Wednesday, June 22, 2011

ஈஸ்வர அல்லா தேரே நாம் -----------

ஈஸ்வர்-அல்லா தெரே நாம் .....

அண்ணல்காந்தி அடிகளுக்கு மிகவும் பிரியமான பாடல்கள் "வைஷ்னவ ஜனதோ"வும் "ரகுபதி ராகவ "வும் ஆகும். சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றிருந்தபோது "வைஷ்ணவ" நர்சி மெத்தா என்ற சித்த புருஷரால் எழுதப்பட்டது என்று அறிந்தேன்.

சென்னையில் ஒலிநாடாவாங்கினேன். போட்டுப்பார்த்தபோது "ஈஸ்வர் அல்லா " என்ற வரிகள் இல்லை. கடைக்காரரிடம் விசாரித்தபோது மூலப் பாடலில் அந்த வரிகள்கிடையாது என்று கூறினார். பாடியது விஷ்னு திகம்பர் பலுஸ்கர் என்று அட்டையில் போட்டிருந்தது.அவருடைய வாழ்க்கைகுறிப்பாக அவர் சுதந்திரப் போராளி, கண்பார்வையற்றவர், சிறந்த இசைக்கலைஞர் "தண்டி"யாத்திரையின்போது காந்தியடிகளின் பிரர்த்தனைக்கூட்டத்தில் பாடுவார் என்றுமிருந்தது. (பலுஸ்கர் பற்றிதனியாக இடுகை போடுவேன்).

"ரகுபதி ராகவ "பாடலை எழுதியது யார்? "ஈஸ்வர் அல்லா" ஏன் ஆரம்பத்தில் இல்லை?. பின்னர் எப்படி வந்தது? என்று கேட்டு விடைதேட ஆரம்பித்தேன்.

கோவை "தீக்கதிர்" பதிப்பில் துணை ஆசிரியராக இருக்கும் கணேசன் அப்போது நகபுரியில் இருந்தார்,அவர்மூலம் இந்திய அமைதி மையத்தின் இயக்குனர் முனைவர் ஜாண் அவர்களைத்தொடர்புகொண்டேன்.காந்தி அடிகளால் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் படித்து முனைவர் பட்டம்பெற்ற திருநெல்வெலி மாவட்டத்தைச்செர்ந்தவரவர்.என் கேள்விக்குபதிலை நாராயண தேசாய் ஒருவரால் தன் கொடுக்க முடியும் என்றார் ஜாண் செல்லதுரை.

காந்தியடிகளின் மனசாட்சியக திகழ்ந்த மகாதேவ தேசாயின் மகன் தான் நாராயண தேசாய். சபர்மதி ஆசிரமத்தில்பிறந்து காந்தி அடிகளில் மடிகளில் தவழ்ந்து விளையாடியவர் நாராயண் தேசய். தற்பொது தொண்ணூறு வயதகிறது. குஜராத்தில் வசிக்கிறா அவரை தொட ர்பு கொள்ள முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தான் மற்றொரு நண்பர் சில தகவல்களைச்சொன்னார். குஜராத் மாநிலத்தில் புழங்கும் ஒரு நாட்டுப்புற பாடல் வரிகள் இவை என்றும் அது பற்றிய விவரங்களையும் சொன்னார்.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பியர்கள் சூரத் நகரத்தில் தங்களுடைய கிட்டங்கியை வைத்தனர். போர்பந்த்ரிலிருந்து சரக்குகளை கொண்டுவரவும் இந்திய சரக்குகளை சேகரித்து அனுப்பவும் அது மையமாக இருந்தது. அதனால் துறைமுகத்தில் போக்குவரத்து அதிகமாகியது.சரக்குகளை ஏற்ற இறக்க தொழிலாளர்கள் அதிகமாகவந்தனர். தொழிலாளர்களில் ஜைனர்கள் ஜரதுஷ்டிரர்கள்(பார்சிகள்),இந்துக்கள் , கிறிஸ்துவர்கள்,இஸ்லாமியர்கள் என்று குவிந்தனர். ஒன்று பட்டு பக்கத்து கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். பண்டிகைகளில் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர். இவர்களை மேய்க்கும் கங்காணிகளுக்கு இதில் சம்மதமில்லை . தங்கள் குடியிருப்புகளில் "இவர்கள் வழக்கமாக சொல்லும் சொலவடைதான் "அரே! ஈஸ்வர் க்யா ஹை ! அல்லா க்யா ஹை! சப்கு சன் மதி தே பகவான்" என்பதாகும்
காந்தி அடிகள் "தண்டி யாத்திரை " புறப்பட்ட போது அவரோடு செர்ந்தவர்கள் எழுபத்தெட்டு பேர். செல்லச்செல்ல மக்கள் அவர் பின்னால் திரண்டனர். அபடித் திரண்டவர்களில் துரைமுகத் தொழிலாளர்களும் உண்டு. பிரார்த்தனை கூட்டத்தில் "ரகுபதி ராகவ" பாடும்போது ஜனங்களும்செர்ந்து பாடுவார்கள். "ரகுபதிராகவ ராஜாராம் - பதித் பாவன சீத்தாரம் " என்றதும் இந்தத் தொழிலாளர்கள் "ஈஸ்வர அல்லா தெரே நாம் சப்கோ சன் மதி தெ பகவான் " என்று எதிர்பாட்டுபாடுவார்கள். காந்தி அடிகள் மகிழ்ந்து போய் பாடிக்கொண்டிருந்த விஷ்னு திகம்பர் பலுஸ்கரிடம் இந்த வரிகளையும் சேர்த்து பாடச்சொன்னார். அன்றிலிருந்த்து அப்படியே பாடப்பட்டு வருகிறது. .

