ரத்தம் அடர்த்தியானது.....(முழுக்க முழுக்க கற்பனை)
மேற்கு ஆசியாவில் உள்ள தேசத்தின் இளவரசர். ஷேக்-பின் -சாப்ரி- அலி என்பது அவர் பெயர்.மிகவும் பராக்ரம சாலி. "எல்லாம் இறைவனுக்கே " என்று வாழ்பவர். பின் லெடனுக்கு விசுவாசமாக இருப்பவர். வெளியில் தெரியாது. அவருக்குத்தான் இதய நோய்.அறுவை சிகிச்சை செய்தால் தான் பிழைப்பார் என்பது நிலமை.அங்கு சிகிச்சை முடியாது என்பதால் ரகசியமாக இந்தியாவநதார்.
மும்பையில் சிகிச்சைக்கு எற்பாடாகி இருந்தது. ஆனாலும் சிக்கல் தான்.அவருடைய ரத்தகுரூப் நான்கு வகையையும் தாண்டியிருந்தது.அசாதாரணமானது மிகைச்சிலருக்குத்தான் அத்தகைய குரூப் உண்டு . மும்பை டாக்டர்கள் கையை விரித்து விட்டனர். உடனடியாக ரத்தம் வந்தால் தான் அறுவை சிகிச்சை நடத்தமுடியும் என்று கூறிவிட்டனர்.
குஜராத்தில் அப்போது தான் "சத்பாவனா "(நல்லெண்ண இயக்க ம்) தொடங்கியிருந்தது. முதலமைச்சர் அதனை கோத்ரா ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிப்பதாக இருந்தது.ரத்ததானத்துடன் ஆரம்பிக்க இருக்கிறார்கள். முதலமைசர் ரத்த தானம் செய்கிறார். அவருடைய ரத்தம் மிகவும் அபூர்வமானது. பத்திரிகைகள் பக்கம் பக்கமக செய்திகளை எழுதியிருந்தன .
மும்பை டாக்டர்கள் "வலையில்" தேடிப்பிடித்து அரபிய இளவரசருக்கு இந்த ரத்ததை கொடுக்க முன்வந்தனர்.
குஜராத் முதல்வர் ஒரு அரபிய இளவரசருக்கு ரத்தம் கொடுப்பது முக்கிய செய்தி அல்லவா!
சர்வதேச பத்திரிகையாளர்களும் தொலைகாட்சி நிருபர்களும் வந்து குவிந்துவிட்டனர்.சிறப்பு விமானத்தில் டாக்டர்கள் மும்பையிலிருந்து வந்து ரத்தத்தை பெற்று செல்ல ஏற்பாடகியிருந்தது." ஜெயா " தொலைக்காட்சியில் " சோ" ராமசாமி சிறப்பாக நிகழ்ச்சிகளைதொகுத்தளித்தார்.
இளவரசருக்கு அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது மயக்கம் தெளிய மருத்துவர்களும் அவருடைய மனைவியும் தம்பியும் காத்திருந்தனர். இளவரசர் கண்விழித்தார். மருத்துவர்கள் மகிழ்ச்சியாக அவருடைய தம்பியை அழைத்தனர்.தம்பியை இளவரசர் பார்த்தார். அருகிலிருந்த பாதுகாவலரின் துப்பாக்கியைப் பிடுங்கி முஸ்லீம் தம்பியை சுட்டுக் கொன்றார். .
உலகமே திகைத்தது!
அத்வானி திகைக்கவில்லை!!
10 comments:
நல்ல கற்பனை ஐயா.
ஒரே குரூப் !! ரெத்தம் தானே? ஏன் சுட்டார்.
நல்ல வேலை. ஸ்டாலின் ரத்தத்தையோ, மாவோ ரத்தத்தையோ கொடுக்கல. மொத்த இந்தியாவும் கண்டமாகி இருக்கும்.
yaen Indha kolaveri ayya?
Its worth reading all over the world
எத்தனை அத்வானிகள்? ரொம்ப யோசிக்க வேண்டிய கேள்வி.
ஒரு வேளை அவர் தம்பி பெரிய தீவிர வாதியோ? புது ரத்தம் வந்தவுடன் நல்லெண்ணம் வந்து கொன்றுவிட்டாரோ? just kidding!
சில கருத்துக்கள் கற்பனை மூலமாக Targets the bulls eye.மிகவும் ரசித்தேன்.
ஹா..ஹா...ஹா... சிறந்த பதிவு. ரசித்தேன்.
நல்ல கற்பனை.....
ரத்தத்தை விட இந்த கற்பனைக்கு அபார அடர்த்தி!
Post a Comment