Wednesday, January 12, 2011

இதயமில்லா உலகத்தின் இதயம்....

இதயமில்லா உலகத்தின் இதயம்


மதுரையில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்த காலம்.என்னோடு ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் பரபரப்பாக இருப்பார்.இரவு பஸ்மூலமாகவோ,அல்லது ரயில் மூலமாகவோ சென்னை கிளம்பி விடுவார்.சனிக்கிழமை மதியம் கிண்டியில் "அஸ்வமேத யாகம்". அன்று இரவு பங்களுரு.ஞாயிரு அங்கு குதிரை யாட்டம். இரவு பஸ்பிடித்து மதுரை வந்துவிடுவார். போகமுடியவில்லையென்றால், மதுரையில் உள்ள "புக்கீ" களிடம் பணம் கட்டுவார். நிகர லாபம் அவருடைய பாண்ட், சட்டை, உள்ளாடை வரை கடன். அலுவலகம் வரமுடியாது. கடன் காரர்கள் பிடித்துக் க்கொள்வார்கள்.அலுவலகம் வருவதில்லை.எங்கே போனார் என்பது இன்று வரை தெரியாது. பாவம்.அவருடைய மனைவி இரண்டு பெண்குழந்தைகளொடூ தவித்துப் போனர்.ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தாலாவது வருங்கால வைப்புநீதி, பணிக்கொடை ஆகியவற்றை வாங்கித்தரமுடியும். நிர்க்கதியாய், நிராதரவாய் விட்டுப் போய் விட்டார்.

அப்பொதெல்லாம் வைகை ஆற்றில் தண்ணீருக்காக நட்ட நடுவில் ஊத்து போட்டிருப்பார்கள். நண்பரின் மணைவி குளிக்கப் போவதாக பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டு மாற்றுத்துணியை குடத்தில் ஒளித்து வைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.இரண்டு பெண்குழந்தகளொடு அவர் எங்கே சென்றார் என்பது தெரியாது.இது நடந்து பதினைந்து வருடமிருக்கும்.

ஒருமுறை சென்னையிலிருந்து பஸ்ஸில் மதுரை வந்து கொண்டிருந்தேன் மாமண்டூர் அருகிள் உணவிற்காக வண்டி நின்றது. நான் சாலையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.சாலையில் ஆணும் பெண்ணுமாக கூட்டம்கூட்டமாக .பொய்க்கொண்டிருந்த்தார்கள்.லட்சக்கணக்கில் செவ்வாடை உடுத்தி அம்மா "சக்தி" வழிபட்டுக்காக மேல்மருவத்தூர் நேர்த்திகடன் செலுத்த சென்று கொண்டிருக்கிறார்கள். எனக்கு "குரு,குரு" என்ற உஅணர்வு ஏற்பட்டது. ஒரு அம்மா தயங்கியபடி என்னையே பார்துக்கொண்டிருக்கும் உனர்வு தட்டியது. நானும் அவரைப் பார்த்தேன்.என் வயிறு கலங்கியது.

"ஐயா! நல்லா இருக்கீங்களா? என்னத்தெரியுதா?"

அதே அம்மையார்தான் .இப்போது சென்னையில் இருக்கிறாராம். கடங்காரர்களுக்கு பயந்து சோல் லாமல் கிளம்பினாராம்.சென்னயில் அண்ணன் வீட்டில் அடக்கலம்.அண்ணன் ஒர்க்ஷாப்பில்மெக்கானிக். எத்துணை நாள்முடியும்.ஐந்துவருடமிருந்திருக்கிறார். பின்னர் ஒடிப்போன கணவரின் சகோதரர் வீட்டில் இருந்திருக்கிறர்.மைத்துனர் ஆட்டோ ஓட்டுனர்.பெண்குழந்தகள் பெரியவர்களாகிவிட்டனர்தனியாக வந்துவிட்டனர். மூத்தவள் "கார்மண்ட்" கம்பெனியில் வேலைபார்க்கிறாள்.இரண்டாமவள் ஒரு மருந்துக்கடையில் "சேல்ஸ்கேர்ல்." எனக்கு பிறகு இந்தப் . பெண்களின் கதிஎன்ன? இவங்களுக்கு ஒரு கலயாணம் காட்சி பண்ணனுமே? நிராதரவான எனக்கு அந்த "அம்மா சக்தி" தான் துணை" அவகிட்ட போறேன்"என்றார்.

