ரோகிணி நதியும் நதி நீர் பிரச்சினையும் .........
நேபாள நாட்டின் ஒரு மாவட்டத்தின் பெயர் கபிலவாஸ்து. 2500 ஆண்டுகளுக்கு முன் அதுஒரு தலைநகரமாக இருந்தது. நகரத்தின் நடுவில் ரோகிணிநதி வடக்கிலிருந்து
தெற்காகபாய்ந்தோடுகிறது.அதன் மேற்குக் கரையில் கபிலவாஸ்துவை தலைநகராகக் கொண்டு சாக்கிய இன மக்கள் வாழ்ந்து வந்தனர்.கிழக்குக்கரையில்
கோலியன்நகரை தலைநகராகக் கொண்டுகோலிய இன மக்கள்வாழ்ந்தனர்.விவசாயம்தான் அவர்களுடைய முக்கிய தொழிலாக இருந்தது.
ஓராண்டில் மழை பொய்த்துவிட்டது .இரண்டு பகுதியிலும் பயிர் தீய்ந்து போகும் நிலை.கொலிய மக்கள் தங்கள் பயிரைக்காப்பாற்ற ரோகிணி ஆற்றிலிருந்து நீரினை மடை மாற்ற விரும்பினர். சாக்கியர்களுக்கும் அதே பிரச்சினைதான் அவர்களும் ரோகிணி ஆற்றின் நீரை பயன்படுத்த விரும்பினர். இரண்டு குழுக்களுக்கும் இடையே வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.இரண்டு பக்கமும் தூண்டிவிட ஆளிருந்தனர்.சாக்கியர்கள் தங்கள் இனத்தின் பஞ் சாயத்க்தைக் கூட்டினர். கொலியர் மீது யுத்தம் தொடுப்பது- அவர்களை அழித்து நீரையும் நிலத்தையும் பிடுங்கிக் கொள்வது என்பது தீர்மானம்.
சாக்கியர்களின் தீர்மானத்தை சாக்கிய இளைஞன் சித்தார்த்தன் தன்னந்தனியனாக எதிர்த்தான். அவனை மற்றவர்கள் ஏளனம் செய்தனர். ஏகடியம் பேசினர். அவனுடைய ஒற்றை எதிர்ப்புக்குரல் எடுபடவில்லை.திர்மானம் நிறைவேற்றப்பட்டது. சித்தார்தனோ தன் எதிர்ப்பை கைவிட மறுத்தான். பஞ்சாயத்தின் தீர்மானத்தை எதிப்பவன் மரணதண்டனைக்கு ஆளாக வேண்டும்.சித்தார்த்தன் தண்டனையை எற்பேன்.யுத்ததை எற்கமாட்டேன் என்று நின்றான்
"ஆயுதங்களால் சகோதரர்களாக வாழ வேண்டியவர்கள் தாக்கிக் கொள்ள வேண்டுமா? நீர் வற்றிய குளத்தின் மீனைப் போல இரண்டுபக்கமும் துடிதுடித்து சாக வேண்டுமா? மக்களுக்குள்ளே பகமையை பரப்ப வேண்டுமா? கோலியர்களோடு பேசி தீர்வு காண்போம் " என்பது சித்தார்தனின் வேண்டுகோள்.
சித்தார்தனுக்கு மரண தண்டனை உறுதியானது. பஞ்சாயத்தில் ஒருவிதி உண்டு. தீர்மானத்தை ஏற்காதவன் சகலத்தையும் துறந்து ,வீடு,மனைவி,குழந்தை குட்டிகளைத்துறந்து வெற்று நாட்டிற்கு அகதியாகச்சென்று வாழலாம் என்பது அந்த விதி. சித்தார்தனின் மனைவி மற்றுமுள்ளவர்கள் கட்டாயப்படுத்தி சித்தார்தனை வெளிநாட்டிற்கு அனுப்பி வத்தார்கள்.
ரோகிணியாற்று படுகைவழியாக நடந்த சித்தார்த்தன் கயா வந்தடைந்தான் .
