நொந்து போயிருக்கிறார் அன்னா ஹசாரே.....!
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை டிசம்பர் 29ம் தெதி " அன்ன நோந்து போயிருக்கிறார்" என்று நான்கு பத்தியில்தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருததுஉண்ணாவிரதம் பிசுபிசுத்தது ,சிறை நிரப்பும் போராட்டம்,உண்ணாவிரதம் ஆகியவற்றை அன்னா கைவிட்டார்.என்றும் எழுதியிருந்தது.
சென்ற ஆண்டு ஜந்தார் மந்தர் முன்பு 15ooo பேர் கூடியிருந்த கூட்டாத்தை 10லட்சம் என்று புளுகிய ஊடகங்கள் மும்பை உண்ணாவிரதத்தில் காலியாக இருந்த பந்தலில் நாற்கலிகளை படம் பிடித்து போட்டது.
நாகபுரியில் ரிசர்வ் வங்கி சதுக்கத்தில் நட்ந்த உண்னாவிரதத்தைப் பார்கப் போன பொது கிடைத்த தகவல் இதுதான்."நான் அன்னா ஹசாரே" என்று எழுதப்பட்ட குல்லாக்கள் 3000 இருக்கும். கட்டுக்கட்டாக ஒரு ஓரத்தில் பிரிக்கப்படமல் கிடந்தது.
விரல் விட்டு எண்ணக்கூடிய நிருபர்கள் தான் இருந்தனர். உண்ணாவிரத்ம் முடிந்ததும்,முழுக்கடலை சுண்டலும் தேனீரும் கொடுப்பதுவழக்கம்..ஆனால் வெறும் குடிநீர்தான் கொடுத்தார்கள் என்று வந்திருந்த வெகுசிலர் பரிதாபமாகச்சொன்னார்கள்.
வரும் ஐந்து மாநிலத்தேர்தலில்காங்கிரசை எதிர்த்துபிரச்சாரம் செய்வேன் என்று அவர் கூறியது தான் காரணம் என்று பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள்.. கங்கிரசை எதிர்த்தால் பா.ஜ.க வுக்கு ஆதரவு என்றாகிறது. 80ம் ஆண்டுகளில் அன்னா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்செயல்பட்டார் என்பதுகூடுதல் தகவலாக கசிந்தது..அன்னா குழுவிலுள்ள சாந்தி பூஷன் மீது பத்திரம் பதிந்ததில் ஊழல் என்று குற்றம் சாட்டப்பட்டு 27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அன்னா உடல் நிலை சரியில்லை . அவர் இனி போராட்டம் உண்ணாவிரதம் எதிலும் ஈடுபடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளாதாக செய்திகள் வந்துள்ளன..
ஆட்டம் முடிந்தது.
9 comments:
பாபா ராம்தேவும் சரி அன்னா ஹசாரேவும் சரி டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த போது இரண்டு லட்சம் பேர் கூடியதாய் ஊடகங்கள் கதை விட்டன.
டெல்லி ராம்லீலா மைதானத்தில்தான் ஏ.ஐ.ஐ.இ.ஏ பொன்விழா ஆண்டு மானாட்டு துவங்கியது. ஆறாயிரம் தோழர்கள் பங்கேற்றதற்கே மைதானத்தின் முக்கால் பகுதி முடிந்து விட்டது. அதிகபட்சம் பதினைந்தாயிரம் பேர் மட்டுமே பிடிக்கும். ஒரு லட்சம் பேர் அந்த மைதானத்தில் திரண்டிருந்தால்
அத்தனை பேரும் மூச்சு திணறி செத்துப் போயிருப்பார்கள்.
அன்னா என்றால் பொய்
ஊழலுக்கு எதிராய் ஒருவர் கிளம்பியிருக்கிறார் என்றதும் ,என்னைப் போன்ற அரசியல் சார்பற்றோர் சந்தோசப்பட்டோம். நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என்று நினைக்கத் தொடங்கினோம்.
எல்லாம் கனவா? ஆயிரம் இருக்கட்டும்.
