மாட்டுக்கறியும் மத்தியப்பிரதெசமும்.......
கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக மாட்டுக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றிய விவாதம் நடந்து வருகிறது. நக்கீரன் கோபால் "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி " என்று அறிவு பூர்வமாக ஒரு கட்டுரை எழுத அந்த கட்டுரைக்கு பதிலடியாக அ.தி.மு.க தொண்டர்கள் நக்கீரன் அலுவலகத்தை தாக்கியுள்ளனர்.
இன்று ஒரு கிலோ ஆட்டிறைச்சி 400 ரூ யாக விற்கிறது.அதேசமயம் மாட்டிறைச்சி 80ரூ லிருந்து 100 ரூயாக விற்கிறது. விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சாதரணமக்களுக்கு மாடு ஒரு இரண்டாவது வருமானத்தைத்தரும் ஒன்றாக இருக்கிறது. இன்று நம்நாட்டில் ஒரு பழைய கணக்குப்படி 3கோடி மாடுகள் இருக்கிறது என்கிறார்கள். பால் மாடுகள் 1லிட்டருக்கு 20 ரூ கொடுக்கிறது. பால் வற்றிய மாடுகள் விவசாயிக்கு ஒரு பெறும் சுமை.அவற்றிர்க்கான தீவனம் வேறு உள்ளது. இது தவிர காளை மாடுகளின் பிரச்சினையையும் அவன் சந்த்திக்க வேண்டியதுள்ளது.காளை மாடுகளை,உழுவதற்கும்,கமலை அடிப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. ட்ராக்டரும்,பம்புசெட்டுகளும் அவனுக்குதுணையாகிவிட்டன்.இன்று காளைமாடுகளை ஊசிமாடுகளாகவே வைத்துள்ளனர்.அவனுடைய தேவைக்கு 50 கறவைக்கு ஒரு காளை போதும். பிறக்கும் காளை கன்றுகளை காட்டிற்குள் அனுப்பி விடமுடியாது.காடுகளும் சிறுத்து வருகின்றன.இவற்றிர்க்கான புல் வைக்கோல் ஆகியவற்றால் பராமறிப்புச்செலவுதான் கூடும். வருமானம் தராத காளைகளையும், பால்வற்றிய கறவை மாடுகளையும் விவசாயிதலையில் கட்டுவது என்ன நியாயம்? வயதான இவைகளைப் பயன் படுத்தினால் மூக்கு ஒழுகி நிற்குமே தவிர பயன்படாது. அதனால் தான் தொடர் பொருளாதாரத்தின் அடிப்படையில் இவை இறைச்சிக்காக அனுப்பப் படுகின்றன.அதன் மூலம் விவசாயிக்கு 2000 மோ 3000 மோ வருகிறது. இது விவசாயப் பொருளாதாரத்தின் அங்கம்.சமனப் படுத்தும் வழிவகையாகும்.
மேலை நாடுகளில் காளைக்கன்றுகள் வளர்க்கப்பட்டு மாமிசத்திற்காக விற்கப்படுகின்றன..அங்கு இவை "டின்"களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன . அது ஒரு தொழிலாக மாறிவிடுகிறது. விவசாயிக்கு அங்கு இடமில்லை. அதன் லாபத்தில் அவனுக்குப்பங்கு இல்லை. கிலோ. 80 ரூ கிடைக்காது. அது சந்தைப் பொருளாதரத்தின் அங்க மாகிவிடும்.
ஒரு புராண பேச்சாளர் கூறியதை இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும். ராமாயணத்தின் அடிநாதமான திருப்பம் என்ன? மிதிலையின் இளவரசி சீதை. அரண்மனையில் விதவிதமான உணவுகளை உண்டவர். அவருக்குக் கிடைக்காத சைவ அசைவ உணவா ? ஆனாலும் அழகான மானை பார்த்ததும் அதன் மாமிசத்தைப் புசிக்க ஆசைப்பட்டு கணவனிடம் அதனைப் பிடித்து வரும்படி கெட்டுக் கோண்டார். சீதா தேவியை தெய்வமாக கொண்டாடுகிறொம். மாமிசம் சாப்பிடுவது என்பது தெய்வ குற்றம் இல்லை. ஆட்டுருவத்தில் வந்த அசுரர்களை அடித்து சாப்பிட்ட முனிபுங்ககவர்கள் வாழ்ந்த நாடு இது. மாட்டுக்கறியை சாப்பிட்டால் மக பாவமா?
