Friday, June 03, 2011

சிறுகதை
" பகவான் "
"ஹரிஷ் வர்மாவுக்கு கழுத்தில் அறுவைசிகிச்சை நடந்துள்ளது ---உடனே வரவும் ---அவனால் இனி ..."
இ-மெயிலில் வந்த தகவல் மதுரையிலிருந்து விமானத்தில்மும்பை சென்று அங்கிருந்து ஜலகொன் செல்லவேண்டும்
ஹரிஷ் இருபத்தியைந்து வயது இளைஞன்.சி.ஏ முடித்துவிட்டு தனியார் கமபெனியில் நல்ல சம்பளத்திலிருக்கிறான்.பத்து வயதிலிருந்தே அவனைத்தெரியும்.நான் நாகபுரி செல்லும் போதெல்லாம் அவனுக்கு என் பயணம் பற்றி தெரிவிப்பேன்.
"அங்கிள்-- அங்கிள் " என்று சுற்றி சுற்றி வருவான்.மகரகண்டம்தாண்டி குரல் உடைந்தபின் அவன் குரல்மெருகேரியது.ஜெசு தாசின் கம்பீரமும் கார்வையும் உண்டு.முகம்மது ரவியின் கூர்மையும் உண்டு.
" சின்ன சின்ன ஆசை " பாட்டை என்னிடம்கெட்டு எழுதிக்கொண்டு பாடுவான். "ச்சின்ன ...ச்சின்ன ...ஆஷை " என்று அவன் மழலையில் பாடும்போது என்னால் மிகவும்ரசிக்கப்படுவான். அவனுக்குத்தான் அறுவை சிகிச்சை .
நல்ல வருமானம் என்றாலும் பாடுவதை அவன் நிறுத்தவில்லை .சிறு குழுவாக "லைட் மியுசிக்" கச்சேரிகள் நடத்திவந்தான்.பக்திப்பாடல்கள் பாடுவதில் அனூப் ஜலோட்டா, மற்றும் பங்கஜ் உதாசுக்கு நிகராக இருக்கும் .சூர் தாசரின் "நான் வெண்ணை திருடவில்லை "என்ற பாடலை பாடும்போதுஅவையோர் மெய்மறந்து நிற்பார்கள்.துளசிதாசரின் பாடல்களை மீணடும் மீண்டும் பாடச்சொல்லி அவையோர் கேட்கும்போது ஹரீஷ் குனிந்து வணங்கி மீண்டும் பாடும்நேர்த்தி ---அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வெண்டும்.
நான் நாகபுரி செல்லும் போதெல்லாம் எப்படியும் அவனுடைய கச்சேரிக்கு அழைத்துச்சென்று விடுவான் . நானும் என் மனைவியும் அவனோடு கர்நடக , இந்துஸ்தானி இசையின் மேன்மை ,மற்றும்மென்மைபற்றி விவாதிப்போம்.
2002ம் ஆண்டு என்மனைவிக்கு அறுபதாம் ஆண்டு முடிந்து விட்டது.அவருடைய தாயாரை பார்த்து ஆசிவாங்க நாங்கள் சென்றிருந்தோம். ஹரீஷும் வந்திருந்தான். எங்களை வணங்கி ஆசிபெற்றான்.மறுநாள் அவனுடைய கச்சேரி ஜலகொனில் இருப்பதகவும் நாங்களும் வரவேண்டுமென்ரு வற்புறுத்தினான்.சுமார் 250 கி.மீ. இருக்கும்.அவனுடைய காரில் சென்றோம்.மே மாத வெய்யில் தெரியாமல் ஏ.சி செய்யப்பட்டிருந்தது. கச்சேரி முடிந்து நாங்கள் இரவு திரும்பிக் கொண்டிருந்தோம்.
"அங்கிள்..அமைதியா வரீங்களே "என்றான் ஹரீஷ்
"ஆமாம்" என்றேன்.
"கச்செரி எப்படி இருந்தது அங்கிள்?"
நான் அவன் முகத்தைப்பார்த்தேன்.நிர்மலமாக இருந்தது."எனக்கு பிடிக்கல ஹரீஷ்"