அன்னாவின் போராட்டதுக்கான் நோக்கம் உயர்ந்ததல்லவா . வாய் கிழிய பேசும் அரசியல் கட்சிகள் ஏன் அதற்காகப் போராட இதுவரை முன்வரவில்லை?.
ஆட்டம் முடிந்தது என்று எழுதுவதில் எவ்வளவு சந்தோசம் உங்களுக்கு!
வலிக்கிறது அய்யா .
எதிர்பார்த்தது தான்.
அன்னாவின் போராட்டங்கள் were a decoy என்று நிச்சயமாக நம்புகிறேன்.
சிவகுமரன் அவர்களே! 1971 என்று நினைக்கிறேன்." தீக்கதிர்" பத்திரிகையில் வந்த சிறிய பெட்டிசெய்தி." ஒரு அமைச்சர் ,ஒரு சபாநாயகர் ,ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வீடுகளில் சோதனை" என்றுபோட்டிருந்தது. முதலமைசரிடம் நிருபர்கள் கேட்டார்கள்." பெயரைப்போட தைரியமில்லாத மஞ்சள் பத்திரிகை அப்படித்தான் போடும் "என்றார். "இந்து " பத்திரிகை "as published in a vernaacular daily" என்று மேற்கோள் காட்டி போட்டிருந்தது.(பயந்து.)ஆளும் கட்சி தொண்டர்கள், "தீக்கதிர்" பத்திரிகையை எரித்தார்கள். ஊழலை ஒழிக்கப் பிறந்தவர்கள் மார்க்சிஸ்டுகளும் இடதுசாரிகளும் தான். உங்களுக்கு வலிக்கிறது என்பது சங்கடமாகத்தான் இருக்கிறது. உண்மைகள் உண்மைகள்தான் ---காஸ்யபன்
எனக்கு சிரிப்பு வருகிறது அய்யா.
ஊழலை ஒழிக்கப் பிறந்தவர்கள். ஊழல் வாதிகளோடு மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். ஊழல் செய்யாதவர்கள், செய்யத் தெரியாதவர்கள் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஒத்துக் கொள்கிறேன். என்ன பயன்?, நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊழலுக்கு துணை போகிறார்கள் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.
சிவகுமரன் அவர்களே! ஊழல் செய்யாதவர்கள்,ஊழல் செய்யத்தெரியாதவர்கள் என்று ஏற்றுக்கொள்வீர்கள்.35 ஆண்டுகள் மே.வங்கத்தில் ஊழலற்ற ஆட்சி. திரிபுராவிலும் ஊழலற்ற ஆட்சி.கேரளத்திலும் அப்படியே.இந்த ஊழலற்றபாவிகளை தமிழ் நாட்டில் ஆதரிக்க மாட்டீர்கள் அவர்கள் தன்னந்தனியாக வரும் அளவுக்கு ஆதரவில்லை. எங்கே ஏதாவது ஒரு கட்சியைச்சொல்லுங்கள் ! ஊழல் செய்யாதகட்சி என்று? நாங்கள் சேருகிறொம்.அகில இந்திய அளவில் ஊழலற்ற கட்சி எது? ஏது? கொஞ்சம் யொசியுங்கள் ஐயா! இல்லையென்றால் வலியும்,சிரிப்பும் தான் மிஞ்சும்!---காஸ்யபன்
ஊழல் செய்யாதவர்களை எப்படி செய்யத் தெரியாதவர்கள் என்று ஏற்க முடியும்? செய்யும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஊழலை ஒழிப்பதற்காகவே பிறந்தவர்கள் என்பதெல்லாம் கப்சா. இந்தியாவை விட்டு வெளியே பார்த்தால் தெரியும் சிவப்பின் வெளுப்பு.
ஊழலை ஒழிக்க வல்லவர்கள் ஒவ்வொரு குடிமகனும் தான். ஊழல் என்பது கூட்டு முயற்சியின் விளைவு. இரு கை ஓசை.
அப்பாதுரை அவர்களே! சிவப்பின் வெளுப்பு இருக்கட்டும்! சிவப்பின் மீது இவ்வளவு வெருப்புவேண்டுமா?--- அன்புடன் காஸ்யபன்
Post a Comment