நக்கீரன் கோபால் பதில் சோல்லட்டும். அவரை மறைமுகமாக ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் பதில் சொல்லட்டும். அ.தி.மு.க தலைவர்களும் தொண்டர்களும் பதில் சோல்லட்டும்!
இப்பொது மாட்டிறைச்சியை உண்டால் பாவம் மட்டுமில்லை! ஏழு ஆண்டுகள் சிறைதண்டனைக்கு உள்ளாகும் குற்றம் என்று பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச அரசு சட்டமியற்றி உள்ளது. இந்த சட்டத்தின் படி ஒரு காவலர் ஒரு வீட்டில் மாட்டிறைச்சி சமைக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலே கைது செய்யலாம். காவலர் நீதிமன்றத்தில் அதை நிரூபிக்கத்தேவையில்லை.குற்றம் சாட்டப்பட்டவர்தான் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.
போபாலிலும் இந்தூரிலும் ம.பி யின் மற்ற பகுதிகளிலும் கணிசமாக வசிக்கும் முஸ்லீம் மக்களின் கதி என்ன ? மனித உரிமை பேசுவோர் என்ன செய்கிறார்கள்?
தலித்துகளுக்காக உயிரைக்கொடுப்பேன் என்று மார்தட்டும் திருமா,கிருஷ்ணசாமிகள், ரவிகள்,குமார்கள்,சந்திரன்கள் என்ன செய்கிறார்கள்?
14 comments:
iyya, vanakkam.
This writing on Cow Meat and Madya Pradesh, reflects the reality. Concern for poor farmers and consumers is also beautifully upheld in your article.
Thank you for enlightening the readers.
...மானை பார்த்ததும் அதன் மாமிசத்தைப் புசிக்க ஆசைப்பட்டு கணவனிடம் அதனைப் பிடித்து வரும்படி கெட்டுக் கோண்டார், சீதா தேவி
I wonder if you made spelling mistake here purposively. The sarcastic meaning is poetic.
//ஆனாலும் அழகான மானை பார்த்ததும் அதன் மாமிசத்தைப் புசிக்க ஆசைப்பட்டு கணவனிடம் அதனைப் பிடித்து வரும்படி கெட்டுக் கோண்டார்./தவறான புரிதல்.
Next,some leader in MP has announced that cow dung can protect from nuclear radiation, protect delivery of babies by eliminating C- section , and what not!
மாட்டுக்கறி சாப்பிட்டா ஏழு வருஷமா? சரிதான். என்ன கட்சி இது! குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரூபிக்க வேண்டுமா?!! unconstitutional and fundamentally against the law. இதுக்கெல்லாம் சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் சண்டை போட மாட்டார்களா? அன்னாவைக் கேட்டுப் பயனில்லை. உண்ணா விரதம் இருக்கிறேன் என்று கிளம்பிவிடுவார். பெரியார் மாட்டுக்கறி உண்ணும் விரதம்/போராட்டம் நடத்தியதாகப் படித்திருக்கிறேன். அதுமாதிரி ஏதாவது செய்ய வேண்டும்.
மனித உரிமை என்ற பெயரில் இந்த எதிர்ப்பை எதிர்க்கிறேன்.
உடல் ஆரோக்கியம் என்ற பார்வையில் மாட்டிறைச்சி சாப்பிடாவிட்டால் ஒன்றும் குறைந்துவிட மாட்டோம் என்றே தோன்றுகிறது. மாட்டிறைச்சியும் ஆட்டிறைச்சியும் தான் அதிக அளவு கொலஸ்டிரால் மற்றும் கொழுப்பு கொண்டவை. இன்றைக்கு அமெரிகாவின் obesityக்கு முக்கிய காரணம் ரத்தமாமிசம் எனப்படும் மாட்டிறைச்சி என்று நம்பப்படுகிறது.
திடீரென்று சந்தேகம் வந்துவிட்டது. மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்பவர்கள் ஒருவேளை நன்கு சமைக்காமல் சாப்பிடக்கூடாது என்கிறார்களோ? நாம் தான் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டோமோ?
