அமேரிக்காவின் மனித உரிமை மாண்புக்கு இரண்டே இரண்டு சான்றுகளைச் சொல்லலாம் என்று கருதுகிறென்.ஒருவர் அந்த மாபெரும் நடிகர் சார்லி சாப்ளின். மற்றொருவர் பாடகர்,நடிகர்,எழுத்தாளர், நாடகவியலார்,வழக்குரைஞர், தொழிற்சங்கவாதி,கருப்பின மக்களின் தலைவர், சொவியத் நாடு சென்று வந்தவர். பால் ராப்சன்.
இந்த நாய்களுக்கு கம்யூனிசம் என்றால் பிடிக்காது.மெக்கார்த்தி,எட்கார் ஹூவர், டல்லஸ் ஆகியோர் ஜமக்காளத்தில் வடிகட்டிய கம்யூனிச எதிர்ப்பாளர்கள்.இவர்களுக்கு வசதியாக 1908ம் ஆண்டே சட்டம் இயற்றிவிட்டார்கள். அமேரிக்க எதிர்ப்பு நடவடிக்கை கண்காணிப்பு சட்டம் என்று பெயர் சோவியத் புரட்சிக்குப் பிறகு கம்யூனிஸ்டுகளை அழித்தோழிப்பது இந்த சட்டத்தின் முக்கிய பணியாகியது.
அமேரிக்க அறிவுஜீவிகள்,எழுத்தளர்கள்,கலைஞர்கள்,ஆகியோர் சோசலிசம்,சோவியத் என்று பெசத்தலைப்பட்டனர்.இவர்கள் ஒரு குழுவாக செயல்படுவதாக அரசு புரளியைக் கிளப்பிவிட்டது.நாட்டிற்கு இவர்களால் மிகப்பெரிய ஆபத்து வரும் என்று பிரச்சாரம் செய்தனர்..இதற்காக ஒரு இயக்கத்தையே உருவாக்கினர்.. அந்த இயக்கத்தின் பெயர்தான்"சிவப்பு பயம்"(red scare)'
தன்னுடைய கவனத்தை நாடகத்துறையிலும் சினிமாத்துறையிலும் .செலுத்த ஆரம்பித்து.குட்டி நடிகர்கள்,எழுத்தளர்களை வசக்கினர் பெரிய நடிகர்களில் தாங்கள் சந்தேகிகப்படுபவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தினர். பல பெரிய நடிகர்கள். ஒதுங்கினர். பத்து பேர் "உன் சோலியப் பாருடா" என்று. ஊன்றி நின்றனர். அவர்களில் முதலாமவர்தான் சார்லி சாப்ளின். இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்ல.அமெரிக்க மக்களுக்கு சோசலிசம் வந்தால் நலது என்று நினைக்கும் ஆதரவாளர்கள் மட்டுமே.
உலகத்திரப்பட வரலாற்றில் மிகசிறந்த பத்து படங்களை தேர்ந்தெடுத்தால் அதில் சாப்ளினின் Great Dictator ஒன்றாகும்..இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரை எதிர்த்து எடுக்கப்பட்டபடம். அப்போது . போரில் அமேரிக்கா சேரவில்லை. ஹிட்லரை எதிர்த்து வம்பை விலைக்கு வாங்குவானேன் என்று படத்தயாரிப்பை தடுத்து விட்டது.(பின்னாளில் ஹிட்லரே பார்த்து பாரட்டிய படமாகும்) சாப்ளின் மற்ற தயாரிப்பிலும் ஈடுபட முடியாமல் செய்தது.படபிடிப்புத்தளங்களை கொடுப்பவர்களை,துணை நடிகர்களை,படம் பிடிப்பவர்களை மிரட்டியது.சாப்ளின் அமேரிக்காவை விட்டு வேளியேரினார்.இங்கிலாந்தில் குடியேறிணார்.
இப்படி சக நடிகர்களை காட்டிக்கொடுதவரகளில் ஒருவர்தான் எலியா காஜன் என்ற இயக்குனர்.அவருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்க ஆஸ்கார் கமிட்டியை அமேரிக்க அரசு நிர்ப்பந்தித்தது.ஆஸ்கார் கமிட்டி அடிபணிந்தது ஆனாலும் எலியா காஜனின் எதிர்பாளர்கள் பணியவில்லை. விருது வழங்கும் விழாவின் போது கலந்து கொண்டார்கள்.
விருது வழங்குக் போது எல்லாரும் எழுந்து நின்று கைதட்டும் பொது கைதட்டாமல் அமர்ந்து அவரை அவமதிதார்கள். (தொடரும்)
7 comments:
மனித உரிமை காரணமாக சேப்லின் நினைவுக்கு வருவது அவரது மனித உரிமை மீறல்களாலா?
மெகார்தி நாய். அதற்காக 'இந்த நாய்கள்' என்று பொதுப்படுத்தலாமா?
கம்யூனிசத்தை அமெரிக்கா மட்டுமில்லை மேற்கு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. கிழக்கோ அரைகுறையாக அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறது வசதிக்கேற்றபடி. கம்யூனிசம் என்றால் என்ன என்பது கம்யூனிசிஸ்டுகளுக்குக் கூடத் தெரியுமா என்பது சந்தேகம் தான். அடக்குமுறை தான் பிரபல கம்யூனிசம் என்பது சென்ற ஐம்பது வருட உலக வரலாற்றில் சிவப்பு கலரில் எழுதப்பட்டிருக்கிறது. சோசலிசம் என்று இடையில் ஒரு கூத்து நடந்து கொண்டிருந்ததே, நின்று விட்டது போலிருக்கிறது. கேபிடலிசத்துக்கு எதிர்பொருளாக கம்யூனிசத்தைக் கொண்டதால் கம்யூனிசம் உருப்படவில்லை என்பது என் எண்ணம்.
நன்றி அப்பாத்துரை அவர்களே! உங்கள் பின்னூட்டதை முழுமையாக புரிந்துகொண்டு எனக்குத்தெரிந்ததை கூறுகிறேன்.மீண்டும் சொல்கிறேன்.I am subjecting me to correction.---காஸ்யபன்.
thank u very much Ramji yaahoo---kashyapan
கம்யூனிசம் ஒரு சமூகத்தின் வாழ்க்கைமுறை.. அதை தனிமனிதன் அர்த்தப்படுத்திக் கொண்டு, கடைபிடிப்பதில் உள்ள வித்தியாசம் நாட்டுக்கு நாடு வேறு படுகிறது.அப்பாதுரை சார் சொன்னது போல் கேபிடலிசத்துக்கு எதிர்வினையாய் கம்யூனிசம் என்ற நிலை தேவையில்லை என்பது என் கருத்து..
வருகைக்கு நன்றி மோகன் ஜி! இந்து மதம் பற்றி காஞ்சி மகாபெரியவர் பெசுவதற்கும் கொவில் பட்டர் பெசுவதற்கும் வித்தியாசம் உண்டு.எல்லாம் தேரிந்தவர் மறைந்த மகாபெரியவர் என்பதைவிட பட்டரைவிட ஞானம் உள்ளவர் என்பது முக்கியமானதாகும்.நான் கொவில் பட்டர் அளவில்தான் மார்க்சீய ஞானத்தை பொறுத்தவரை நிற்கிறென். மூல நூல்களைப் படிப்போம். விவாதிப்போம். தெளிவு பெறுவோம்---காஸ்யபன்.
நல்ல கட்டுரை!
பதிவர் கொழந்த அவர்கள் great dictator பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
http://saravanaganesh18.blogspot.com/2010/09/great-dictator.html
thank you S.K===kashyapan
Post a Comment