பாம்புப்பிடாரனும் இசையும்
"என்னுடைய பயணப்பெட்டியில் மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் எழுதிய கலையும் இலக்கியமும் என்ற தொகுப்பு நூலும்.பாரதியின் முழுமையான கவிதைத்தொகுப்பும் இருக்கும்.அறையில் தங்கி இருக்கும் போது படிப்பேன்.பாரதியின் வசன கவிதைகள் எனக்கு நிரம்பப் பிடிக்கும்.அவற்றில் ஒரு அமானுஷ்யம் புலப்படும்.அது பாரதியின் பழக்க வழக்க ங்களில் ஏற்பட்ட குறைபாடாகக் கூட இருக்கலாம்.இருந்தாலும் இசை பற்றி ஒரு புதிய பரிமாணத்தை அவரால் கொடுக்க முடிந்தது"என்று எம்.பி.எஸ் விளக்கினார்
என் நினைவில் குன்றக்குடி வைத்தியனாதனின் நினைவு தெரித்தது.குடகில் ஊறி கொப்பளித்து ,ஆடுதாண்டும் காவிரியாகி,அருவியாகப் பொழிந்து,அகண்டகாவிரியாகி,தஞ்சைப் புழுதியை நனைத்துவிட்டு,கீழைக் கடலில் சங்கமிக்கும் காவிரியை தன் வில்லேழுப்பும் ஓசைமூலம் காட்சி ரூபமாக்கியவர் அவர். எனக்கு முன்னோடி எம்.பி.எஸ் அவர்களின் "பாம்புப்பிடாரன்" தான் என்றார்
"ரயிலின் சப்தம் கூட ஒரு லயத்தொடுதான் உள்ளது.நிலயத்தில் "உப்புமா,வடை,காப்பி" என்று விற்பவர் ஒரே சுருதியில் சொல்கிறார். உச்சி வெயிலில் தொம்பைப் பெண்" முறம் வங்கலியோ முறம்" என்று தெருவில் கூவும்போது அதில் ஒரு லயம் கிடைக்கவில்லயா?" என்று எம்.பி எஸ் தொடர்ந்தார்.
பாம்புப்பிடாரன் இசைக்கோர்வையில் மகுடியும் கவிதையும் மட்டுமல்லாமல்,இவைகளும் இனைந்திரு க்கும்.இந்த சமயத்தில் இசை ஆரய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி . மாணவி சொன்னது நினைவுதட்டுகிறது.
"ராக்கம்மா கையைத்தட்டு---" என்ற பாடலை பற்றி கூறுவார்.."மேற்கத்திய இசையில் ஆரம்பித்து,நாட்டுப்புர இசைக்குவந்து செவ்விசையில் முடியும்.அதுமட்டுமல்ல.தேனில் ஊறிய பலாப்பழம் தொண்டையில் நழுவுமே அதுபோல அந்த மாற்றம் நிகழும். இசைக்கல்லூரிகளில் இவற்றை விளக்கிச் சொல்ல மாட்டேன் என்கிறார்களே' என்று ஆதங்கப்பட்டார்.
இசைக்கல்லூரிகள் கூட தொழில்முறை கல்வியாக, தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் வேலை வாங்கித்தரும் கல்வியாக மாறிவிட்டதே!
இந்துமாக் கடல் எங்களுடையது.அங்கோர் வாட் கொவில் எங்களுடையது.என்ற பாடலை எம்.பி.எஸ் சொல்லிக்கொடுத்தார்.எங்களுடையது என்று உச்சரிக்கும் பொது நெஞ்சு புடைக்க வேண்டும் என்று பாடகர்களிடம் வற்புறுத்துவார்.இந்துமாக்கடல் என்ரு உச்சரிகும் போது குரல் மேலும் கீழுமாக உயர்ந்தும் தாழ்ந்தும்வர கடலலை பொன்ற பிம்பம் மனதில் தோன்றும்.
விடுதலை போரில் வீழ்ந்த மலரே.என்ற பாடலில் தோழா என்ற வார்த்தயை உச்சரிக்கும் பொது கண்ணீர் வந்துவிடும்.