இவர்களுக்கு யார் துணை? " அம்மா! நான் மதுரைல தான் இருக்கேன். "என் சட்டப் பையிலிருந்து நூறு ரூ தாளை எடுத்துக் கொடுத்து' பிள்ளை களுக்கு எதாவது பணியாரம் வாங்கிட்டு போங்கம்மா! என்றென்.

"ஐயா! திரும்பி போக காசிலாமத்தான் வந்தென். "அம்மா சக்தி" தான் உங்ககிட்ட நூறு ரூ கொடுத்து விட்டுருக்கா. இல்லைனா நீங்கயாரு/ நான் யாரு? உங்கள இந்த ரோட்ல சந்திக்க முடியுமா? சக்தி மகிமையே தனிதான் என்றார்.கூட்டத்தொடு கலந்து நடக்க ஆரம்பித்தார்.

ஏதுமற்றவர்கள், ஏனோதானோக்கள்,ஆதரவற்றவர்கள் விடும்பெருமூச்சின் பெருமூச்சுதான் இறைநம்பிக்கை.

இதயமற்ற உலகின் இதயம் தான் இறைநம்பிக்கை

ஆன்மா மரத்துப்போன வர்களின் ஆன்மாதான் இறை நம்பிக்கை என்றார் மார்க்ஸ்.

தலைவலி வியதியின் அறிகுறி.வியதியைக் காண வேண்டும். மதம் தலைவலிதான் என்றார்

பதிவர் அப்பாதுரை அவர்கள்

ஜண்டு பாம்,டைகர்பாம் இந்த தலைவலியைப் போக்காது என்றர் என் அருமை கவிஞர் சிவகுமரன்

அனுபவம் இவர்களை மார்க்ஸை நெருங்க வைக்கிறதோ!

10 comments:

Nagasubramanian said...

//ஏதுமற்றவர்கள், ஏனோதானோக்கள்,ஆதரவற்றவர்கள் விடும்பெருமூச்சின் பெருமூச்சுதான் இறைநம்பிக்கை.

இதயமற்ற உலகின் இதயம் தான் இறைநம்பிக்கை

ஆன்மா மரத்துப்போன வர்களின் ஆன்மாதான் இறை நம்பிக்கை என்றார் மார்க்ஸ்.//
Superb thought sir

அப்பாதுரை said...

குடத்துடன் போன வரி திடுக்கிட வைத்தது.
எப்படியோ பிழைத்தார்களே.. ஆச்சரியம் தான். (ஆமாம், இந்த மாதிரி ஊர் ஊரா ஓட வச்சது சக்தினு சொல்லலை பாருங்க :)

hariharan said...

//ஐயா! திரும்பி போக காசிலாமத்தான் வந்தென். "அம்மா சக்தி" தான் உங்ககிட்ட நூறு ரூ கொடுத்து விட்டுருக்கா. இல்லைனா நீங்கயாரு/ நான் யாரு? உங்கள இந்த ரோட்ல சந்திக்க முடியுமா? சக்தி மகிமையே தனிதான் என்றார்.கூட்டத்தொடு கலந்து நடக்க ஆரம்பித்தார்.//

இப்படித் தான் நிறையப்பேர்.

என் நண்பர் ஒருவரின் மனைவி,குழந்தைகளுடன் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளகியது, உயிருக்குப் போராடிய அந்த நேரத்தில் அருகிருந்த கிராம மக்கள் வந்து உதவி பக்கத்திலிருந்த நகர மருத்துவமனைக்கு அட்மிட் செய்தார்கள். அவர் இயேசுவை நம்புகிறவர், அற்புதம் நிகழ்ந்தது அந்த கிராம மக்கள் குறித்த நேரத்தில் உதவியதால் அவர்கள் பிழைத்தனர் கார் ஈஸ் கிரேட் என்பார். நான் நீண்ட நாட்கள் கழித்து அந்த கடவுள் இந்த விபத்தைத் தடுத்திருந்தால் நன்றாக இருக்குமென்றேன்.

kashyapan said...

