Monday, June 06, 2011

ராஜகுருவும் பாபா ராம தேவும் ----

ராஜ குருவும் பாபா ராமதேவும்....
பாபா ராம தேவ் தன் உண்ணாவிரததை ஆரம்பிக்குமுன்னால் ராஜ குருவின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் ஆரமபித்தார்.இந்திய சுதந்திரப் பொராளிகளில் முதன்மையான இடத்தைப் பெற்ற அந்த மூவர் பகத்சிங், ராஜகுரு,சுகதேவ் ஆகியோராவர் .
ஷிவ்ராம் ஹரி ராஜகுரு பூனே அருகிலுள்ள காட்டே என்றசிற்றுரில் 1908மாண்டுஆகஸ்டுமாதம் 24ம் தேதி பிறந்தார்.மேல் படிப்புக்காக வாரணாசி சென்றார். சமஸ்கிருதத்தை,உபநிஷத்தை, ஸ்மிருதிகளை கற்றறிந்தார்.இயல்பிலேயே கூர்மையான புத்திகொண்ட அவர் தூக்கத்தில்கேட்டாலும் எந்த கெள்விக்கும் விடை அளிக்குக்கும் திறமை உள்ளவர்.
வாரணாசியில் இருக்கும் போது தான் அவருக்கு புரட்சியாளர்களோடு பழக்கம் ஏற்பட்டது.சந்திரசேகராஆஜாத்,பகத்சிங், சுகதெவ், படுகெஷ்வர், ஜதின் தாஸ்,யஷ்பால் ஆகியோரோடு நெருக்கம் ஏற்பட்டது.இந்துஸ்தான் சொசலிச குடியரசு படையில் சேர்ந்தார். இந்த இளம் படையினர் காகோரி வழக்கில் சிறையில் அடைகப்பட்டவர்களை சிறையிலிருந்து வேளிக் கொணர திட்டம்தீட்டினர். ஆனால் நிறைவேற்ற முடியவில்லை.
அப்பொது தான் சைமன் கமிஷன். வந்தது. காங்கிரஸ் அதனை பகிஷ்கரிக்க முடிவு செய்தது.நாடங்கும் அதனை எதிர்த்து கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன .பஞ்சாபில் நடந்த ஊர்வலத்திற்கு லலா லஜபதி ராய் தலைமை தங்கினார். வெள்ளைகாரஸ்காட் என்ற இன்ஸ்பெக்டர் லலாவை தலையில் தடியால் அடித்தான். மருத்துவமனையில் லஜபதி ராய் மரணமடைந்தார்.இந்தியா பூராவும் கொதித்து எழுந்தது. குடியரசுப்படையினர் பழி வாங்கத் துடித்தனர்.
பழிவாங்கும் பொறுப்பு புரட்சிப் படையினரால் பகத்சிங், ராஜகுரு ,சுகதேவ் ஆகிய மூவருக்குக் கொடுக்கப்படது. ராஜகுரு குறிபார்த்து சுடுவதில்வல்லவர்.இவர்கள் லாகூர் சென்றனர்.பொலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த வேள்ளைகார இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்று விட்டு ஒடிவிட்டனர். மறு நாள் பத்திரிகைகளைப்பார்த்த மூவரும் திடுக்கிட்டனர். கொல்லப்பட்டது ஸ்காட் அல்ல. ஹெட்கான்ஸ்டபிள் சாண்டர்ஸ் .

போலீஸ் மொப்பம் பிடித்துவிட்டது. மூவரும் தலைமறைவாகினர்.ராஜகுரு டெல்லி வந்தார்.. அங்கு இருக்க முடியவில்லை. வேட்டை நாயாக போலீஸ் துரத்தியது.அங்கிருந்து நாகபுரி வந்தார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெக்டெவாரைச்சந்தித்தார். அவர் மூலம் ஒரு ஆர்.எஸ். எஸ்.தொண்டர் விட்டில் தங்கினார். பின்னர் பூனே செல்ல ரயிலில் போய்க் கொண்டிருக்கும் போது போலீசாரால் பிடிக்கப்பட்டார்.
சாண்டர்ஸ் கொலை வழக்கில் தான் பகத்சிங்,ராஜகுரு, சுகதேவ் ஆகியமூவரும் தூக்கிலிடப்பட்டனர்.அப்போது ராஜகுருவுக்கு 23 வயது முடியவில்லை.
,
பாபா ராமதேவ் மூவருடைய சிலை இருக்கும் மேடையில் ஏறினார்.தொலைக்காட்சியில் காட்டினார்கள் .முதலி பகத்சிங்.
மாலை பொடவில்லை. அடுத்து ராஜகுரு. பாபா மாலை பொட்டார். அடுத்து சுகதேவ்.மாலை போடவில்லை. ஏன்? ஏன் ? ராஜகுருவுக்கு மட்டும்.....?