14 comments:

அப்பாதுரை said...

பிரமாதம்!
கேள்விப்பட்டிராத இயக்கங்களைப் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள். மிகவும் நன்றி.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே ! மொகன் தாஸ் கரம் சந்த் காந்தியை எனக்குப் பிடிக்காமலிருக்கலாம்.ஆனால் வக்கீல்களுக்கு மாஜிஸ்திரேட் பதவி வாங்கித்தர உருவான காங்கிரஸை மக்கள் இயக்கமாக மாற்றிய காந்தியடிகளை பிடிக்கும்."தண்டி" யாத்திரையும் "ரகுபதி ராகவ " பாடலும் கேள்விப்படாத இயக்கமா? வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

அப்பாதுரை said...

சரியாக எழுதாதது என் பிழை. 'இந்திய அமைதி மையம்' கேள்விப்பட்டதில்லை.

மோகந்தாசுக்கும் காந்தியடிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை அழகாகப் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள். மோகந்தாசிடம் எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் உண்டு. காந்தியடிகளானது மோகந்தாசின் குருட்டு அதிர்ஷ்டம். நமக்கு பெரிய அதிர்ஷ்டம்.

hariharan said...

பாடலின் வரிகள் பிறப்பதற்கு யாரெல்லாம் காரணமாக இருக்கிறார்கள்! தேடலில் தான் தெளிவு கிடைக்கிறது.

John Chelladurai said...

ஐயா,
வணக்கம்.
சப்கோ சன் மதி தே பகவான்... பிறந்த கதையை நேர்த்தியாக சொல்லி எங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டீர்கள். பல காந்தியவாதிகளுக்கே தெரியாத வரலாறு.

காந்தியை பிடிக்காவிட்டாலும் அவரது பிரிய பாடலைப் பற்றி விவரமாக எழுதிய உங்கள் மன உயரம் இமயமாய் எனக்குத் தெரிகிறது.
நன்றி.

சிவகுமாரன் said...

இன்னும் எவ்வளவு பொக்கிசங்கள் வைத்திருக்கிறீர்கள் அய்யா உங்கள் நினைவுப் பெட்டகத்தில்.?

venu's pathivukal said...

அற்புதமான இடுகை...

தேச ஒற்றுமை, மாத நல்லிணக்கம் போன்றவை தொழிலாளி வர்க்கம் மனித சமூகத்திற்கு இன்றும் ஆற்றியும் அரிய பங்களிப்பு என்பதற்கு இன்னுமொரு களச் சான்று உங்களது இந்தப் பதிவு...

