நடிகர் வீரப்பனும் வாழைப்பழ காமிக்ஸ்ஸும் ......
இந்தி திரைப் பட உலகில் காதர் கான் என்ற நடிகர் பேரும் புகழும் பெற்றதற்குக் காரணம் அவர் வாழப்பழ காமிக்ஸை பயன்படுத்தியது தான் என்பார்கள் இந்திய மொழிகள் பலவற்றில் இந்த அற்புதமான நகைச்சுவைக் காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் நகைச்சுவை முதன் முதலாக கவுண்டமணி -செந்தில் ஆகியொரால் நடிக்கப்பட்டு அவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இன்றும் அந்தக் காட்சியை தொலைக் காட்சியில் பார்க்கும் போது செந்தில்,கவுண்டமணி,ஜுனியர் பாலையா,சரளா ஆகியொர் நடிப்பை பார்த்து பிரமிப்பே ஏற்படுகிறது
உண்மையில் இந்தக்காட்சியை கற்பனை செய்து உருவாக்கிக் கொடுத்தவர் வீரப்பன் என்ற அற்புதமான .நகைச்சுவை நடிகராகும். தமிழ்த்திரை உலகையே புரட்டிபோடும் அளவுக்கு திரமையும் கற்பனை வளமும் கொண்ட அவரை அவர் கம்யூனிஸ்ட் என்பதால் ஒதுக்கித் தள்ளியதுதமிழ்த் திரை உலகம்.
நான் ஹைதிராபாத்தில் இருக்கும் போது அவரை முதன் முதலாகப் பார்த்தேன்.அங்கு தென் இந்திய கலாசாரகழகம் என்ற அமைப்பில் அப்போது செயல்பட்டு வந்தேன் அதன் தலைவர்களாக ஜஸ்டிஸ் ஸ்ரீனிவசாசாரி அகியொர் இருந்த காலம்.(1957) ஒவ்வொரு ஆண்டும்டிசம்பர்மாதம் நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு முறை செகந்திரபாத் நிஜாம் பள்ளியில் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகங்கள் நடந்தது.மெடை அமைப்பு கலாசாகரம் ராஜகோபால். தி.ஜானகிராமனின் "நாலுவெலிநிலம்," "வடிவெலு வாத்தியார்" என்று நடந்தது.வடிவெலு வாத்தியாரில் வீரப்பன் பக்காஃப்ராடும் ,திமுக அனுதாபியுமான ஒரு தையல் காரராக நடிப்பார். இதே நாடகத்தில் ஆப்ரகாம்வாத்தியாராக பிரபாகரென்ற நடிகரும்நடிப்பார். தமிழ் நடகத்துறையும்,இலக்கியவாதிகளும் கைகோத்து நடை பயின்ற அற்புதமான காலம் அது.
ஜெயகாந்தன் "உன்னைப்போல் ஒருவன்" என்ற படத்தை இயக்கி அளித்தார். அதில் வீரப்பனும் பிரபாகரும் முக்கிய பாத்திரத்தில் நடித்தனர் அந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது .ஒரு தமிழ் படத்திற்கு முதன் முதலில் கிடைத்த தேசிய விருதாகும் அது
ஜெயகாந்தன் கம்யுனிஸ்டாக அடையாளம் காணப்பட்டதால் அதனை வேளியிட விடாமல் செய்யப்பட்டது. தனிக் காட்சியாக எல்.ஐ.சி ஊழியர்கள் வெளியிட்டு . கையைச்சுட்டுக் கொண்டனர்.
16 comments:
நவ்க்க்கிரகம் படத்தில் நாகேஷோடு இணைந்து அவர் நண்பனாக வருவது இவரா என்ற சந்தேகம் எனக்கு உண்டு.
ஸ்ரீ ராம் அவர்களே! நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.நகேஷொடு நாடகங்களில் நடித்துள்ளார்.பாலசந்தரின் வெள்ளிவிழா , இருகோடுகள்,படத்திலும் நாகேஷோடும் ,மற்றும் சில படங்களிலும் நடித்துள்ளார். வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.
பெரும்பாலான கவுண்டமணி படங்களில் நகைச்சுவை காட்சி வசனம் வீரப்பன் என்று டைட்டில் கார்டு போடுவார்கள். அவர் ஒரு கம்யுனிஸ்ட் என்று எனக்குத் தெரியாது.
திரு காஸ்யபன் பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் தேங்காய் பொறுக்கியாக இருவர் வருவார்கள் ஒருவர் நாகேஷ் மற்றவர் நீங்கள் குறிப்பிட்ட திரு ஏ வீரப்பன். மகாபலிபுரத்தில் குரங்கு சிலைக்குக்கீழ் அவர்களின் முகபாவமும் அட்டகாசமும் தாங்காது. பார்வையற்றவராக எம் ஜி ஆரின் நட்புக்குரிய திருப்தி நடித்திருப்பார். தொப்பித்தலையனா சாதாத்தலையனா என அவர் கேட்பார். தொப்பியை மாற்றி வைத்து அவரை ஏய்ப்பார்கள். உதயகீதம் என்றொருபடம் வந்தது விருது நகர்க்கார கே. ரங்கராஜ் இயக்கி யிருப்பார். அதில் வரும் அனைத்து நகைச்சுவைக்காட்சிகளும் வீரப்பன் அவர்கள் எழுதியதுதான். மனுஷனுக்குதான் ஏ குருப் பி குருப் ரத்தமுடா மூட்டப்பூச்சிக்கெல்லாம் அது கிடையாது என்று ஜெயிலில் கவுண்ட மணி டயலாக் பேசுவார். பாப்பா பாப்பா கதை கேளு காக்கா பாட்டி கதை கேளு என்ற பாடலுக்கு அவரே வருவார் குழந்தைகளுடன் ஒரு சாரட் வண்டியில்.