மதிப்பிற்குரிய ராஜசேகரன் அவர்களே! ராமானுஜம் என்ற அறிஞர் ரமாயணம் 3000வகை இருப்பதாக கட்டுரை எழுதியுள்ளார்.டெல்லி பல்கலைக்கழகத்தில் அது பாடமாக இருந்தது. ராமபக்தர்கள் எதிர்த்தனர். அந்தகட்டுரை நீக்கப்பட்டுவிட்டது. எம்.ஆர்.ராதாவின் கீமாயணத்திலிருந்து ,லங்கேஸ்வரன் வரை ராமாயண படிவம் உண்டு. புத்த கதைகளில் புத்தரின் அவதாரத்தில் ஒன்று ராமன்.ராவணனின் மகள் சீதை என்று ஒரு ராமாயணம் உண்டு.ராமனின் தங்கை சீதை என்று உண்டு. தாய்லாந்து , இந்தோனிசியா,இலங்கை ,ஆகிய நாடுகளிலும் ராமாயண கதைகள் உண்டு.வால்மீகி ராமாயணத்தில் உத்திர காண்டம் உள்ளது அதனை படிக்ககூடாது என்பது ஐதீகம். ராமன் மகாவீரனனலும் அவனுக்கு நீச்சல் தெரியாது. சரயு நதியில் "கசத்தில்" வீழ்ந்து இறந்தான் என்று பாரதியார் பாடியிருக்கிறார். நீங்கள் வழக்குரைஞர். மத்தியபிரதேச சட்டம் பற்றி அதன எதிர்ப்பது பற்றி சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் ---.அன்புடன் காஸ்யபன்.
தோழர் .காஸ்யபன் அவர்களே, இந்தியாவில் வேதகாலத்தில் பிராமணர்கள் உண்ட மாட்டுக்கறியின் விலை குறைந்தது என்ன்னவோ உண்மைதான், ஆனால் வளைகுடா நாடுகளிலும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளிலும் பீப் விலை மட்டன் விலையை விட சில சம்யம் அதிகம்.
நக்கீரன் மாமியை அம்பலப்படுத்தாக நினைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் மாமிச உணவை இழிவுபடுத்துகிறார். இரண்டும் கறிதானே. ஆதவன் தீட்சண்யாவின் பாட்டு ஞாபகம் வருகிறது. ஆட்டையும் மாட்டையும் ஒன்றெனக்கருதி அறுத்து தின்பவர் எத்தனை பேர்...?
ஆட்டுக்கறி மாட்டுக்கறியை விட இயற்கையில் அதிகச் சுவையானது என்பதால் ஆட்டுக்கறி விலை தான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன். விலை வித்தியாசத்துக்கு demand-supply காரணமாக இருக்குமோ?
ஆட்டுக்கறி மாட்டுக்கறியை பற்றி கதைக்கும் போது ஏன் சுவையான பன்றிகறியை மறந்தீர்கள் ? பன்றி கறிக்கு மட்டுமல்ல பன்றியில் செய்த sausage ரொட்டியோடு மடித்துவைத்து சாப்பிட்டு பாருங்கள் அந்த மாதிரி சுவை.
1) கோமாதாவின் கறியா? ஐயோ குடிமுழுகி போச்சே என்று கும்மரிச்சம் போடுபவர்கள் கேரளாவுக்குபோகட்டும், அங்கே இறைச்சி என்றால் மாட்டிறைச்சிதான், ஆட்டுக்கறியின் பயன்பாடு குறைவே. புரியவில்லையா? அங்குள்ள இந்துக்களின் பெரும்பான்மையோர் உண்பது மாட்டுக்கறிதான். கேரள அரசு அலுவலக கேண்டீன் களிலும் மாட்டுக்கறி உண்டு! கேரளா! Gods Own Country! அதாவது கடவுளர்களின் தேசம் என்பதறிக!
2) இந்தியர்களாகிய நாம் உபயோகிக்கும் அத்தியாவசிய உபகரணங்கள் அனைத்தும் மாட்டுக்கறி சாப்பிடும் வெளி நாட்டுக்காரன் கண்டுபிடித்தவைதான்! ...மின்சாரம்,மின்சாரபல்பு,கார்,சைக்கிள், ரயில், ஆகாயவிமானம், வானொலி, தொலைக்காட்சி,கணிப்பொறி, போக்ரானில் வெடிக்கப்பட்ட 2 அணுசக்தி (சோதனை), தற்போது ‘வேணுமா வேண்டாமா’ என்று பேசப்படும் அணுசக்தி,கார்கிலில் பாரத்மாதா கீ ஜே என்று முழங்கும்போது நமது வீரர்களின் கையில் இருந்த துப்பாக்கி...இன்னபிற சமாச்சாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்! மன்மோஹன் சிங், சிதம்பரம் கும்பல் தினசரி காலையில் வழிபடும் அமெரிக்க அதிபர் மாட்டுக்கறி சாப்பிடுபவர்தான்!
