Saturday, December 25, 2010

சாரு நிவேதிதாவின் "இரண்டாவது ஆட்டம்"

சாரு நிவேதிதாவின் "இரண்டாவது ஆட்டம்"


சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரின் படைபுகள் எதையும் நான் படித்ததில்லை.நண்பர்கள், இலக்கிய அன்பர்கள் மூலமாக அவரைப்பற்றி தெரிந்துகொண்டேன் எல்லோருமே எதிர்மறையான கருத்துக்களையே சொன்னார்கள் சமீப காலங்களில் அவருடைய கட்டுரைகளைப் படித்து வ.ருகிறேன.. வெறுப்பை உமிழ்வார். "விஜய் டி.வி" யில் எனக்கு பணம் கொடுக்காமல் விட்டார்கள் என்று கூறியிருந்தார். அதன் பிறகு "நீயா?நானா? நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப்பார்த்தேன்.

"மனம் கொத்திப் பறவை" என்று ஒரு தொடர் விகடனில் எழுதி வருகிறார். அதில் சில வாரம் முன்பு மதுரையில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் மதுரையில் நாடகம் போட்டபொது சிலா தாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.என்ன நாடகம்? ஏன் தாக்கினார்கள்?யார் யார் தாக்கினார்கள்.?

நாடகவியல் (Dramaatics) படித்தவன் என்ற முறையில் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். நவீன நாடக ஆசிரியர்களில் அமெரிக்க நாடக ஆசிரியர் டேன்னசி வில்லியம்ஸ் எனக்குப்பிடித்தவர்களில் ஒருவர்.அவருடைய நாடகமான Cat on a Hot tin Roof அமெரிக்காவின் பிராட்வேயில் சக்கைபோடு போட்ட நாடகம். பின்னர் திரைப்படமாக வந்தது.எலிசபத் டெய்லரும்,மாண்ட்கோமரி கிளிஃப்ட் ம் நடித்தது. மிகசிறந்த கால்பந்தாட வீரன். அவனுக்கு "ஓரினச்சேர்க்கை" பழக்கம் உண்டு.அவன் திருமனமாகி தாம்பத்திய வாழ்வில் ஈடுபட இந்தப்பழக்கத்திலிருந்து விடுபட அவன் படும் பாடுகள் தான் கதை. இந்தியாவிலும் பரவலாக வவேற்கப்பட்ட படம்.

மதுரையில் மகாத்மா மாண்டிசெரி பள்ளி யிருக்கிறது.3000 மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளி. அதன் வளாகத்தில் தான் சாரு நிவேதிதா "இரண்டாம் ஆட்டம்" என்று நாடகம் போட்டார்.நாடகத்தின் கரு "ஓரினச்சேர்க்கை." அந்தக் கருவுக்கு வெஞ்சனமாக "சுய இன்பம்" வில்லியம்ஸ் நாடகத்தில் இல்லாதது என்ன இருக்கும் என்று பார்க்க விரும்பினேன். வேறுபணியின் கரணமாக முடியவில்லை

போன இளஞ்ர்கள் வில்லியம்ஸ் நாடகத்தில் இல்லாத்தைப் பார்த்தார்கள்." ஓரினச்சேர்க்கை "யும்,சுய இன்பமும்" காட்சிபடுத்தப்பட்டிருந்தது.மேடை யேறி நாடகத்தை நிறுத்தச் சொன்னார்கள். தகராறு நடந்தது. அப்போது தடுத்தவர்கள், இப்போது மதுரைபல்கலையில் பெராசிரியராக இருக்கும் டாக்டர்ரவிகுமார் என்ற ஸ்ரீரசா,தீயாணைப்பு அதிகாரியக இருக்கும் ஆருமுகம்.தோழர் ராகவன், ஆசிர்யர் ஷாஜகான் ஆகியோர்.நாடகத்தை போடவேண்டும், அது மனித உரிமை என்று சாரு நிவேதிதாவை ஆதரித்து வந்தவர்கள் டாகர் கே.ஏ. குணசெகரன்,பொதியவெற்பன் ஆகியோர்.

சாரு நிவேதிதா பாதி உண்மையைச் சொல்லும் பழக்கமுள்ளவர் என்று தான் படுகிறது.

5 comments:

Aathira mullai said...

மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஐயா. சாரு நிவேதிதா முக்காலும் உண்மையைச் சொல்பவர். அதனாலேயே சக எழுத்தாளர்களால் பித்தன் என்றெல்லாம் ஏசப்பட்டிருப்பார்.

சென்ற புத்தக்க் கண்காட்சியின் போது எழுத்துலக மொக்கைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தில் ராஜ்மோகன், சாருநிவேதிதா இருவரும் அடிபட்டவர்கள்.

சிவகுமாரன் said...

சாருநிவேதிதா தன்னை ஒரு womanizer என்று சொல்லிக்கொள்பவர். காபரே, pub,bar போன்றவற்றில் கிடைத்த அனுபவங்களை பெரிய சாதனை போல சொல்லிக்கொள்பவர். பெரிய கண்ணதாசன் என்று நினைப்பு. இன்னும் கொஞ்சம் கார சாரமாய் எழுதியிருக்கலாம் நீங்கள்.

அப்பாதுரை said...

நானும் சாரு நிவேதிதா ஜெயமோகன் எல்லாம் படித்ததில்லை; இவர்களைச் சுற்றி இருக்கு பரபரப்பும் sensationalismம் நெருங்க விடாமல் தடுக்கிறது. டெனசி விலியம்சின் நாடகத்தைப் போட்டாரா, அல்லது அதன் அடிப்படையில் அவரே எழுதிய வேறு நாடகமா?

இந்தி நடிகர் நசிருதீன் ஷா இது போல் ஒரு நாடகத்தை நடத்தியதாகவும் அரங்கிலிருந்த இளைஞர்கள் காட்சியில் லயித்து தாங்களும் பங்கெடுத்துக் கொண்டதாகவும் படித்திருக்கிறேன் :)!

சாநியின் நாடகம் எப்படியோ தெரியாது, ஆனால் இது போன்ற நாடங்களை நடத்தவும் பார்க்கவும் தமிழ்நாட்டில் முடிவது வியப்பாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது - நானறிந்த வரை சேகர் மோகன் போன்றோரின் அசட்டுத் துணுக்குத் தோரணங்களே நாடகங்களாக வந்து கொண்டிருந்தன.

பதிவு வெளிச்சத்துக்கு நன்றி.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! மதுரையில் பீப்பிள்ஸ் தியெட்டர் என்ர நாடகக்குழு நாடகங்களை நடத்திவந்துள்ளது. " வண்ணங்கள் வேற்றூமைப்பட்டால்" என்றகாஸ்யபனின் நாடகத்தை தமிழகம் பூராவும் பொட்டவர்கள் அவர்கள். பிரளயனின் செனனைநாடகக்குழு,,மு.ராமசாமியின் நீஜ நாடக இயக்கம், என்று பல உண்டு. சப்தர்ஹஷ்மி நாடகக்குழு வீதி நாடகங்களப் போட்டுவருகிறார்கள்.சென்னைமட்டுமல்ல தமிழகம்_காஸ்யபன்.

kashyapan said...

வில்லியம்ஸின் நாடகத்தை பூடவில்லை. எதோ தழுவல் என்கிறார்கள்.காஸ்யபன்