இதில் ஒரு வேடிக்கை பாருங்கள். யூனி கோடில் களச் சான்று என்று அடித்தால், அது காலச் சான்று என்று வந்து விழுந்தது. அதுவும் உண்மையே. கால காலத்திற்குமான சான்று..

வாழ்த்துக்கள்.

எழுத்துப் பிழைகளைக் கொஞ்சம் மெனக் கெட்டுத் திருத்தி ஒரு வரிசைப் படுத்தி, சிலிர்க்க வைக்கும் வரலாற்றுக் குறிப்புகள் - காஸ்யபன் என்று ஒரு நூலாக ஆக்குங்கள் என்பது மட்டுமே உடனடியாக உங்களிடம் இப்போது சொல்லத் தோன்றுவது.

எஸ் வி வேணுகோபாலன்

மோகன்ஜி said...

ப்ரிய காச்யபன் சார்! தண்டி யாத்திரை பற்றியும், சுதந்திரப் போராட்ட காலத்து தியாகங்களையும் படிக்கும் தோறும் அந்த காலச் சூழலில் பிறக்காமல் போய்விட்டோமோ எனும் ஏக்கம் என்னுள் எழும். காந்தியடிகளின் மேல் வைக்கும் அத்துணை விமரிசனங்களையும் அளவையாக்கி அவரின் ஆளுமையிலேயிருந்து கழித்துப் பார்த்தாலும், அவர் உயரத்தை இதுவரை யாரும் எட்டவில்லை.. எட்டவும் முடியாது என்பதே என் துணிபு.

உங்கள் நெஞ்சில் தேங்கிக்கிடக்கும் இத்தகு செய்திகளை அவ்வப்போது பதிவிடுங்கள்..
"ரகுபதி ராகவ" பங்கிம்ச்சசந்த்ர சட்டர்ஜியின் ஆக்கம் என்று எண்ணியிருந்தேன்.. பதிவுக்கு நன்றி!

'பரிவை' சே.குமார் said...

பிரமாதம்!

உங்கள் நெஞ்சில் தேங்கிக்கிடக்கும் இத்தகு செய்திகளை அவ்வப்போது பதிவிடுங்கள்.

ganesh said...

நான் ஏதோ தற்காலிக முகாம் போலத்தான் எனது நாகபுரி வாழ்க்கையை நினைத்திருந்தேன். எனக்கே தெரியாமல் ஒரு உருப்படியான வேலை ஒன்னை செஞ்சுருக்கேன். நல்ல இடுகை, தோழர். எஸ்.வி.வி. கூறியுள்ளதை நானும் வழி மொழிகிறேன். நூலாக்குங்கள். வாழ்த்துக்கள்.

kashyapan said...

மதிப்பிற்குரிய சுடலை மனி என்ற நண்பர் ஒருவர் " ரகுபதி ராகவ"படலை விஷ்ணு திகம்பர் எழுதவில்லை என்றும் அது பக்த ராமதசால் எழுதப்பட்டது என்றும் குறிப்பிட்டு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார். அவருக்கு என் நன்றி. நான் இந்தப்பாடலைப் பாடியவரென்று மட்டுமே அவர் என்றுகுறிப்பிட்டுள்ளேன். மேலும் இந்தப் பாடலில் "ஈஸ்வர அல்லா" என்ற அடி யாரால், ஏன்,எப்பொது சேர்க்கப்பட்டது என்பதைத்தான் நானும் தோழர் கணெசனும் தேட ஆரம்பித்தோம் .சுடலை மணி அவர்களின் தகவலுக்கு நன்றி.---காஸ்யபன்

Anonymous said...

அருமை! தினமும் என் குழந்தைகளை தூங்க செய்ய நான் பாடும் சில பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலில் இந்த வரிகள் சேர்ந்த கதை பிரமாதம்! இதை அறிந்து கொண்டது நிறைவாய் இருக்கிறது. மிக்க நன்றி! இதை அறிந்து கொள்ள நீங்கள் எடுத்துக் கொண்ட ஆர்வம் பாராட்டுக்குரியது.

Sivamjothi said...


வணக்கம்

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

B.B.Ramani said...

பயனுள்ள தகவல்கள்.நன்றி.