"ஆண்டி! நீங்க சொல்லுங்க ஆண்டி "
" எனக்குநல்லாதன் இருந்தது. அவ்ர் எதையாவது சொல்லுவார். அதை மனசுல வச்சுக்காத "
" ஹரீஷ் கச்செரியை முடிக்கும்போது நீ என்ன பாட்டு பாடுவ " நான் கேட்டேன் .
"ரகுபதி ராகவ ராஜாராம் "பாடுவேன் "என்றான்.
"அண்ணல் காந்தியடிகளின் பிரியம்மிகுந்த பாட்டு .இருநூறு ஆண்டுகளுக்கு முன் குஜராத மாநிலத்தில் தோன்றிய சித்தர் ஒருவர் பாடியபாட்டு.அதனை முழுமையாக பாடவில்லையே ?..ஏன்?"நான் கோபமாகக்கேட்டேன் .
ஹரீஷின் உதடு கோணி சுழித்துக்கொண்டது."ரகுபதி ராகவ ராஜாராம் ,பதித பாவன சீதாராம் "என்று பாடினேன்.
"அதை மட்டுமே திருப்பிதிருப்பி பாடினே "
"அதற்கு மேல்பாடமுடியாது "
"ஏன்?"
" அடுத்த அடி என்ன ?
"ஈஸ்வர அல்லா தேரே நாம் ,சப்கோ சன்மதி தே பகவான் "
"அங்கிள்! குஜராத் அருகில் உள்ளது ஜலகோன் .இங்கு இரண்டாவது அடியை யாருமே பாடுவதில்லை .பாடக்கூடாது."
"ஏன்?'
"பாடினால் கலாட்டா செய்வார்கள்.பாடினவனை இம்சை செய்வார்கள்." என்றான் ஹரீஷ்.
"மனிதர்கள் ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்று ஆண்டவன் அருள் பெற்று பாடிய சித்தரின் பாடலைத் தவிர்க்கலாமா ? ஒரு கலஞன் என்ற முறையில் ஒரு பாடகன் என்ற முறையில் நல்லதைப் பாட பயப்படலாமா?" என்று அவனுக்கு உபதேசம் செய்தேன். வற்புறுத்தினேன் .
மதுரை வந்ததும் அவனிடமிருந்து தகவல் வந்தது .சதீஷ்கரின் ரெய்பூரில் பாடினானாம்ஹைதிராபாத், வார்தா,கல்கத்தா ஆகிய ஊர்களில் பாடும்போது குறிப்பாக "ரகுபதி ராகவ" பாடும்போது எழுந்து நின்று எல்லரும் பாடினார்களாம் மகிழ்ச்சியோடு எழுதியிருந்தான்.
-------------------------------------------------
இன்னும் இருபது நிமிடங்களில் விமானம் மும்பையில் தரை இறங்கிவிடும் .சட்டப் பையில் இருந்த இ-மெயிலை எடுத்து மீண்டும் வாசித்தேன்.
"ஹரீஷ் கச்செரி முடியும் போது "ரகுபதி ராகவ" பாடினான் .எங்கள் ஈஸ்வரனுக்கு அல்லா என்று பெயர் வைத்தவன் எவன் என்று கெட்டுக் கொண்டு சிலர் கலாட்ட செய்தார்கள் சிலர் ஹரீஷின் அருகே ஒடினார்கள்.அவன் கழுத்திலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஒடியது.ஹரீஷ் வர்மாவுக்கு கழுத்தில் அறுவைசிகிச்சை நடந்துள்ளது உடனே வரவும். அவனல் இனி பாடமுடியாது....".
என் கண்கள் குளமாகியது.
" ஹரீஷ் வர்மா ! இளைஞனே!உன் குரலை இனி கேட்க முடியாது.! காரணம் ...நான் தான்...நன் தான் ...நான் மட்டும் தானா?"

