Tuesday, May 29, 2012

ரத்னவேல் அவர்களும் அவர்கள் வீட்டு சப்பாத்தியும்....... பதிவர் ரத்னவேல் நடராஜன் அவர்களை சந்திக்க விரும்பினேன்.ஏழை எளிய மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று மனதார விரும்புபவர்.முகம் தெரியாத ஏழைக்குழந்தைகளூக்கு எவருக்கும் தெரியாமல் கல்விக்காக உதவுபவர். இதில் மொழி,இனம், சாதி என்ற பாகுபாடு அறியாதவர்.இத்தகைய பெரியவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் முத்துமீனாட்சி அவர்களுக்கும் நாங்கள் தென் தமிழகம் சென்றிருந்தபொது கிடைத்தது. நான் என்மகள் குடும்பத்தொடு திருச்சியிலிருந்து தென்காசி செல்லும் வழியில் ஸ்ரீவில்லி புத்தூர் சென்றோம். ரத்னவேல் அவர்களின் துணைவியார் உமா காந்திமதி அவர்கள் என்னையும் முத்துமீனாட்சியையுமவர்கள் இல்லத்திற்கு அழைதுச்சென்றார்கள்மிகவும் சுறுசுறுப்பான அந்த அம்மையார் செல்லுந்தில்( moped). வந்து எங்களை காமராஜர் சிலை அருகில்சந்தித்தார். அவர்கள்வீடிருக்கும் தெருமுனையிலேயே ரத்தினவேல் முகமன் கூறி வரவேற்றார். அனுபவ அறிவு பட்டுத்தெறிக்கும் முகம்.எளிமையான வெள்ளைசட்டையும் வேட்டியும் அவருடைய கம்பிரமான தோற்றத்தை அதிகரித்தது. அம்மையாரோ அவருடைய நெருக்கமான உறவினர்கள் வந்திருப்பது போன்று சரளமாக பேசி மகிழ்ந்தார்கள்.ரத்னவேல் அவர்களின் பதிவுகளில் மிகவும்சிறப்பான அம்சம் அதில் வெளி வரும் புகைப்படங்கள். அதன எடுப்பது அம்மையார் என்பதால் மிகவும் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தேன்.. "பிள்ளைகள பள்ளிகூடத்தில் விட வசதியாக இருக்குமென்று தான் வண்டியோட்டக் கற்றுக்கொண்டேன்" என்றார் உமா அம்மையார்.மூன்று மகன்கள் ஒருவர் அமெரிக்காவிலிருக்கிறார். மற்றொருவர் சென்னையில்.மூன்றாமவர் பங்களுருவில் .எல்லாருமே பொறியியல்பட்டதாரிகள்.. . ரத்னவேல் அவர்களின் சகோதரி பக்கத்து வீட்டில் வசிக்கிறார்.சகோதரியின் மகன் அறிவியல் மூன்றாம் ஆண்டு. அடுத்து பட்ட மேல் படிப்பு படிக்க விருப்பம் என்றார்.. சக மாணவர்களோடு சேர்ந்து பொது சேவையில் ஈடுபடுவதாகவும் கூறினார்.அப்படியானால் I.A.S எழுதலாம் என்றுஆலொசனை கூறினேன்.ரத்னவேல் அவர்கள்முகம்மலர அதனை ஆமோதித்தார்கள். காமராஜரின் இலவசகல்வித்திட்டத்தால் தான் நான் s.s.l.c வரை படிக்கமுடிந்தது என்றார்".துணைவியார் அருமையாக சமைப்பார்கள்" பெருமையோடு சொன்னார்கள். கடுமையான சர்க்கரைநோயாளியான எனக்கு "சப்பாத்தி".செய்து தருவதாக கூறினார்கள்.தமிழ்நாட்டில் சப்பாத்தி செய்தால் "மாட்டுத்தோலில் " செய்தமாதிரி இருக்கும்.அன்பொடு சொல்வதால் சரி என்று கூறினேன் பதினைந்து நிமிடத்தில்சூடாக உருளைக்கிழங்கு குருமாவோடு சப்பாத்தி வந்தது.நானும் முத்து மீனாட்சியும் சாப்பிட்டோம். நாங்கள் எங்கள் வாழ்நாளில் இவ்வளவு ருசியாக சப்பாத்தி சாப்பிட்டதில்லை. முத்து மீனாட்சி செய்முறையைத் தெரிந்துகொள்ள விரும்பினார்கள்.."நாங்கள் சப்பாத்தி மாவை தண்ணிர் விட்டுப் பிசைய மட்டோம்.ஒரு பாத்திரத்தில் பாலைவிட்டு அதில் தெவையான உப்பையும் போட்டு அதன் பிறகு மாவைப்போட்டு பிசைவோம்"என்றார். நாங்கள் விடைபெறும்நேரம்.புகைப்படம் எடுத்துக் கொண்டோம். வில்லிபுத்தூரின் புகழ் பெற்ற பால் கொவாவைக் கோடுத்தார். அரிசிஉணவுக் குறைத்து கோதுமைதான் நான் அதிகம் உண்பது. பாலில் பிசைந்த சப்பத்தி தான் மதியம்.தினம் ரத்னவேல் ஐயாவையும் உமா காந்திமதி அம்மையாரையும் நினத்துக் கொண்டே உண்கிறேன்.

