண்பாடு, நாகரீகம் எனலாம்.அதனால் தான் Agriculture என்கிறோம் என்றும் விளக்கினார்.
தாமிரவருணி,காவிரி டெல்டாபகுதிகளில் விவசாயம செழித்தது.அங்கு கலை,இலக்கியமும் வளர்ந்தது.வடக்கே நெல்லூர்,கிருஷ்ணா,கோதாவரி டெல்டா பகுதிகளும் இப்படித்தான்.மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு விவசாயம் அடிப்படையாக அமைந்தது எனலாம்.இன்று நிலமை மாறிவிட்டது.
விவசாயிகள் நெற்பயிருக்குப் பதிலாக பணப்பயிரை நாடுகிறார்கள்.நெல்லூரில் ஆயிரக்கணக்கானவர இப்போது நெல் பயிரிடுவதில்லை.மீன் பண்ணைகளை உரூ வாக்கி" பிரான்" வளர்க்கிறார்கள்.கிழக்கு கோதாவரியில் லச்சக்கணக்கான ஏக்கரில் மீன் பண்ணை கள் வந்துவிட்டன்.
விவசாயத்தைவிட மீன் வளர்ப்பதில் லாபம் அதிகம்.குறிப்பாக "பிரான்" வளர்த்தால் விலை கூடுதலாகக் கிடைக்கிறது.ஒரு கிலொவுக்கு 600 ரூ கிடக்கற து.ஒருகிலொவுக்கு பத்திலிருந்து பதிணைந்து "பிரான்" நிற்கும்.600ரூ கிடைக்க 30 கிலோ நெல் விற்கப்படவேண்டும். மீன் வளர்த்தால் ஒரு ஹெக்டெகருக்கு ஆண்டுக்கு 15லட்சம் ரூ கிடக்கும். நெல் பயிரிட்டால் 50000 ரூ கிடைக்கும்.
ஆளும் பெரிசுகள் மீன் பண்ணைகளை தஞ்சையில் ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆந்திரா இதைவிட மோசம். வடநாட்டு பேபர் கம்பெனிகள் விவசாயிகளுக்கு முன் பணம் கொடுத்து மூங்கில் பயிரிட வைக்கின்றனர் ஓங்கோல் மாவட்டத்தில் இது மிக அதிகமாக நடைபெருகிறது.
மலேசியா, தாய்லாந்து,நாட்டி.ல் உள்ள பன்னாட்டு கம்பெனிகள் மீன்விதையை .கொடுக்கின்றன.விளை நிலத்தை வாங்கி தாங்களே மீன் வளர்த்தால்! விவசாயத்திலும் அந்நிய முதலீடு ? ஏன் கூடாது? பங்களா தேசத்தை பிரும்மபுத்திரா பாயும் பகுதியை நாசமாக்கியவர்கள் இந்தியாவுக்கும் வருகிறார்கள்.
உச்ச நீதிமன்றம் கொள்கை விஷயங்களில் தலையிடக் கூடாது என்று பிரதமர்
மன் மோகன் சிங் தொலை நோக்குப் பார்வையோடுதான் கூறியுள்ளார்.
6 comments:
மிகவும் அவசியமான பதிவு! நன்றி ஐயா.
தகவல் தொழில்நுட்பத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் விவசாயதிற்கு கொடுக்கப் படாதது கண்டிக்கதக்கது. விளையும் நிலங்களில் IT பார்க் பெருகுவதும் அச்சத்தை ஏற்படுத்தும் செயலே.
விளை நிலங்களில் உணவுப்பயிர் அல்லாத வணிகப்பயிர் விளைவிக்க தடை செய்யவேண்டும்.
1770 முதல் 1857 வரை 12 பஞ்சங்களில் இந்தியமக்கள் உணவின்றி பட்டினியால் செத்ததற்கு முக்கிய காரணம் காலனி ஆதிக்க அரசு விவசாயிகளை அபின் மற்றும் அவுரி என்ற (துணிகளுக்கான சாயத்திற்காக) வணிகப் பயிரை விவசாயம் செய்யவேண்டுமென்று கட்டாயப்படுத்தியது தான்.
இன்றைய விவசாயிகள் மட்டுமல்லாது யாவரும் எது சிறந்த லாபம் என்ற நோக்கில் தான் தொழில் செய்து வருகின்றனர். ஒரு வித்தியாசம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி தொழில் செய்பவர்களுக்கு அதன் விளைவு தெரியும் ஆனால் விவசாயிகளுக்கு “பிடி காட்டன், பிடி கத்தரிக்காய்” ஏற்படுத்தப்போகும் விளைவுகள் அவர்கள் அறியார்.
நாம் பாரம்பரிய விவசாய முறையையும், விதைகளையும் இழந்து வருகிறோம். எல்லாவற்றிலும் “நாட்டு” என்ற சொல்லக்கூடிய வகைகள் அருகிவருகின்றன.
மரியாதை- ஒரு பார்வை:
http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post.html
put some poto which is clearly visible in ur profile..
பெண்களின் அடிப்படை குணங்கள்
http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_17.html
Post a Comment