என் மண்டை வெடித்து விடும் போலிருக்கிறது.

. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்...

8 comments:

அப்பாதுரை said...

சுவாரசியமான பழைய விவரங்களை நீங்கள் மட்டுமே (உங்கள் பாணியில் :) தருகிறீர்கள். நன்றி.

எனக்கும் புரியவில்லை. இரண்டு காரணங்கள் இருக்கலாம்: 1) கையில் இருந்தது ஒரே ஒரு மாலை. 2)ஜாதி

சுந்தர்ஜி said...

காஸ்யபன் சார். நலமா?

தொடர்ந்து வாசித்தும் பின்னூட்டம் போட இயலாதபடி பல வலைப்பூக்களில் தொழில் நுட்பச் சிக்கல்.

மாலை ஒன்று-கழுத்து மூன்று.

ஹரிஹரன் said...

ராம்தேவ் சங்பரிவார் குழுமத்தைச் சேர்ந்தவர் எப்படி இன்குலாப் ஜிந்தாபாத் முழங்கிய பக்த்சிங் கிற்கு மரியாதை செய்வார்.
கல்கத்தாவில் சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற வகுப்புகல்வரத்தை முடிவுக்கு கொண்டவர சர்வகட்சிகுழு மக்களை சந்திக்க முடிவுசெய்தது, அப்போது ஷியாமபிரசாத் முகர்ஜி என்ற ஆர் எஸ் எஸ் தலைவர் ஜோதிபாசு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் அந்த குழுவில் இடம்பெற்றால் இந்துமகாசபை பங்கேற்காது என தெரிவித்தார்.
அவர்களின் மனோநிலை அப்படி.

ஹரிஹரன் said...

தமிழ் தொலைக்காட்சிகளில் செய்திவாசிக்கிறவர்கள் ‘கிளிப்பிள்ளைகள்’ அதாவ்து எடிட்டர் சொல்வதை வாசிக்கத் தெரியுமே அன்றி மற்ற விவகாரங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. நிஜந்தன் என்ற செய்தி வாசிப்பாளர் மாறாக சொந்தமாக கருத்துக்களை தந்து இணையதளித்தில் பதிவு செய்கிறார்.

நானும் அவரை தேர்ந்தவர் என நினைத்தேன். அவ்ரும் அதே ரகம் தான் என்பதை நீரூபிக்கும் விதமாக ராம்தேவ் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறார். அதாவது இந்துத்துவாவின் வல்துசாரி சிந்தனை சகல்தரப்பிலும் இருக்கிறதாம், பிரகாஷ் காரத் யிடம் கூட இருக்கிறதாம் இல்லையென்றால் அவர் ராம்தேவ் குர்ருப் உண்ணாவிர்தம் மீது தடியடி நடத்தியதை கண்டனம் செய்வாரா? என்கிறார். என்ன அறிவுக் கொழுந்துக’ள்?

Rathnavel said...

நல்ல பதிவு.
காரணம் சொல்லுங்கள்.

Ibnu Halima said...

ஏக இறையின் அருள் அனைவர் மீதும் நிலவட்டுமாக
நல்லதொரு வரலாற்று தகவலையும் அறிந்து கொண்டேன் இப்பதிவின் வாயிலாக.
எனக்கு ஒரு சந்தேகம் அய்யா
//ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெக்டெவாரைச்சந்தித்தார். அவர் மூலம் ஒரு ஆர்.எஸ். எஸ்.தொண்டர் விட்டில் தங்கினார். பின்னர் பூனே செல்ல ரயிலில் போய்க் கொண்டிருக்கும் போது போலீசாரால் பிடிக்கப்பட்டார்.//
ராஜகுரு ஆங்கிலேயர்களிடம் மாட்டிக் கொள்ள ஆர்.எஸ்.எஸ் தான் காரணமா? ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் வழிவந்த வாஜ்பாய் சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்தார் என்றதொரு குற்றச்சாட்டு பலமான ஆதாரத்துடன் கம்யூனிஸ்ட்டுகளால் எழுப்பபட்டிருக்கிறது. எனவே இந்த போராட்ட வீரர்களையும் ஆர்.எஸ் எஸ் தான் காட்டிக் கொடுத்ததா? ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி வெளிவந்தவர் சாவர்க்கர் என்பதும் இந்த சதேகத்தின் அடிப்படை.

சிவகுமாரன் said...

புதிய தகவல்கள்.

தியாகங்களுக்கு எல்லாம் சாதி முலாம் பூசப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டது.

ஏன்? ஏன்? ஏன் ?--
உங்களுக்கே தெரியாதப்ப, எங்களுக்கு எப்படித் தெரியும் ?

பாரதசாரி said...

http://jeevartistjeeva.blogspot.com/2011/03/blog-post_20.html

உங்கள் பார்வை?