கற்பனை என்று உண்டா என்ற கேள்வி சென்ற இடுகையில் எழுப்பப்பட்டு இருந்தது.பிற உயிர்கள் அத்துணையும் இயற்கையோடு இயற்கையாக வாழ்கிறது.மனிதன் மட்டுமே இயற்கையோடும் ,இயற்கையிலிருந்து தனித்தும் வாழ்கிறன்.அவனுக்கு வெளியே இருக்கும் உலகம்,அவனுக்கு எப்படி புலப்படுகிறது?
ஒரு ரோஜா செடியில் பூத்திருக்கிறது.செடியில் ரோஜா இருப்பதாக அவன்நினைப்பதால் அது இருக்கிறதா? அது இருப்பதால் தான் அவன் நினைக்கிறானா?
அது இருக்கிறது.அதனல் பார்க்கிறான். நுகர்கிறான்.இதழ்களை தொடுகிறான்.காற்றில் அது அசையும் ஒசையைக் கேட்கிறன்..அதன் இதழை வாயில் போட்டு அதன் இனிப்பான துவர்ப்பை ருசிக்கிறான். மொத்தத்தில் ஐம்புலங்களின் மூலம் ரோஜாவின் இருத்தலின் சாரத்தைப் புலப்படுத்திக் கோள்கிறான்.மனிதனுக்கும் அவனுக்கு வெளியே இருக்கும் உலகிற்குமான புரிதல் அவன் புலன்கள் மூலமாக உருவாகிறது புலன்களின் கூர்மைக்குத்தகுந்தபடி அவனுடய புலனறிவு கூடுகிறது,அல்லது குறைகிறது
நாய்களுக்கு கண்கள் உண்டு. ஆனால் அவைகளுக்கு இந்த உலகம் கருப்பு வெள்ளையாகவே தெரிகிறது வண்ணங்கள் புலப்படுவதுஇல்லை...(clour blindness).குறைபட்ட புலன்கள் மூலம் குறைபட்ட புலனுணர்வைத்தான் பெறமுடியும்.
உதாரணமாக கண்ணில்லாதவனுக்கு தஞ்சை பெரியகோவில் ஒரு கலைவடிவமல்ல.Rambrant அவர்களின் வண்ண ஒவியம் ஒருகலைப்படைப்பு இல்லை. காதில்லாதவனுக்கு எம்.எஸ். அவர்களின் இசை ஒருகலை வடிவமில்லை.
இதனையே மார்க்ஸ் அவர்கள் இன்னும் கூர்மையாகச் சொல்வார்.எல்லாருக்கும் காதிருக்கிறது.எத்துணை பேர் இசையை ரசிக்கிறோம்.காதிருந்தால் மட்டும் போதாது.இசைக்காது (musikal ear) வேண்டும் என்பார்.
"இயற்கையின் தர்க்கவியல்" (Dialatics of Nature) பற்றி நண்பர்களோடு விவாதிக்கும்போது பரிசொதனை ஒன்று செய்வோம்.ஒரு சில மணித்துளிகளில் நாமும் செய்துபார்த்துவிடலாம். ஒரு ஐந்து விநாடி கண்களை மூடிக்கோள்வோம்.எதை வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்வோம்.நாம் கற்பனை செய்ததை நண்பர்களோடுபகிர்ந்து கொள்ள வேண்டும். தயாரா? ஒரே ஒரு நிபந்தனை.இதுவரை நீங்கள்பார்த்திராத,கேட்டிராத,முகர்ந்திராத,தொட்டிராத,ருசித்திராத ஒன்றைகற்பனை செய்திட வேண்டும்.தயாரா?
பதிவுலக நண்பர்களே உங்களால் முடியாது.புலனறிவு மூலம் பெற்றதை மட்டுமே கற்பனை செய்யமுடியும் அதனால்தன் இல்லாத கடவுளுக்குக் கூட இருக்கும் மனிதனின் கண், மூக்கு,காது,கை,கால்,சிங்கமுகம், யானைமுகம்
என்று வைக்கிறோம்.
இல்லாததைக் கற்பனை செய்யமுடியாது.இருப்பதைக் கற்பனை செய்ய"
" நீ என்ன அண்ணாவி?"
அப்படியானால் கற்பனை என்பது கிடையாது தானே!THERE IS NO FICTION.----(தொடரும்)
5 comments:
அன்புள்ள காஷ்யபன், நீங்கள் எழுதியிருக்கும் பல கட்டுரைகளை நான் வாசித்திருக்கிறேன். எளிய வடிவில், நல்ல தமிழில், அனைவருக்கும் புரியும்படி அவை எழுதப்பட்டுள்ளன. பாராட்டுகள்.
பொதுவுடைமை சித்தாந்தத்தையும் மார்க்சிய ஆசான்களின் படைப்புகளையும் தொடர்ந்து வாசகர்களிடையே கொண்டு செல்லுங்கள்.
நன்றி மருதன்! காஷ்யபன் என்பவர் விகடனில் எழுதுவார்."அசடுகள்" நாவலை எழுதியவர் காசியபன். தாமரை, செம்மலர் எழுத்தாளனான நான் காஸ்யபன். இதனை தங்களுக்கு தெரியப்படுத்தவே குறிப்பிடுகிறென்.அன்புடன்---காஸ்யபன்
/***
பதிவுலக நண்பர்களே உங்களால் முடியாது.புலனறிவு மூலம் பெற்றதை மட்டுமே கற்பனை செய்யமுடியும் அதனால்தன் இல்லாத கடவுளுக்குக் கூட இருக்கும் மனிதனின் கண், மூக்கு,காது,கை,கால்,சிங்கமுகம், யானைமுகம்
***//
Super sir!!!!!
பிரதீப் அவர்களே! கட்டுரையின் மையப்புள்ளியைப் பிடித்துள்ளீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துக்கள்---காஸ்யபன்
கட்டுரையை வாசித்தேன்..
மிக்க நன்றி..!
Post a Comment