11 comments:

பாரதசாரி said...

மிகவும் தாக்கத்தை உண்டக்கும் சிறுகதை (அல்ல் நிஜம்).
வேறோன்றும் சொல்லத் தோன்றவில்லை.
மனம் கனத்திருக்கும்போது, என்ன சொல்ல முடியும்?

அப்பாதுரை said...

சிறுகதை என்றால் இது தான் என்று வெறும் பாராட்டாக எழுதிவிட்டுப் போக முடியவில்லை. நீண்ட நேரம் யோசிக்க வைத்தது.

திலிப் நாராயணன் said...

சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்தபோது அவரைப்பார்க்க(தரிசிக்க) ஆயிரக்கணக்கில் தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் சகோதரிகளும் முண்டியடித்துக்கொண்டு சாலையெங்கும் நிறைந்திருந்தார்கள். அவர்களை உயர் சாதியினரும் கட்டுப்படுத்தும் பணியிலிருந்த பிரிட்டிஷ் போலீசும் சுவாமியை நெருங்கவிடாமல் அடித்து விரட்டியிருக்கிறார்கள். இதை நேரடியாகப்பார்த்து விட்ட சுவாமிகள் "இது கிறுக்கர்களின் தேசம்" என்று கோபத்துடன் சொன்னாராம். ஹரிஷ் போன்றவர்களின் குரலை பாட்லை அதனதன் உண்மைத்தன்மையில் எடுத்துக்கொள்ள மறுக்கும் மனிதர்களை என்னவென்று சொல்வது?

சிவகுமாரன் said...

மனதை கனக்க வைத்த கதை.
மதத்தை வைத்து அரசியல் பண்ணும் கட்சிகளைத் தவிர பொதுவான இந்துக்கள் மதச் சகிப்புத்தன்மையுடன் தான் இருக்கிறார்கள்.
மதுரை தெற்கு வாசலில் ஒரு தர்கா இருக்கிறது. வெள்ளிக் கிழைமைகளில் வந்து பாருங்கள். தர்கா இந்துப் பெண்களால் நிரம்பி வழிகிறது.

S.Raman,Vellore said...

It is not just a story. painful truth. We live in the nation of fanatics. Even the people assemble in large for the fast drama of Fraud Ramdev.

kashyapan said...

சிவகுமரன் அவர்களே!நாற்பது ஆண்டுகளுக்கு மேல் மதுரையில் வசித்தவன்.காந்தியைக் கொன்ற நாதுராம் கையில் "இஸ்மாயில் " என்று பச்சைகுத்தியிருந்தான்.ஒருவெளை அவன்சுடப்பட்டு இருந்தாலும் ஒரு இஸ்லாமியன் சுட்டான் என்று கலவரம் வரட்டுமே என்பதற்காக.சில அகிம்சாவாதிகள் இஸ்மாயில் புரத்தையும் கான்சாமெட்டுத்தெருவையும். கோரிபாளையத்தையும் சுற்றிவளைத்தார்கள். அப்போது அந்த அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பாக மதுரை மில் தொழிலாளர்கள் நின்றார்கள். மதமல்ல நிரந்தரமானது. மனிதம்தான் நிரந்தரம்.Religion is accidental.Man is eternaL.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

kashyapan said...

சிவகுமரன் அவர்களே!நாற்பது ஆண்டுகளுக்கு மேல் மதுரையில் வசித்தவன்.காந்தியைக் கொன்ற நாதுராம் கையில் "இஸ்மாயில் " என்று பச்சைகுத்தியிருந்தான்.ஒருவெளை அவன்சுடப்பட்டு இருந்தாலும் ஒரு இஸ்லாமியன் சுட்டான் என்று கலவரம் வரட்டுமே என்பதற்காக.சில அகிம்சாவாதிகள் இஸ்மாயில் புரத்தையும் கான்சாமெட்டுத்தெருவையும். கோரிபாளையத்தையும் சுற்றிவளைத்தார்கள். அப்போது அந்த அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பாக மதுரை மில் தொழிலாளர்கள் நின்றார்கள். மதமல்ல நிரந்தரமானது. மனிதம்தான் நிரந்தரம்.Religion is accidental.Man is eternaL.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

Anonymous said...

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1

today, i have made some modifications in adding a label feed in google reader ....see it.d.

அப்பாதுரை said...

மதம் என்றாலே சங்கடம் தான்.

அப்பாதுரை said...

கடவுள் என்றாலும் சங்கடம். கடவுளைக் காண மதம் வேண்டும் என்று ஒரு காரணத்தைக் கட்டிவிட்டு கடவுள், மதம் இரண்டையுமே வியாபாரமாக்கி விட்ட மனிதன் தான் இருப்பதிலேயே கோர விபத்து?

மோகன்ஜி said...

அன்பிற்கினிய காச்யபன் சார்! பதினைந்து நாட்கள் நாடு நகரங்கள் சுற்றினதால் இந்தக் கதையை தாமதமாய்த்தான் படித்தேன்.. இது கதைஎன்றே நம்ப யத்தனிக்கிறேன்.. மனது வலிக்கிறது.. சாதிமதச் சழக்குகளிருந்து சமுதாயம் வெளி வரட்டும்.. மனிதம் மலரட்டும். அத்துணை தெய்வங்களும் அதற்கு அருளட்டும்..