Saturday, April 23, 2011

ஆல்ஃப்ரட் பிண்டொவுக்கு ஏன் கோபம் வந்தது?.......

ஆல்ஃப்ரட் பிண்டொவிக்கு ஏன் கோபம் வ்ந்தது?.....


ஆல்ஃப்ரட் பிண்டோ கோவா மநிலத்தைச்சேர்ந்த இளைஞன்.ஆங்கிலோ இந்தியன். கார் மெகானிக். மும்பையில் ஒரு காரெஜில் பணியாற்றுகிறான். அவன் கம்பெனிக்கு பெரும் பணக்காரர்கள் தான் வாடிகையாளர்கள். புதுப்புது வெளிநாட்டுக் கார்கள் வரும். பிண்டொவுக்கு வெளிநாட்டுக் கார்களை ஓட்டுவதில் பிரியம் அதிகம்.முதலாளியும் அவனைத்தான் வெளிநாட்டுக் கார்களை ஓட்டச்சொல்லுவார். பணக்காரவீட்டு இளைஞர்களும்,யுவதிகளும் வந்தால் முதலாளிபிண்டொவிடம் தான் அ னுப்புவார். வெள்ளைகாரன் மாதிரி அவன் பெசும் ஆங்கிலத்தில் வாடிகையாளர்கள் மயங்கிவிடுவார்கள். தங்கள் அரை குறை ஆங்கிலத்தில் அவனோடு பெசுவதன் மூலம். அவர்களுக்கு திருப்தி. பிண்டோ எப்போது வேண்டுமானாலும் கார்களை எடுத்துச்செல்லலாம்.

இதனால் பிண்டோ மற்ற தொழிலாளர்களொடு சேரமாட்டன் முதலாளியின் மகன் தான் அவனுக்கு நெருக்கமானவன்.வேலைமுடிந்ததும் காரை எடுத்துக்கொண்டு இருவரும் சுற்று வார்கள் .முதலாளி மகனை வீட்டில் விட்டுவிட்டு காரை தன் வீட்டிற்கு பின்டோ கொண்டு போவான். பிண்டொவின் காதலி ஸ்டெல்லா. அவளுக்கு இந்த .Bloddy Workers ஐ எல்லாம் பிடிக்காது. பிண்டொவுக்கும்தான்.

பிண்டொவின் தந்தை ஒரு மில்லில் வேலை பார்க்கிறார். அவர் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இருக்கிறார். பிண்டொவுக்கு இது பிடிக்கவில்லை.முதலாளியின் மகனுக்கு திருமணம் நிச்சயமாகிறது அவனுக்கு சீதனமாக அவனுடைய மாமனார் வெளிநாட்டுக் கார் ஒன்றை பரிசளிகிறார். பிண்டோ அந்தக்கரை ஒரு நாள் வெளியே எடுத்துக்கொண்டு போனான். .முதலாளியின் மகன் தன் புது மனைவியோடு அந்தக் காரில் செல்ல காத்திருக்க வேண்டியதாயிற்று. பிண்டோ வருவதரற்காக காத்திருந்தான்.நேரமாயிற்று அவனுக்கு கோபம்.ஆனாலும் பிண்டொவுக்காக மனைவியோடு காத்திருந்தான். பிண்டோ வந்தான்
" பிண்டோ!.இந்த்க் காரை என் எடுத்தே?"
" ஏன்? நான் எடுக்கக் கூடாதா?"
முதலாளி மகனுக்கு கோபம் கோபமாக வந்தது.வெளியில் காட்டிக் ஒள்ளாமல் "சரி!சரி! சாவியை கொடு"
பிண்டோ சாவியைத்தூக்கி போட்டான். அது முதலாலி மகனின் காலடியில் விழுந்தது. அவன் தன்மனைவியின் முகத்தை பார்த்தான் சுருங்கியிருந்தது. "Idiot! கொண்டுவந்து கைல கொடுக்க முடியாதா? அவ்வளவு திமிறா? உன்னையெல்லாம் வைக்க வேண்டிய இடத்தில வக்கணும்.சாவியை எடுத்து கைல கோடு" என்று கத்தினான். பிண்டோ சாவியை எடுத்துக் கொடுத்தான்.

