Thursday, December 30, 2010

தெய்வீக அற்புதமும்-சமூக அற்புதமும்

(Divine Mirracle and SOcial Mirracle)


தெய்வீக அற்புதமும், சமூக அற்புதமும்

இரண்டு நாட்களுக்கு முன்பு டாக்டர்.ஜாண் செல்லத்துரை அவர் குடும்பத்தொடு என்வீட்டிற்கு வந்திருந்தார் சிறந்த காந்தீயயவாதி..இந்திய அமைதி மையத்தின் இயக்குனர்.பல்வேறு தத்துவார்த்த பொக்குகள் பற்றி அவருடன் விவாதிப்பேன். அப்ப.டித்தான் தெய்விக அற்புதம் பற்றீயும் விவாதம் வந்தது.

ஏசுவானவர் மலைப்பிரசங்கம் பற்றி பெசினோம். மூன்று நாள் மக்கள் அவர் பேச்சை மெய்மறந்து கேட்கிறார்கள்.அவரிடம் அவர்கள் பசியார உணவுப்பொருள் இல்லை.இருந்தது ஐந்துரொட்டித்துண்டுகளும் மூன்று மீன் துண்டுகளுமே வந்திருந்த சுமர் 5000 பெரும் பசி ஆறு கிறார்கள்.இது தெய்வீக அற்புதம். எசுவுக்கு முன்பு மொசஸ், அதற்குமுன்பு ஆப்ரகாம் இப்படி ஒவ்வொருவர் காலத்திலும் ஒரு வாழ்க்கை முறை இருந்திருக்கிறது. .ஆப்ரகமின் பெரன்கள் தங்கள் சகொதரிக்காக் நாற்பத்தாறு பேரைக்கொன்று விடுகிறார்கள். அதாவது கொலை பழிவாங்குதல் என்பது சர்வ சாதாரனம். மோசஸ் தன் காலத்தில் இதனை மாற்றுகிறார்..புதிதாக முறைமையை மாற்றுகிறார். கட்டளையிடுகிறார்.ஒன்றுக்கு ஒன்று.ஒரூயிருக்கு ஒரூயிர். ஒரு பல்லுக்கு ஒரு பல். ஒரு கண்ணுக்கு ஒருகண் என்று தண்டனை முறைமையை மாற்றுகிற.ர்.இதற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏசு வருகிறார்.அன்பை வழிமொழிகிறார்.அன்பின் மூலம் தான் வாழமுடியும் என்று போதிக்கிறார்.ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு என்கிறார்.

காட்சி மாறுகிறது. நாம் வீட்டில் இருக்கிறோம். எனக்கும் என்மனைவிக்கும் மட்டுமே உண்வு இருக்கிறது.இரண்டு நண்பர்கள்வருகிறார்கள் அவர்களையும் உணவருந்தச் சொல்கிறோம் அவர்கள் இப்போதுதான் சாப்பிட்டு வருகிறோம் என்கிறார்கள் அது உண்மையில்லை என்பது நமக்கு தெரியும்.எங்களுக்கும் பசியில்லை வருங்கள் சாப்பிடுவோம் என்கிறொம்.இது உண்மையில்லை என்பது வந்தவர்களுக்கும் தெரியும்.உண்கிறொம்.ஒரு ரொட்டி மிஞ்சுகிறது.அது.அன்பின் மிகுதி.வந்தவர்கள் பசியாரட்டும் என்று நாங்கள் விட்டுவைக்க,இருப்பவர்கள் பசியாரட்டும் என்று வந்தவர்கள் விட்டுவைத்த அன்பின் மிகுதி.

மலைப் பிரசங்கம் கெட்க வந்தவர்கள் மூன்று நாள் சாப்பிடாமலா இருந்தர்கள்? அழகர் ஆற்றிலிரங்கும் திரு.விழாவுக்கு கட்டுச்சொறொடுதானே போகிறோம். மலைபிரசங்கத்திற்கும் அப்படித்தானே வந்திருப்பார்கள்.? ஏசு போதித்த அன்பு , உணவு இருப்பவன் கொண்டுவந்த உணாவு தீர்ந்து விட்டவனுக்கு பகிர்ந்தளிக்கத் தூண்டியிருக்காதா?அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பசியாற்றிக்கொண்டிருக்க மாட்டார்களா?

இந்த மனிதர்கள்மனத்தில் இந்த சமுகத்தின் மனத்தில் இந்த அற்புதம் நிகழ்ந்திருக்காதா?

பின்னாளில் இந்த சமூக அற்புதம் தெய்வீக அற்புதமாகியிருக்க முடியாதா?