உண்மைதான் ஹரிஹரன். இப்படிப்பட்டவர்களையும் வென்றேடுக்க வேண்டியது நம் பொறுப்புஇல்லை யென்றால் மதவாதிகள் பக்கம் இவர்கள் போக ஆரம்பித்துவிடுவார்கள்..தீண்டுக்கல் தோல் பதனிடும் தொழிளாளர் ஒருவர்.ஏசு மீது மிகுந்த பக்தி உள்ளவர் பாதிரியார்களோடு செர்ந்து கொண்டு கம்யூனிஸ்டுகளை அடிப்பார்.துவம்சம் செய்வார்.அவருடைய அனுபவம் அவரை மாற்றியது. பின்னாளில் முனிசிபல் தொழிலாள்ர்களின் மாநிலத்தலைவரானார்.சிறந்த கம்யூனிஸ்டானார்.திண்டுக்கல் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகநின்று இரண்டு முறை எம்.எல்.ஏ வாக பணியாற்றினார்.எஸ்.ஏ.தங்கராஜ்தான் அவர். .
---காஸ்யபன்

பாரதசாரி said...

இத்தருணத்தில் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு - நன்றி ஐயா

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பசித்தவனுக்கு அப்பம் தான் இறைவன் அல்லவா? இறைமை என்பது ஒரு உண்ர்வு மட்டுமே! நம் தேவைகள் ஓருருக் கொண்டு நிற்கிறது, இறைவனாய் என்பது அடியேன் எண்ணம்!


பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.ஆர்.

venu's pathivukal said...

அருமையான பதிவு தோழா..

நீங்கள் அந்த அம்மாவைச் சந்தித்தது பதிவில் கொண்டு விட்டிருக்கிறது. அந்த நிலைக்கு ஆளாக்கிய காணாமல் போன கணவனை ஏன் ஒரு சிறுகதையில் கொண்டு வந்து விசாரிக்கக் கூடாது? செய்யுங்களேன்.

எஸ் வி வேணுகோபாலன்

venu's pathivukal said...

அருமையான பதிவு தோழா..

நீங்கள் அந்த அம்மாவைச் சந்தித்தது பதிவில் கொண்டு விட்டிருக்கிறது. அந்த நிலைக்கு ஆளாக்கிய காணாமல் போன கணவனை ஏன் ஒரு சிறுகதையில் கொண்டு வந்து விசாரிக்கக் கூடாது? செய்யுங்களேன்.

எஸ் வி வேணுகோபாலன்

சிவகுமாரன் said...

இறை நம்பிக்கை சிலருக்கு பாரம்பரியமாக வருவது. சிலருக்கு அனுபவத்தால் வருவது. என் இறை நம்பிக்கை அனுபவம் சார்ந்தது. மார்க்சீயம் இறை நம்பிக்கைக்கு எதிரானது இல்லை என்று நான் நம்புகிறேன்.

kashyapan said...

1956ம் ஆண்டு என்று நினைக்கிறேன். பாலக்காடில் நடனந்த மாநாட்டிற்கு ஏ.கே.கோபாலன் வந்து கொண்டிருக்கிறார். இருமுடி கட்டிய பக்தர்கள் எ.கெ ஜி ஜிந்தாபத்! சாமி சரணம் ஐயப்பா! என்று கோஷம் பொட்டுக்கொண்டே வரவேற்றார்களாம். தடுக்க வந்த தொண்டகளை ஏ.கே.ஜி தடுத்தாராம்.அனுபவம் அவர்களை மாற்றும் என்றாராம் அந்த மக்கள் ஊழியன்!. சிவகுமரன்!சரிதானா!---காஸ்யபன்