Wednesday, August 17, 2011

"தெய்வத் திருமகள் "---விமரிசனமல்ல ....

"தெய்வத் திருமகள்"---விமரிசனமல்ல .........

" தெய்வத்திருமகள் " திரைப்படம் பற்றி பத்திரிகைகள் விமரிசனம் ந்ல்லதாகவே எழுதியுள்ளன . அவை முக்கியமாக அந்தப்படம் ஆங்கிலப்படத்தை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்றும், அதனை இயக்குனர் விஜய் குறிப்பிடாமல் விட்டது தவறு என்றும் சுட்டிக்காட்டி யுள்ளன.

பதிவர்கள் சிலரும் அப்படியே விமரிசித்துள்ளனர். ஒரு சில பதிவர்கள் கடுமையான வர்த்தைகளைப் பயன் படுத்தியுள்ளனர். ஒருசில வருடங்களுக்கு முன் 12b என்று ஒரு தமிழ் படம் வந்தது.முழுக்க ஆங்கிலப் படத்தை அடியோற்றி இருந்தது.

1949-50 ஆண்டுகளில் "ராஜி என் கண்மணி' என்றொரு படம் வந்தது. கண் தெரியாத பூ விற்பவள் மீது காதல் கொண்ட நாடோடி இளைஞன் அவளுக்காக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து அறுவை சிகிச்சை செய்து பார்வையை வரவழைக்கிறான். அந்தப்பெண் டாக்டரை காதலிப்பதை அறிந்து ஒதுங்கி விடுகிறான். சார்லி சாப்லின் நடித்த ஆங்கில படத்தின் நகலான இதில் ஸ்ரீரஞ்ஜனி,டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர் . ஜெமினி தயாரிப்பு.

அலக்சாண்டர் டூமாசின் நாவல் தான் உத்தம புத்திரன். இரண்டுமுறை தமிழில் எடுக்கப்பட்டது.

"Two half times " செக் படத்தைத்தான் அமெரிக்கா கால்பந்தாட்டவீரர் பீலியை நடிக்கவைத்து மீண்டும் எடுத்தது.

அகிரா குரசொவாவின் seven samuroy தான் அமெரிக்காவின் Magnificiant seven.

இயக்குனர் ஒருவர் இந்தி,வங்காளி, மராத்தி, மலையாளப் படங்களை சுட்டு தமிழில் இயக்கி வெளியிட்டுள்ளார்.கிட்டத்தட்ட 19 படங்கள் கணக்கில் வருகிறது இவருடைய விருது வழங்கும் விழாவில் இந்த விமர்சகர்கள் கலந்து கொண்டு கும்மியடித்தார்கள்.

விக்கிரம் கடுமையாக உழைத்திருப்பதாக சொல்கிறார்கள். அவரோ எல்லாப் பெருமையும் "விஜய்" குத்தான் என்கிறார்." மதறாச பட்டினம் " சிறந்த படம் தானே.பதிவர் ஒருவர் அந்தப்படத்திற்காக தரக்குறைவாக விமரிசித்துள்ளார். சில விமரிசகர்கள் தங்கள் மேட்டிமயை காட்டவிரும்புகிறார்கள். திரைப்பட விமரிசனம் பற்றி திரைப்படக் கல்லூரிகளில் வகுப்பு நடத்துகிறார்கள். இவர்களை அங்கு அனுப்புவது பயிற்சி பெறவைப்பது தமிழ்த்திரைபட உலகத்திற்கு நன்மை பயக்கும்

8 comments:

'பரிவை' சே.குமார் said...

சபாஷ்... சரியாக சொன்னீர்கள் ஐயா...

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரொம்ப கரகிட்டா சொன்னிங்க

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எந்த நல்ல முயற்சியையும் விமர்சிக்காமல் ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை தமிழன் இன்னும் படிக்க வேண்டிய ஒன்று. மொழி பெயர்க்கப்பட்ட புத்தகங்களை ஒத்தவை தான் இவை

மாலதி said...

விமர்சிக்காமல் ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை ........ம்.....

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
அரிய செய்திகள்.
நன்றி ஐயா.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

அப்பாதுரை said...

சரியாகச் சொன்னீர்கள். எடுத்தாள்வதில் தவறில்லை, ஆனால் உரிய அங்கீகாரத்தைக் கொடுக்காவிட்டால் கலைக்கும் அவமரியாதை, கலைஞனுக்கும். வழக்கம் போல் அமெரிகாவை இடித்திருக்கிறீர்கள் - magnificent seven படத்தில் கொட்டை எழுத்தில் குரோசாவாவுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள் - அதை விட்டு விட்டீர்களே?

டூமசின் கதை எத்தனையோ திரைப்படங்களுக்குக் கரு. மகாபாரதம் கூடத்தான். சேக்ஸ்பியரின் நாடகங்களை வைத்து நூறு திரைப்படங்களாவது வந்திருக்கும். ஆனால் இவை public domain வகையைச் சார்ந்துவிட்டதால் எடுத்தாண்டவர்கள் விவரம் சொல்லாவிட்டால் திருட்டு என்று சொல்ல முடியாது. ஆனால் சமீபப் படைப்புகளை வெட்கமில்லாமல் திருடிவிட்டு பெயருக்குக் கூட அதைப் பற்றிச் சொல்லாமல் இருப்பது கேவலமில்லையா?

உதாரணத்துக்குச் சொல்கிறேன். planes trains automobiles படத்தை தமிழில் எடுத்துவிட்டு அந்தக் கதை இருபது வருடங்களாக தன் மனதில் இருந்ததாக சொன்ன கமல்காசனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஒருபடம் விடாமல் ஆங்கிலப்படத் தழுவல் - moon over paramor, what about bob - வரிசையாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.

திருட்டுத்தனத்தைச் சாடுவதில் குற்றமே இல்லை.

சிவகுமாரன் said...

அப்பாத்துரையின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.
நாயகன் - The Godfather, தெனாலிWhat about Bob, அவ்வை சண்முகி Mrs.Doubtfire, பஞ்ச தந்திரம் Very Bad things , வசூல்ராஜா Patch Adams, அன்பேசிவம் Planes, Trains...., மகாநதி Hardcore ... என்று அறிவுஜீவியின் திருட்டுத்தனங்களை பட்டியலிடலாம்.
மணிரத்தினம், ஷங்கர், முருகதாஸ் எல்லோரும் தான் திருடுகிறார்கள். மூலக்கதை எழுதிய கலைஞனுக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு போகலாம். அது தான் பெருந்தன்மை.

பாரதசாரி said...

மிக அருமை...
'ராஜி என் கண்மணி' City Lights
'அபூர்வ சகோதரர்கள் - (அப்புவின் காதல் பகுதி மட்டும்)' - The circus

அடுக்கிக் கொண்டே போகலாம்.