"ஐயா! செம்மலர் பத்திரிக்கைக்காக ஒரு நேர்காணல் தரவேண்டும்" என்று கெட்டேன். மறு நாள் அறைக்கு வரச்சொன்னார்.போனேன்(தொடரும)
10 comments:
நன்றாக உள்ளது! தொடரட்டும்!
thanks for sharing
ஆம்
விடுதலையின் உண்மையான வரலாற்றைப்புரிந்துகொள்ளும் எவருக்கும் கண்ணீர்வரும்.
என் தோழா
என் தோழா
தோழா உனக்கென்
வீர வணக்கம்.
கண்ணைமூடிக்கொண்டு கேட்டால் சிலிர்க்கும்.
எம்பி எஸ்சுக்கு இப்படி ஒரு சிகப்பு முகம் இருப்பது இப்போதுதான் தெரிந்துகொண்டேன்
தோழா உங்களுக்கும் என் வணக்கம்.
ரசித்துப் படிக்கிறேன்.
எம்.பி.ஸ்ரீனிவாஸ் புகைப்படம் இருக்கிறதா? அவர் எப்படி இருப்பார் என்று தெரிந்து கொள்ள ஆசை.
அவருக்குத் தமிழ் தெரியாதென்றல்லவா நினைத்திருந்தேன்? வெட்கமாக இருக்கிறது.
நன்றி அப்பாதுரை அவர்களே! அவருடைய முதல் படம் "பாதை தெரியுது பார்." பாடல்கள் அத்துணையும் தேன்பாகு. நீங்கள் குறிப்பிட்டுள்ள "தென்னங்கீற்று"பாடலை எழுதியவர் ஜெயகாந்தன். அவர் இன்னொரு பாட்டும் எழுதியிருதார் எது. என்பது ஞாபகத்தில் இல்லை."சின்னச்சின்ன மூக்குத்தியாம்" என்ற பாடலை கே.சி.எஸ் அருணாசலம் என்ற கவிஞர் எழுதியிருந்தார்.நீங்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு சமயம் வரும் போது விளக்கமளிக்கிறேன்---காஸ்யபன்
அப்பாதுரை அவர்களே! படம் இருக்கிறது. ஆனால் கணிணி வித்தை எதுவும் தெரியாத மூடன் நான்.இடுகையோடு சேர்க்கத் தெரியவில்லை. நீங்கள் satamilselvan.blogspot.com போனால் படம் கிடைக்கும்---காஸ்யபன்
சின்ன சின்ன மூக்குத்தியாம் பாட்டை ரசித்துக்கேட்டிருக்கிறேன். (டிஎம்எஸ் பாடிய பாட்டு தானே? சட்டுனு சந்தேகம் வந்துடுது)
புகைப்படம் பற்றிய விவரத்துக்கு நன்றி. இப்போது தான் எப்படி இருக்கிறார் என்று தெரிந்தது.
அப்பாதுரை அவர்களே! " சின்ன சின்ன மூக்குத்தியாம்" யார் பாடியது என்று கேட்டால் சொல்லியிருப்பேன்.டி.எம்.எஸ் ஸா என்று கேட்டதும் சந்தேகம் வந்துவிட்டது. எம்.பி எஸ் தான் ஜெயசந்திரன், ஜெசுதாஸ் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்."மனித உரிமை ' இடுகையில் கபில என்று ஆரம்பித்துள்ளீர்கள் .எதையுமே பளிச்சென்று புரிந்து கொள்வது எனக்கு சிரமமான ஒன்று.கொஞ்சம் விளக்கமுடியுமா?---காஸ்யபன்
ஆமாம் அப்பாத்துரை. அதுவென்ன கபில ? எனக்கு கேட்க தயக்கமாய் இருந்தது. அறிவுஜீவிகளின் நடுவில் நான் நுழைந்துவிட்டேனோ எனப் பயந்தேன், அய்யா கேட்டுவிட்டார்கள். அதுதான் அனுபவசாலிகளுக்கும் கத்துக்குட்டிகளுக்கும் உள்ள வித்தியாசம்
Post a Comment