Sunday, May 01, 2011

அந்தப் பொன்மலை தீரர்கள்......

பொன்மலை தீரர்கள்....
1946ம் ஆண்டு நான்முதன் முதலாக நாகபுரி வந்தென். ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து சென்வரை S.I.R ரயிலில் வந்தோம்.அதன் பின்னர் சென்னையிலிருந்து M.S.M/B.N.R. நாகபுரி வந்தொம். எல்லா ரயில்களுமே தனித்தனி பிரிட்டிஷ் முதலாளிகளுக்குச் சொந்தமானது.
1946ம் ஆண்டு நேருவின் தலைமையில் இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது.தமிழ்நாட்டைச்செர்ந்த என்.கொபலசாமி அய்யங்கார் ரயில்வே அமைச்சரானார். பிரிட்டிஷ் முதலாளிகளிடமிருந்து ரயிலைப்பிடுங்கி நாட்டுடமையாக்கினார். உலகமே வியக்கும் பிரும்மாண்டமான இந்திய ரயிவே உருவானது.
தென் இந்திய ரயில்வே(S.I.R) யின் வொர்க்ஷ்ப் நகபட்டினத்தில் இருந்தது.அதனை திருச்சி பொன்மலைக்கு அப்போதுதான் கொண்டுவந்தார்கள். அங்குதான் தென் இந்திய ரயிவே தொழிலாளர் சங்கம் உதயமானது. அதன் தலைவர்களாக எஸ். பரமசிவம், எம்.கல்யாணசுந்தரம், அனந்தன் நம்பியார் ஆகியொர் செயல்பட்டனர்.
பிரிட்டிஷ் அரசு ,கல்யாணசுந்தரத்தையும், பரம்சிவத்தயும் கைது செய்து சிறையில் அடைத்தது. அனந்தன் நம்பியார் சங்கத்தைக் கவனித்துக் கொண்டார்.. பிரிட்டிஷ் அரசு சிறைஇருக்கும்போதே பரமசிவத்தைச்சுட்டுக்கொன்றது.
இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க முடிவு செய்யப்பட்டதும் இந்த சமயத்தில் தான். இந்திய சுதந்திரம் என்பது சுகப் பிரசவமல்ல. ஆயிரம் ஆயிரம் இந்து,முஸ்லீம், சீக்கிய தாய்மார்களின் கர்பப்பை கிழிக்கப்பட்டு பிறந்ததாகும். மதக்கலவரம் இரண்டுபக்கமும் மூண்டது. பாகிஸ்தானில்ல இந்துக்களும் சீக்கியர்களும் விரட்டப்பட்டனர். இந்தியப்பகுதியிலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டனர்.
இரண்டு பகுதியிலும் சிக்கிய அகதிகளை பாகிஸ்தானுக்கோ,இந்தியாவுக்கோ அனுப்ப ரயிலை ஒட்டமுடியவில்லை.ரயில் ஊழியர்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டனர். மராட்டியம்,உபி,பஞ்சாப், ம.பி குஜராத் பகுதியில் நடக்கும்கலவரங்களால் அவர்களை அனுப்ப முடியவில்லை.
நேரு கவலைப் பட்டார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசோடு ஆரம்பகாலத்திலிருந்தே தொடர்ப்பு கொண்டிருந்த வி.வி.கிரியைக் கலந்து ஆளொசித்தார்..ரயிலை ஓட்ட டிரௌவர்கள் வேண்டூம்.அவர்கள் வடநாட்டவர்களாக இருக்கக் கூடாது.தென் பகுதியிலிருந்து அனுப்பப் படவேண்டும் என்று முடிவாகியது.
வி.கிரி , பொன்மலைத்தொழர் அனந்தன் நம்பியாரைபேச. நம்பியார் தொழிலாளளை அழைதுப் பெசினார்."தொழர்களே! பணி ஆபத்தானது. ஆயிரம் ஆயிரம் மக்களின் உயிரைக் காக்கும் பணி. இதில் பணியாற்றும் தொழர்களின் உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாத நிலை." என்றார்.
அந்தப் புண்ணிய பூமியின் மைந்தர்கள் பதிமுன்று பெர் புரப்பட்டனர் அவர்களின் பெயர் எனக்குத்தெரியாது. ஒர்வர் மதுரையச்செர்ந்த நாராயணசாமி நாயுடு என்று கெள்விப்பட்டிருக் கிறேன். பெயர் .....
இன்றும் "வைகை" யில் செல்லும்பொது திருச்சி அருகில் அந்த மஞ்சள் பலகையில் "பொன்மலை" என்ற கருத்த எழுத்தை பார்க்கும் போது நெஞ்சம்விம்ம கைகளை குவிப்பேன்.

9 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என் கைகளும் உயருகிறது காஸ்யபன் சார்.

ஒரு கலவரத்தின் பின்னணியும் நிவாரணத்தின் பின்னணியும் எத்தனை துயர் நிரம்பியவை?

விட்டுக்கொடுத்தலும் நிதானமும் மதங்களாலும் மாமனிதர்களாலும் போதிக்கப்பட்டும் குருதியின் கொதிநிலை மிக எளிதானதாக இருக்கிறது சூடேற்ற.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு. படிக்க வேதனையாக இருக்கிறது

விடுதலைக்காக நிறைய ரத்தம் சிந்தியிருக்கிறோம்.

