Saturday, June 02, 2012

Mayopathi தசைநலிவு

mayopathi (தசை நலிவு நோய்) மனித உடலின் அசைவுக்குக் காரணம் எலும்பும் அதைஒட்டி இருக்கும் தசைகளும் தான்.தசைகள் விரிந்தும் சுருங்கியும் செயல்படும் போது கை,கால் ஆகியவற்றை நாம் நீட்டவும் மடக்கவும் முடிகிறது இந்த தசைகள்நலிவுற ஆரம்பித்தால்நம்முடைய அசைவுகளும் குறைய ஆரம்பிக்கின்றன.இதனை ஆங்கிலத்தில் . Mayopathi என்றும் தமிழில் தசை நலிவு என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த நோய் சிறுவயதிலேயே வருகிறது .குழந்தைபிறந்து இரண்டு மூன்று வயது வரை அறிகுறி எதுவும் தெரிவதில்லை குழந்தை வளர வளர அதன் எலும்புகளும் தசை களும் வளருகின்றன.எலும்பு வளரும் விகிதத்திற்கு எற்ப தசைகள் வளர்ந்தால்பிரச்சினை இல்லை.தசை யின் வளர்ச்சி குறையும் போது குழந்தையின் அசவுகளும் குறையும. ஓடிவிளையாடிக் கொண்டிருந்த குழந்தை சோவுற்று தவிக்கும். பெற்றொர்கள் போஷாக்குக் குறைவு என்று கருதுவார்கள். நல்ல போஷாக்கன உணவினை கொடுப்பார்கள்.குழந்தையின் எடை கூடும்.அதன் அசைவு மேலும் குறையும். ஒரு மட்டத்தில் சக்கர நாற்காலி பயன் படும். இது மெலும் எலும்பினியக்கத்தைத் தடுக்கும். ஒருகட்டத்தில் கை,கால் என்று தாசைகள் நலிவடைந்து இதயம்,வரை சென்று உயிர் பிழைப்பது அரிதாகிவிடும் எனது மைத்துனர்நாகபுரி Meditirina என்ற பிரும்மாண்டமான மருத்துவமனையில் பணியாற்றுகிறார் . டாக்டர்.சுரெந்திர வன்சாரே.அவருடைய நண்பர்.சுரெந்திர வான்சாரே யின் மகன் அகான். 11வயது அவனுக்கு தசை நலிவு நோய் பதிப்பு உள்ளாதகவும் அதற்கான சிகிச்சை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் அமபை தாலூகா வீரவநல்லுரில் சிறப்பு மருத்துவமனை இருப்பதாகவும் அது பற்றிய முழு விவரம்வேண்டும் என்றும் என்னிடம் கூறினார்கள். நான் த.மு.எ.க.ச மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் கிரிஷி அவர்களை தொடர்பு கொண்டேன்.நெல்லையிலிருந்து "சார்வாள்! கொக்கிரகுளத்டுக்காரனுக்கு டவுண் தெரியாது. இது தான் திருநெள்வேலிக்காரன் பொழப்பு. நான் வீரவநல்லுர் பொய் பாக்கேன். பொறவு விவரம் சொல்லுதேன் "என்றார். மறுநாள்:" சார்வாள் அருமையான ஆஸ்பத்திரி. கொறஞ்சது 60 குழந்தைகளாவது பமபாய் சிம்லான்னு வந்து சிகிச்சை நடந்து கிட்டுஇருக்கு டாகடரவாள வந்து பாக்கச்ச்சொலுங்க. சிகிச்சை ஆறு மாதமோ ஒருவர்சம் எடுக்கணும்காங்க. எதுக்கும் அவாள வந்து பாத்துட்ட அப்புறம் பிள்ளைய கூட்டிகிட்டு வரட்டும்" என்றார். . பாஷை தெரியாத டாக்டரை நெல்லையில்சந்தித்து வீரவநல்லூர் அழைத்துச்சென்ற கிரிஷியை டாகடர் வாய் கொள்ளாமல் புகழ்ந்தார். டாக்டர்,அவர்மனைவி,அவர்மகள், சிகைச்சைக்கு போகவிருக்கும் அவர்மகன் ஆகியோர் என்வீட்டிற்கு வந்திருந்தனர். அவர் மகன் அகன் ராஜாமாதிரி இருந்தான்..பால்வடியும் முகம் நல்ல உயரம். நல்ல சரீரம்.சக்கர நாற்காலியில் வந்திருந்தான்.கொசுக் கடித்தால் கூட அவனால் கையை அசைத்து ஒட்டமுடியாது.அவனை அழைத்துக்கொண்டு அவனுடைய தாயர் வீரவநல்லூர் செ ன்றார்.அவர்களை நெல்லயில் சந்தித்து வீரவநல்லுர் கூட்டிச்சென்றதும் கிரிஷிசார்வாள்தான். சென்ற மாதம் தென் தமிழகம் சென்றிருந்த நானும் முத்துமீனாட்சி அவர்களும் தெங்காசியிலிருந்து நெல்லைசெல்லும் வழியில் இவ்வளவு தூரம் வந்துவிட்டு அகனையும் அவன் தாயாரையும் பார்க்காமல் போகவேண்டாம் என்று வீரவநல்லுர் சென்றோம்.அவன் தாயர் பிரதீபா அவரப் பெற்றவர்களே வந்தது போல் எங்களை வரவேற்றார். மிகப் பெரிய வளாகம். குஜராத்,ஹரியானா,மகராஷ்ட்றா,கெரளம், என்று ஒருகுட்டி இந்தியாவே அங்கே இருந்தது. மருந்து கொடுப்பதில்லை. முதலில் உடல் பயிற்சி--அதன்பிறகு சக்கிர நாற்காலியில்லாமல் அசைவு பயிற்சி கொடுக்கிறார்கள். நடை பயிற்சி,நீச்சல் பயிற்சி.என்று செய்யவைக்கிறார்கள். அகன் நீந்து கிறானாம்.அவன் தாயார் மகிழ்ச்சியோடு சொன்னார்கள். அவன் மிகவும் இளைத்திருக்கிறான்..குறைந்தது 18 மாதம் சிகிச்சை பெற வேண்டுமாம். அந்த வளாகம் முழுமையும் காட்டினார்கள்.பயிற்சி எடுக்கும் இட்ம்,நீச்சல் குளம் என்று பார்த்தோம். ஒரு சிறுவனின் சிலை இருந்தது. அந்த பையன் சிகிச்சை பெற்று இப்போது அலொபதி மருந்து சாப்பிட்டு வருகிறான். அவன் மத்திய அமைச்சர் நெப்போலியனின் மகன். மிகவும் சிறிய அளவில் இருந்த இந்த மருத்துவ மனையின் முக்கியத்துவம் கருதி அமைச்சர் நிதிஉதவி செய்து பிரும்மானடமான வளாகத்தைக் கட்டியுள்ளார். வரும் நோயாளிகளில் வடநாட்டினர் அதிகமாக உள்ளனர். நோயாளிகள் வரும் பொது இருந்த தசைநலிவை மெலும் அதிகமாகாமல் தடுக்கிறார்கள் .மெள்ளமெள்ள புதிய பயிற்சிகள் மூலம் குணப்படுத்துவது அவர்கள் நோக்கம். 13 வயதுக்கு மேல் குணப்படுத்துவது கடினம் என்கிறார்கள். சிகிச்சை, பயிற்சி, எதற்கும் கட்டணம் வசூலிப்ப்தில்லை. நோயாளி,உறவினர் ஆகியோர் தங்குமிடம், மற்றும் உணவிற்காக மாதம் 12000 ரூ கட்டணம்செலுத்தவேண்டும். அமைச்சர் நெப்போலியன் நெல்லை மாவட்டத்தை ஒருசர்வதேச மருத்துவ மையமாக ஆக்குவார் என்பது என்போன்றவர்களின் நம்பிக்கை!

