"ஈருள்ளியும்" இன்சூரன்ஸும்
தமிழகத்தின் தென்பகுதியில் "ஈருள்ளி" என்றால் வெங்காயம். அதுவும் சின்னவெங்காயம். சோற்றுக்கு வெஞ்சனம் வேண்டாம்.வெங்காயம்,பச்சை மிளகாய்,உப்பு பொதும்.பழைய சோற்றுக்கு இவை இருந்தால் ஒரு வெட்டு வெட்டிடலாம்.
சிலோன்,சிங்கப்பூர், மலேசியா என்று அனுப்புவார்கள்.பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு இதுதான் "மைய" உணவு.சிலொனுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக போகும். தெயிலைத் தோட்ட தோழிலாளர்களுக்காக அனுப்புவர்கள். யாழ்ப்பாணத்திற்கும் பொகும். யாழ்பாணத்தில் அப்போதெல்லாம் பனங்காடுகள் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
பனங்குடலில் பாடுபடும் மக்களுக்கு பனம்பழம் ஒருவெளைஉணவு.அதோடு,பனங்கிழங்கு, நுங்கு,பதனீர், கள்ளூ விளைவிப்பார்கள். பனம்பழம் மிகவும் ருசியாக இருக்கும்.வாசனை தூக்கி அடிக்கும். சிறு வயதில் அனுபவித்து உண்டிருக்கிறேன்.தாழ்த்தப்பட்ட இவர்களை "பனஞ்சூம்பிகள்" என்று மேல் வகுப்பினர் அழைப்பார்கள். ஒரு வேளை அரிசி சோறு உண்டு அதற்கு வெஞ்சனம்தான் "ஈருள்ளீ'"
சின்னவெங்காயத்தை சிலோனுக்கு அனுப்பும் பொது அதற்கான ஆவணங்களொடு இன்சூரன்ஸ் சான்றுகளையும் இணைக்க வெண்டும்.இல்லை யென்றால்.கப்பலில் ஏற்றமுடியாது.தூத்துக் குடி நகரத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டு காத்திருக்கும்.கொழும்பு துறைமுகம் போக ஆறு மணி நேரம் ஆகலாம்.இந்த ஆறுமணிநெரத்திற்காக இன்ஸுரன்ஸ் கட்டணம் தேவையா என்று கருதும் வியாபாரிகள் உண்டு.
பொது இன்சூரன்ஸ்( GeneraL) துறையில் முதலில் பாலிசி கொடுப்பதில்லை. Cover note என்று ஒரு காகிதத்தைக் கொடுப்பார்கள். தவிர பொது இன்சூரன்ஸ் மாலை 4மணிக்கு ஆரம்பித்து மறுநாள் மாலை 4மணிக்கு முடியும். வெங்காய வியாபரி யிடம் கம்பெனி கட்டணத்தை வசூலிக்கும்.கணக்கில் காட்டாது. தூத்துக்குடியிலிருந்து கொழும்பு போய்ச்செர்ந்ததும் அங்கிருந்து தந்தி வரும்.வியாபாரி,கம்பெனி, கப்பல் ஏஜெண்டு கட்டணத்தை பங்கு போட்டுக் கோள்வார்கள்.சிக்கல் வந்தால்,கணக்கில் காட்டி நட்டஈடு பெற்று விடுவார்கள்.
ஒன்றரையணா வெங்காய வியாபரத்தில் இவ்வளவு தில்லு முள்ளு பண்ணமுடிகிறது என்றால் கோடிக்கணக்கில் வியாபாரம் பண்ணு பவர் என்ன இளிச்ச வாயரா?
5 comments:
எப்போதும் பொது மக்கள் தான் இளிச்சவாயர்கள் :(
எப்போதும் பொது மக்கள் தான் இளிச்சவாயர்கள் :(
சரியாச் சொன்னீங்க கனா. நாம தான் இளிச்ச வாயர்கள். மனைவி ஊருக்கு போயிருக்காங்க. தோசை ஊத்தினேன். சட்னிக்கு வெங்காயம் இல்லாம மிளகாய் பொடியும் பூண்டும் மிக்ஸ் பண்ணி தொட்டு சாப்பிட்டேன்.
Kodumayaana vishayam thaan!
romba sariyaa sonneenga!
Rightly said...
Post a Comment