சிவகுமாரன் said...

அந்த வீரத் தியாகிகளை வணங்குகிறேன் அய்யா .எத்தனை தோழர்களின் தியாகங்கள் வரலாற்றால் மறைக்க மறக்கப் பட்டிருக்கிறது. காந்தியும் நேருவும் கேட்டுக் கொண்டதனால் மௌன்ட்பாட்டன் பிரபு மனமிரங்கிக் கொடுத்ததாக இன்னும் படித்துக் கொண்டிருக்கிறோம்.

vijayan said...

அந்த முகம் தெரியா வீரர்களின் த்யாகத்திற்க்கு தலை வணங்கு கிறோம் .அதே நேரத்தில் காந்தி நேரு பேர் மட்டுமின்றி ஜீவா,பாலா,akg ,ராம் மனோகர் லோஹியா,jp ,காமராஜ் ,மா.போ.சி போன்ற தளபதிகளையும்,எண்ணற்ற unsung heroes -யும் சரித்திரம் மறக்கவில்லை,விடுதலைக்கு எண்ணற்ற மறவர்கள் உயிர் பலி தந்தார்கள் என்பதை சரித்திரம் பதிவு செய்து வைத்து உள்ளது.தயவுசெய்து இனியாவது அந்த மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

kashyapan said...

விஜயன் அவர்களே! "இனியாவது அந்த மயக்கத்திலிருந்து விடுபடுங்கள் " என்கிறீர்களே! யார் விடுபடவேண்டும்? எந்தமயக்கத்திலிருந்து?---காஸ்யபன்.

www.eraaedwin.com said...

அன்பின் தோழர்,
வணக்கம். ஆறு மாதக் குழந்தையிலிருந்து முப்பது வயது வரை பொன்மலையில் வளர்ந்தவன். நீங்கள் கை எடுத்து கும்பிட்ட அந்த மஞ்சள் பலகையில் சாய்ந்து இரவில் படித்தவன். நெகிழ்ந்து போனேன். உண்மையை சொல்லுங்கள் இதை எல்லாம் உரிய முறையில் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுபோய் சேர்த்திருக்கிறோமா?

கண்களைத் துடைத்துக் கொண்டேதான் இண்டெலியில் ஓட்டுப் போட்டேன்.

மிக்க நன்றி தோழர்.

venu's pathivukal said...

அன்புத் தோழருக்கு

மே தினமே படித்திருக்க வேண்டிய - நான் ஏற்கெனவே வாசித்திருந்தாலும் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து சிலிர்த்துப் போகிற - உன்னதமான தியாக வரலாற்றுப் பதிவை இன்று பார்த்து நெகிழ்ந்தேன். கம்யூனிச இயக்கத் தலைவர்கள், தொண்டர்களின் மதிப்பு மிக்க அர்ப்பணிப்பு உணர்வும், அவர்களது அறைகூவலுக்குச் செவி சாய்க்கத் தயாராயிருந்த தொழிலாளி வர்க்கத் தோழர்களின் விசுவாசமும் இந்த தேசத்தின் அதிகாரபூர்வ வரலாற்றுப் புத்தகங்கள் மூலம் அடுத்தடுத்த தலைமுறைக் குழந்தைகளின் பாடசாலைக்குள் வைக்கப்படவேண்டியவை. தவிர்க்கப்படுபவை. இருட்டடிக்கப்படுபவை.

அது ஆண்டு 1987. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய மாநாட்டுக்கு முன் டிசம்பர் 13 அன்று பாரிமுனை பாலிமார் ஓட்டல் மாடியில் வைத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அப்போதைய DYFI உதவித் தலைவர் சுனில் சோப்ரா சொன்னார்:

பஞ்சாபில் எங்கள் தோழர்கள் தங்களது உயிரைத் திரணமாக மதித்து தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுகின்றனர். ஆனால் அரசாங்கம், அவர்களை, கொலை வழக்குகளில் சிக்க வைத்து நீதிமன்றத்தில் நிறுத்தி தீவிரவாத சக்திகளைப் பழி தீர்த்துக் கொள்ளச் சொல்லி காட்டிக் கொடுக்கிறது. நீதிமன்ற வளாகங்களில் சுடப்பட்டு சாகின்றனர் தேச பக்தி மிகுந்த எங்கள் தோழர்கள்...இந்த அராசுக்கு புத்தி இருக்கிறதா, இவர்களது நோக்கம் என்ன, எங்களை ஒழித்துக் கட்டிவிட்டு, இன்னும் தீவிரவாதம் ஓங்கட்டும் என்பதுபோல் செயல்படும் அரசைப் பற்றி எங்களால் கனிவாகச் சொல்ல முடியாது...

தீரமிக்க வரலாறுகளின் தொகுப்பு உங்களை அறியாமல் உங்கள் வலைப்பூவில் தொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை நேராக்கி, சீராக்கி புத்தகமாக ஆக்குங்களேன்.

எஸ் வி வி

அப்பாதுரை said...

ஆழமான நினைவோடை. எத்தனை விவரங்கள்!
இந்தப் பதிவு ஒரு விறுவிறுப்பான திரைப்படக் கரு.

hariharan said...

மேதின வாழ்த்துக்கள்.