. பிற்காலத்தில் சித்தார்த்தனை " புத்தன் " என்று மக்கள் அழைத்தனர்.
10 comments:
ஆச்சரியமாக இருக்கிறது.
இதுவரை கேள்விப்பட்டிராத நிகழ்வு.
புத்தனுக்கே இந்த நிலை என்றால்...?
ஆஹா! சரியான நேரத்தில் சரியான பதிவு! அதற்குள்ளும் எத்தனை புதிய புதிய ஜன்னல்களை நீங்கள் திறந்து வைத்து விட்டீர்கள்! சாலையில் ஒரு சவ ஊர்வலம் செல்ல, அதனை மாடத்தில் இருந்து பார்த்த சித்தார்த்தன் ‘அட, மனித வாழ்க்கை இவ்வளவுதானா’ என்று நொந்தவனாக இரவோடு இரவாக அரண்மனையை விட்டு வெளியேறியதாக அல்லவா இதுவரை படித்து வந்தோம்!... உண்மை அது அல்ல, உயிரோடு இருந்தும் பிணம் போல் வாழ்ந்த சகமனிதர்களின் முகத்தில் ‘அடப்போங்கடா நீங்களெல்லாம் மனுசங்களாடா!’ என்று காறி உமிழ்ந்து வெளியேறிய சமூகப்பற்றாளனே சித்தார்த்தன், சமூகத்தை துறந்து வெளியேறியவன் அல்லன் என்ற மகத்தான உண்மையை நாங்கள் அறிந்துகொள்ள இத்தனை வருடங்கள் ஆயிற்றா!..இக்பால்
விளையும் பயிர் என்பது இது தானோ?
சின்ன விவரத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள். பெரிய பாதிப்பு எங்களுக்குத் தான் :)
சித்தார்த்தன் துறவில் இவ்வள்வு விவரம் இருக்கிறதா?
அரசகுமாரனின் சிந்தனை வித்யாசமானது
புத்தம் சரணம் கச்சாமி!
இந்தக் கதை அல்லது வரலாறு எந்த மூலத்திலிருந்து எடுக்கப் பட்டது என்று தெரிவிப்பது அவசியம், முக்கியம் என்று நினைக்கிறேன்.
Dr. Kailash T Sahare is a young Dalit activist at Nagpur. He wrote an article in one of the books we (India Peace Centre)published, in 2006. He referred to the water dispute and the proposed war on Kolis, Siddharth's mediation for water sharing, the wrath of Sakia Tribes and his waking out.
That this instance was the beginning of the journey of the Budhha, was not found in his writing. I hear from you for the first time.
The writing is fantastic.
ஜி.எம்.பி அவர்களே! உங்கள் வருகைக்கு நன்றி. வலைத்தளத்தில் ரொகிணி ஆறு என்ற வலையில் இது இருக்கிறது. புத்தபுராணத்தில் அவர் ரொகிணி ஆற்றின் மிது பறந்து வந்து தன் தெய்வீக சக்தியால் தீர்த்து வைத்தாகவும் உள்ளது.உலகம் பூராவிலும் வரலாற்றாளர்கள் ரொகிணி நதிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது என்பதை பதிவு செய்துள்ளார்கள்.அண்ணல் அம்பேத்கர் புத்தமும் தம்மமும் என்ற நூலில் இதனைக் குறிப்பிடுகிறார். பெராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் "புத்தர் பற்றிய நூலில் குறிப்பிடுள்ளார். 22-12-11 ம் தேதி அந்தொணிசாமி மார்க்ஸ் முகநூலிலும் இது வந்துள்ளது .---அன்புடன் காஸ்யபன்.
நான் பலரிடம் சொல்வதுண்டு. எந்த விஷயத்தையும் எப்படி வேண்டுமானாலும் கூறலாம், எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரியாத வரையிலும் மற்றும் இது இப்படித்தான் என்று நிரூபிக்கப் படாதவரை. ஏனென்றால் மக்களில் பெரும்பாலோர் Remain gullible. வித்தியாசமான கோணங்களில் சிந்திக்கச் செய்ய நல்ல உத்தி.
Post a Comment