10 comments:

Rathnavel Natarajan said...

மிக்க மகிழ்ச்சி.
மிகவும் நெகிழ்ந்து விட்டோம்.
மிக்க நன்றி.

சே. குமார் said...

உங்களது சந்திப்பு குறித்து ஐயா பதிந்திருந்தார். படித்து மகிழ்ந்தோம்.
நல்ல நட்புக்கு அடையாளமாய் நீங்கள் அவரையும் அவர் உங்களையும் புகழ்வது மிக்க மகிழ்ச்சி.

kashyapan said...

குமார் அவர்களே! நான் புகழவில்லை. நானும் முத்துமீனாட்சியும் அனுபவித்ததை அப்படியே பதிவு செய்துள்ளேன்!---காஸ்யபன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சந்திப்பு ! வாழ்த்துக்கள் !

ஹரிஹரன் said...

நல்ல சந்திப்பு...

ரத்னவேல் ஐயாவின் சேவை நெகிழ்வைக்கிறது.

மோகன் குமார் said...

சார் அப்பா துரை மூலம் இன்று தான் உங்கள் பதிவை அறிந்தேன். மகிழ்ச்சி

ரத்னவேல் சார் இணையம் மூலம் பழக்கம். நன்கு ஊக்குவிப்பார். நேரில் சந்திக்க ஆர்வம் இத்தகைய பதிவுகள் மூலம் வருகிறது

மோகன்ஜி said...

காஸ்யபன் சார்! நலம் தானே? உங்கள் பதிவைப் படித்தவுடன் எனக்கும் வில்லிபுத்தூர் போகும் ஆசை வந்து விட்டது.
ஹைதராபாத் எப்போது வரப் போகிறீர்கள்? எங்க வீட்டுலயும் கேஸ் இருக்கு. நாங்களும் சப்பாத்திக் கல்லு வச்சிருக்கோம். எங்க வீட்டுல கூட குருமா செய்வாங்களாக்கும்!

S.Raman,Vellore said...

நெகிழ்ச்சியான சந்திப்பு.
பதிவிற்கு நன்றி.
அடுத்த முறை வேலூர்
வாருங்கள், தோழர்

சிவகுமாரன் said...

\\\\எங்க வீட்டுலயும் கேஸ் இருக்கு. நாங்களும் சப்பாத்திக் கல்லு வச்சிருக்கோம். எங்க வீட்டுல கூட குருமா செய்வாங்களாக்கும்!///

அதே.. அதே... அதே

kashyapan said...

மோகன் ஜியவர்களே! சிவகுமரன் அவர்களே! சப்பாத்தி கல் இருக்கு! குருமா இருக்கு! காஸ் இருக்கு! பால் இருக்கா? மாவை பால்ல பிசைவேறா? நான் வாரேன்!---காஸ்யபன்