அவர் ஒரு இடது சாரியென்று தாங்கள் குறிப்பிட்டது ஒரு புதிய நல்ல செய்தி
அந்த வாழைப்பழ காமெடி ஏற்கனவே ஒரு மலையாளப் படத்திலிருந்துதான் பார்த்து எடுத்ததாக கங்கைஅமரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். எது சரி என்பதை தெரிவிக்கவும்.
பெரும்பாலான கவுண்டமணி படங்களில் நகைச்சுவை காட்சி வசனம் வீரப்பன் என்று டைட்டில் கார்டு போடுவார்கள். அவர் கம்யுனிஸ்ட் என்பது உங்கள் பதிவு பார்த்ததும் அறிந்து கொண்டேன்.
கரகாட்டக்காரன் காமெடிகள் எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம்.
வாழைப்பழ நகைச்சுவை ஏற்கனவே தூர்தர்ஷ்னில் (1981-82 என நினைவு; அதில் நாசர் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன்) வந்த ஒரு தொடரில் - சிறைச்சாலை அடிப்படையாகக் கொண்டது - வந்தது. அதிலும் இந்த பகுதி வீரப்பன் அவர்களால் எழுதப்பட்டது தான். அத்தொடரில் நடிகர் ராஜேஷ் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். அதில் வாழைப்பழம் மட்டும் கடலை உருண்டையாக இருந்தது. தொடர் பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆனால், நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கிறது.
வாழைப்பழ நகைச்சுவை ஏற்கனவே தூர்தர்ஷ்னில் (1981-82 என நினைவு; அதில் நாசர் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன்) வந்த ஒரு தொடரில் - சிறைச்சாலை அடிப்படையாகக் கொண்டது - வந்தது. அதிலும் இந்த பகுதி வீரப்பன் அவர்களால் எழுதப்பட்டது தான். அத்தொடரில் நடிகர் ராஜேஷ் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். அதில் வாழைப்பழம் மட்டும் கடலை உருண்டையாக இருந்தது. தொடர் பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆனால், நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கிறது.
நல்ல பதிவு.
உங்களது பதிவுகளில் எப்போதும் புதிய செய்திகள் (rare news) வருகின்றன.
வாழ்த்துக்கள் ஐயா.
வாழைப் பழ காமெடியின் ஒரிஜினல் மலையாளம் என்று கேள்வி.
வீரப்பன் என்று நீங்கள் இங்க குறிப்பிட்டு இருக்கும் நடிகரை நானும் பார்த்திருப்பேன் கண்டிப்பாக ஆனால் எனக்கு அவர் தானா என்று தெரியவில்லை.. பழைய படங்கள் எல்லாமே பார்த்ததுண்டு.... இனி கவனமாக பார்த்துவிட்டு சொல்கிறேன்... காதர்கான் மிக அருமையாக முக பாவனையிலேயே சிரிப்பு வரவைத்துவிடுவார்... இப்ப சமீபமாக நான் பார்த்த ஒரு படத்தில் தமிழில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட ஒரு படம் காதர்கான் பாட ஆரம்பித்ததும் ஊரே ஊர் பயந்து கதவை சாத்திக்கொண்டு விடும்... வீரப்பன் கம்யூனிஸ்டா இருந்தால் என்ன அதனால் அவர் இப்படி யாருக்கும் தெரியமுடியாமல் அவருடைய சிறப்புகளை இதனாலயே முடக்கப்பட்டதை போல் உணர்கிறேன் :(
அருமையான தளம் ஐயா....அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
வீரப்பன் காமெடி டிராக் செந்தில்-கவுண்டமணிக்கு ராஜபாட்டைப் போட்டுக் கொடுத்தது. அவர கம்யூனிஸ்ட் என்பது கூடுதல் தகவல்.
கம்யூனிஸ்டாக இருப்பதில் இப்படி ஒரு பிரச்சனையும் இருப்பது இப்போது தான் தெரிகிறது! நல்ல தகவல்.
நல்ல பதிவு..
சோப்பு சீப்பு கண்ணாடி என்ற படத்திலும்,பொண்ணு மாப்பிள்ளை என்ற p .s .வீரப்பா தயாரித்த படத்திலும் படம் முழுக்க நாகேஷுடன் வந்து நகைச்சுவையில் கலக்குவார்.வாய்ப்பு கிடைத்தால் பொண்ணு மாப்பிள்ளை அவசியம் பாருங்கள்.
Post a Comment