மலையாளியும் வங்காளியும் ஒண்ணாகலாம் தெலுங்கனும் தமிழனும் ஒண்ணாகலாம். முதலாளியும் தொழிலாளியும் ஒண்ணாகமுடியாதா? பிண்டொவுக்கு கோபம் கோபமாகவந்தது.முடியாது என்பதால்..

1980ம் ஆண்டு இந்தியில் வேளிவந்தபடம். இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்கள் நடித்தார்கள். பிண்டொவாக நசுருதீன் ஷா ,மெக்கானிக்காக ஒம் பூரி,மகனாக அனில் தாவன், ஸ்டெல்லாவாக சபனா அஸ்மி, மற்றும் ஸ்மிதாபடீல்,சுலபா தேஷ் பாண்டே, அரவிந்த தேஷ் பண்டே என்று அற்புதமான நடிப்பு. அந்த ஆண்டு ஃப்லிம் ஃபார் விருது வாங்கியபடம் ரஷ்யா,ஜெர்மனி, பின்லாந்து, அமெரிக்கா என்ரு பரவாக வரவேற்கப்பட்டது இந்தபடத்தை சய்யது அக்தர்மிர்ஜா இயக்கினர் கதை அவருடையது.திரக்கதயை மிர்ஜவும், குந்தன் ஷாவும் அமைத்திருந்தனர். குந்தம் ஷாவைப் பற்றி தனியாக ஒரு இடுகை பொடும் அளவுக்குவிஷ்யமுள்ளது.

( எல்லாமே ஞாபகத்திலிருந்து எழுதுகிறென். ஆங்காங்கே பெயர்கள், சம்பவங்களில் தவறு இருக்கலாம். பொறுத்தருள வேண்டுகிறேன்.அடிபடையில் வித்தியாசமிருக்காது.கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம்)

11 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அருமையான கதை கொண்ட படம் இது காஸ்யபன் சார்.

தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நஸ்ருத்தின் ஷா-ஓம்பூரி-ஸ்மிதா பாடீல் இருக்கிறார்கள் என்றால் தைரியமாகப் பார்க்கலாம்.

என் அப்பாவும் இன்னும் கொல்கொத்தாவில் 60களில் பார்த்த வங்காளிப் படங்களைப் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டிருப்பார்.

நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு.

hariharan said...

படத்தை பார்த்துற வேண்டியதான். படத்தோட பேரே “ஆல்ஃப்ரட் பிண்டொவுக்கு ஏன் கோபம் வந்தது?.” இது தானா?

இராஜராஜேஸ்வரி said...

மலையாளியும் வங்காளியும் ஒண்ணாகலாம் தெலுங்கனும் தமிழனும் ஒண்ணாகலாம். முதலாளியும் தொழிலாளியும் ஒண்ணாகமுடியாதா? பிண்டொவுக்கு கோபம் கோபமாகவந்தது.முடியாது என்பதால்..
பணம் பணத்தோடு தான் .

S.Raman, Vellore said...

Excellent Post Comrade, Write about more purposeful & progressive Films

காமராஜ் said...

அருமை தோழர்....
ஆமாம் நஸ்ரூதீன்ஷா,ஷபனா ஆஸ்மி பழய்ய தூர்தர்ஷன் எவ்வளவு ஈர்ப்பான விஷயங்கள்,.

கப்தக் புகாரூன் தொடரின் அந்தக்கால டிமை நான்.

RVS said...

நிறைய தெரிந்துகொள்கிறோம் சார்! நன்றி! ;-))

சிவகுமாரன் said...

கதை அவ்வளவு தானா ?
அனுபவிக்கும் போதும் ஆட்டம் போடும் போதும் அவன் நட்பு தேவைப்பட்டிருக்கும். அந்த நட்பைக் கூட கள்ளக்காதல் போலத் தான் வைத்திருப்பார்கள் சில செல்வந்தர்கள்.

John Chelladurai said...
This comment has been removed by the author.
John Chelladurai said...
This comment has been removed by the author.
John Chelladurai said...

Ayya my poem on eco concern please read and comment
in peace
d john

http://johnchelladurai.blogspot.com/2011/04/obesea.html

John Chelladurai said...

aid...
It's a wonderful review. Your narration brings the whole story before my eyes.

while money is a great intoxication that blunts one's mind, heart and soul, it is equally true that,
'Unequal relationship would never last for long.' Reciprocity is the Mantra for lasting relationship. Reciprocity would be understandable only if it is in equal terms and on equal plane.