(என் அன்புத் தோழர்களுக்கும்,பதிவுலக அன்பர்களுக்கும் ஏசு சகாப்தத்தின் 2011 ஆன்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறென்.இந்த அற்புதத்தை விளக்கிய டாக்டர் ஜாண் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்)

14 comments:

சுந்தர்ஜி said...

அற்புதமான பகிர்வு காஸ்யபன் சார்.

பகிர்தலில்தான் அன்பு கொழிக்கிறது.

ஒரு கதை நினைவில்.

தாகம் மிகுந்து வறட்சியில் இரு மான்கள்.வழியில் ஒரு சிறிய குட்டையில் கொஞ்சமாக நீர்.

இரண்டுக்கும் தெரியும் அந்த நீர் இருவருக்கும் போதுமானதல்ல என.

இரண்டும் குடிப்பது போல் நடிக்க நீரும் தாகமும் அப்படியே இருந்தன.அன்பு தாகத்தைத் தணித்தது.

இதேதான் ஒருமுறை தான் வாழப்போகிறோம் என்பவர்கள் வாழும் வாழ்க்கை.

உங்களுக்கும் என் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் காஸ்யபன் சார்.

ஹரிஹரன் said...

அன்பின் மிகுதியாலும் விருந்தோம்பலானாலும் ஒரு ரோட்டி மிச்சமாகியிருக்கிறது.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

பாரதசாரி said...

வழக்கம் போல் அருமையான பகிர்வு... புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

சிவகுமாரன் said...

படித்துக் கொண்டிருக்கும்போது மான் கதை நினைவுக்கு வந்தது. சுந்தர்ஜி பகிர்ந்துவிட்டார்கள்.
அய்யன் சொல்லிவிட்டான் அற்புதருக்கு முன்னரே
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்-நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை "
பகிர்வுக்கு நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா.

உங்கள் புதிய புகைப்படம் பழையதை விட மிக அழகாக உள்ளது.

kashyapan said...

சிவகுமரன்! புகைப் படம் அழகயிருக்கிறது..என்ற உங்கள் கவிகுரும்பும் அழகாயிருக்கிறது!---காஸ்யபன்

இளங்கோ said...

பதிவு நெகிழ வைத்து விட்டது. புதியதொரு கோணத்தில் சிந்திக்க வைத்ததற்கு நன்றிகள்.

தங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

John Chelladurai said...

அய்யா வணக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் அம்மாவிற்கும், இடுகை வட்ட நண்பர்களுக்கும்.

விருந்தோம்பலில் மேம்பட்டவர் நீங்கள் என்பதனை நேற்றைய உபசரிப்பில் மீண்டுமொருமுறை காட்டிவிட்டீர்கள் அம்மாவும் நீங்களும்.

விருந்தோம்பலின் ஒரு இலக்கணம் விருந்தினருக்கேற்ப படைப்பது.
கருத்தை இரத்தின சுருக்கமாகப் படைப்பதும் விருந்தோம்பலின் ஒரு இலக்கணம் என, சொல்ல வந்த கருத்தையொட்டிய பண்பாட்டை அதனை படைத்த விதத்திலும் கையாண்டது எழுத்தாளரின் நேர்த்தி.

நன்றி ஐயா என் பெயருக்கும் அதில் இடம் கொடுத்ததற்கு.
அன்புடன்,
ஜான் செல்லதுரை
நாக்பூர்

John Chelladurai said...

Ayya visit my blog at
http://johnchelladurai.blogspot.com

Nagasubramanian said...

அன்பின் மூலம் ஒவ்வொருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் போதே வாழ்வு அர்த்தம் பெறுகிறது!!!
Happy new year!

இனியவன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

புகைப்பட மாற்றத்தை நானும் கவனித்தேன். புத்தாண்டுக்கா?
வாழ்த்துக்கள்.

அற்புதத்தில் தெய்வீகம் இருக்கிறதா?

kashyapan said...

தெய்வீகம் என்பதை காரணகாரியப் படுத்துவதுதான்.இடுகையின் நோக்கம்.காரியத்திற்கான காரணத்தை ஆராயும்போது தெய்வம் மறைந்துவிடுமே ---காஸ்யபன். !(நசிகேதனை காலன் வீட்டில் விட்டுவிட்டு சுற்றிக்கொண்டிருக்கிறீர்களே)

அப்பாதுரை said...

ஆகா! beautiful!
>>>காரியத்திற்கான காரணத்தை ஆராயும்போது தெய்வம் மறைந்துவிடுமே

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.