3) நாங்க சுத்த்த்த்த சைவம், காய்கறி மட்டும்தான் சாப்டுவோம் என்று சொல்லிக்கொண்டே மனிதர்களை நடு வீதிகளில் கத்திகளால் கட்டாரிகளால் பிளந்து உயிரை எடுப்பவர்கள் மனிதர்களா? மாட்டுக்கறியும் சாப்பிட்டுக் கொண்டு சகமனிதர்களின் துயரம் கண்டு வருந்தி கசிபவர்கள் மனிதர்களா?
4) இறுதியாக:ஹரியானாவில் செத்துப்போன மாட்டின் தோலை உரித்த தலித்துக்களை உயிரோடு கொளுத்தி யவர்கள் சைவமா அசைவமா?
(தோழர் எஸ்.காமராஜ் அடர்கருப்பு வலைப்பூவில் எழுதிய "நக்கீரன் அலுவலகத்தில் எறியப்பட்ட கல்ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது” என்ற பதிவுக்கு நான் எழுதிய பின்னூட்டம்)
அன்பு காஷ்யபன்
அருமையான பதிவு. மத்தியபிரதேச சட்டம் ஏற்கமுடியாதது.
ஜெயலலிதாவை விமர்சிக்க விரும்புபவர்கள்
அவரைப் பெண் என்கிற முறையில் ஏசும்போது
பெண்கள் குறித்த தங்களது பார்வையை அம்பலப் படுத்திக் கொள்கின்றனர்.
மாமி என்று சொல்லும் போது
மேல்சாதிக்கு எதிரான தங்களது கோபத்தை
ஆனால்,
மாமியையும் மாட்டுக் கறியையும்
ஏக காலத்தில் எடுப்பவர்கள்
மாடு தின்னும் புலையா உனக்கு மந்திர நினைவோடா
என்று நந்தனாரைக் கேட்டோர் அருகில் போய் நின்றுவிடுகின்றனர்.
இது தான் நவீன அத்வைதம் போல் இருக்கிறது.
எதிர்ப்பின் எதிர்ப்பும் எதிர்க்க முடியாத சகிப்பும் ஒரே மேடையில்.
ஜெயா மாடு தின்கிறாரா, மரக்கறி தின்கிறாரா என்பது பிரச்சனை இல்லை
திராவிட பாரம்பரியத்தின் வரிசையில் என்று ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தான் பார்க்க வேண்டியது.
பரபரப்பு அரசியல் உண்மையில் மாற்று அரசியல் குறித்த சிந்தைக்குத் திசை திருப்பலாகவே முடிகிறது
கோபால் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டியது பெரியாரிடத்தும், அம்பேத்கரிடத்தும், தமது வாசகரிடத்தும் தான்..
நீதிமன்றத்தில் கேட்டது மனமுவந்து கேட்டதாகாது.
ஆனால், கருத்து முரண்பாட்டுக்காக கலகத்தின் கழுத்து நெரித்தலில் தொடர்ந்து ஈடுபடும் ஆட்சியாளர்கள்
எப்போது மன்னிப்பு கேட்க வைக்கப்படுவார்கள், மன்னிக்கத் தான் முடியுமா, கேட்டாலும் அவர்களை?
எஸ் வி வேணுகோபாலன்
ஆட்டுக்கறி சாப்பிடுபவன் மேட்டுக்குடியா கோழிக்கறி சாப்பிடுபவன் சிறந்தவனா, மாட்டுக்கறி சாப்பிடுபவன்மட்டமானவனா,பன்றிக்கறி சாப்பிடுபவன் மனிதனே இல்லையா, எல்லாக்கறியும் சாப்பிடுபவன் மட்டுமே மனிதன். உயிர் வாழ மீன், காட்டில் உள்ள மான், உடும்பு, சில வகை பாம்புகள் நண்டு, ஆமை நாய்க்கறி என்று பட்டியல் நீளமாக இருக்கிறது. மாட்டுக்கறி மட்டம் என்ற சிந்தனையிலிருந்துதான் எல்லாமே துவங்குகிறது. உண்மையில் கோமேதகயாகம் செய்து பிராமணர்கள் துவங்கி வைத்ததினின்றும் மாட்டுக்கறி நாகரீகம் துவங்குகிறது.
Post a Comment