மத்திய அமைச்சரவையின் அசையா மூலதனம் அந்தோணியாகும்.......
வங்கிகள் ஆண்டுதொறும் அவர்களின் வரவு செலவு கணக்கை அறிவிப்பார்கள். அதில் கடன்கொடுத்து வராதவைகளையும் தங்கள் சொத்துக்களோடு சேர்த்திருப்பார்கள் . அதேசமயம் இந்த சொத்தின் மூலம் வங்கிக்கு "முக்காத்துட்டு" வரும்படி வராது. பேப்பரில் மட்டும் எழுதிவைப்பார்கள் .இதனை ஆங்கிலத்தில் N PA(Non performing asset) என்பார்கள்
டெல்லியில் உள்ள பத்திரிகையாளர்களும்,சக அமைச்சர்களும் பாதுகாப்புத்துறை அமைச்சர் A.K. அந்தோனியை நமுட்டுச்சிரிப்போடு NPA என்றுதான் அழைப்பார்கள். .
உலகத்தின் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்திய ராணுவம் சுமார் 1கோடியே 13 லட்சம் பேர் பணியற்றுகின்றனர். அதன் தலமைதளபதியாக ஜெனரல் வி.கே .சிங் இருக்கிறார்.அவர் பிறந்த தெதியில் சிக்கல் எற்பட்டுள்ளது.அதற்குக் காரணம் பாதுகாப்பு அமைச்சரவைதான். அந்தோனி செய்யவேண்டியதை செய்யவேண்டியநேரத்தில் சரியாக செய்திருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது . ஜெனரல் சிங் அமைச்சருக்கு கடிதம் எழுதியும் பதில்போடாமல் இருந்ததால் வந்த வினைதான் இன்று உலகத்தின் முன் ஒரு அற்புதமான ராணுவ வீரன் ஒருநாட்டின் தளபதி தலைகுனிய வேண்டிய நிலை எற்பட்டுள்ளது.
ஜெனரல் சிங்கின் தந்தையும் ராணுவத்தில் பணியாற்றியவர்தான். அவருடைய மனைவி ராணுவ மருத்துவ மனையில் தான் 1951ம் ஆண்டு மே மாதம் 10ம் தெதி குழந்தையப் பெற்றார். ராணுவ மருத்துவ மனையில் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிங்கின் தந்தயின் ராணுவ கோப்புகளிலும் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருயைய s.s.l.c. சான்றிதழிலும் 10-5-51 என்றுதான் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சிறுவன் சிங்குக்கு 14 வயதாகும் போது அவன் தந்தை மகனை தேசீய ராணுவக் கல்லுரியில் சேர்க்க விரும்பினார். சிறுவன் அதற்கான மனுக்களை வாங்கி தன் ஆசிரியரிடம்கோடுத்து பூர்த்தி செய்யச்சொன்னான்.ஆசிரியரும் பூர்த்தி செய்து கொடுத்தார். அதி பிறந்த தேதி 10-5-50 என்று குறிப்பிட்டிருந்தார். படித்து பட்டம்பெற்று ராணுவத்ர்தில் சேர்ந்து சிறந்த வீரன் என்று பெயரெடுத்து லெப்.ஜெனரல் ஆனார் சிங். அடுத்து அவர்மேஜர் ஜெனரல் பதவிக்கு வரவேண்டும்.அப்பொது தான் ராணுவ அமைச்சக அதிகாரி அவருடைய பிறந்ததெதியில் உள்ள முரண்பாட்டினை தெரிவித்தார்.அதிர்ந்து போன சிங் ராணுவ அதிகாரிகளின் யோசனையின் பேரில் எதாவது ஒருதெதியை தெர்ந்தெடுத்தால் பொதும் என்றும் அதனை பணிக்காலத்தில் மாற்ற மட்டேன் என்றும் எழுத்துமூலமாக உத்திரவாதப்படுத்த வே
ண்டும் என்றும் கூறியதால் அவ்வாறே செய்தார்.
அவர் உண்மையில் பிரந்த தெதி1951. ஆனால் வேண்டாதவர்கள் மொட்டை பொட்டு அவருடைய பிறந்தநாளில் சிக்கல் உள்ளது என்றும் அவருடைய பிறந்தவருடத்தை 1950 என்று தான் கணக்கிட வேண்டுமென்ரும் சாதிக்கின்றனர். அமைசகமும் 50என்று முடிவு செய்து அவரை ஓய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
ஜெனரல் சிங் பல சந்தர்ப்பங்களில் அமைச்சக அதிகாரிகளொடு மோதியவர்.நேர்மையானவர் என்று பெயர் எடுத்தவர்.1கோடியே 13 லட்சம் பெருக்கு காலுக்கு பூட்ஸ் வாங்க வேண்டுமானாலும் ஒப்பந்தகாரர்கள்தான். அவர்கள் சட்டைகளில் பொடும் பித்தலை பொத்தான் கூட வாங்க ஒப்பந தகாரர்கள் தான். "ராணுவம் தன் காலால் நடப்பதில்லை.அது தன் வயிற்றால் நடக்கிறது" என்று சொல்வார்கள். எந்தப்பாவி பத்தவச்சானோ !
ஜெனரல் சிங் அந்தோணிக்கு பலமுறை கடிதத்தின் மூலம் தன் பிற்ந்த தெதியை சரிசெய்யும்படி கேட்டுக்கொண்டும் எதுவும் அவர் செய்யவில்லை.
இது என் சுய மரியாதையை,நேர்மையை பாதிக்கும் என்கிறார்ஜெனரல் சிங்.
இந்திய ராணுவத்தின் மரியாதையும் பதிக்கப்படும்.
இதனைதவிர்க்க ராஜீனாமாசெய்துவிடலாமா என யொசிக்கிறார்.ஜெனரல் சிங்!
3 comments:
ayya vaNakkam.
thanks for sharing the Gen Singh V K Singh's date of birth controversy.
Hope our politicians have acumen to take quick decision and save the country from such ignominy.
Ayya my article on
பசு வதை தடையா, தடையால் வதையா? is posted on my blog.
http://johnchelladurai.blogspot.com/2012/01/blog-post_16.html
give your comment
kusumbaana thalaippu
Post a Comment