7 comments:

venu's pathivukal said...

அன்புத் தோழர் காஸ்யபன்

உங்களது தொடர் பயணம், தேடித் தேடி மனிதர்களை சந்திப்பது, அவர்களது இன்ப துன்பங்களைத் தமதாகக் கருதிக் கலப்பது, முன் பின் அறியாதோர் வாதனையைத் தீர்க்க வாய்ப்பு இருக்குமா என்று துடிப்பது...இன்ன பிற அம்சங்கள் தான் உங்களை வசீகரமாக்குகிறது என்று கருதுகிறேன்..

உங்களைவிடவும் அதிக ஆர்வத்தோடு உங்களுக்கு சமதையான வேகத்தோடு எங்கும் பயணம் செய்யும் உங்களது துணைவி உங்களது தேடலை எளிதாக்குகிறார். அல்லது இன்னமும் அதிகமாகத் தேடத் தூண்டுகிறார்.

நிற்க,
தசை சிதைவு நோய் குறித்த உங்களது இந்த இடுகை மிகச் சிறந்த சொற்களால் நெய்யப்பட்டிருந்தது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் மொழி அதில் தெறித்தது. வாழ்த்துக்கள்.

உடனே, சேலம் சகோதரிகள் வானவன்மாதேவி, இயலிசை வல்லபி இருவரோடும் பேசினேன். தசை சிதைவு நோய் தாக்கியபோதும், அசராது சமூகப் பணியோடு, இடையறாத நூல் வாசிப்பிலும் தேர்ச்சி பெற்றுத் திகழும் அந்தப் பெண்களை எப்போதும் கண்மணிகள் என்றே அழைப்பேன்...சில உதவிகள், புத்தகங்கள் கொடுததும் வருகிறேன்..

அவர்கள் சொன்னது: தசை சிதைவு நோய் பாதிப்புறும் குழந்தைகள் தொடர்ந்து பிசியோதெரபி செய்துவந்தாலே ஆயுளை நீட்டித்துக் கொள்ள இயலும். பதின்மூன்று வயது தொடங்கி அடுத்த நான்கைந்து ஆண்டுகள் மிகவும் சிரமமானவை.. சேலத்தில் தங்களது ஆதவ் அறக்கட்டளை மூலம் சிலருக்கு அத்தகைய உதவிகள், பயிற்சிகள் இலவசமாகக் கொடுத்து வருகின்றனர். அங்கேயே தங்கி சிகிச்சை எடுக்கும் அளவு யாரும் இன்னமும் வரவில்லை. என்றார்கள்.
நீங்கள் பதிவு செய்திருக்கும் மருத்துவமனை குறித்து அவர்கள் அறிந்திருக்கின்றனர், நான் எதிர்பார்த்தது போலவே...

மீண்டும் அன்பு கெழுமிய வாழ்த்துக்கள்.
அகான் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள். மேற்படி எச்சரிக்கை அவர்கள் கைக்கொண்டு அந்தக் குழந்தை நீண்ட ஆயுளுடன் நிலவ எனது நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.

எஸ் வி வேணுகோபாலன்

kashyapan said...

தோழரே! மார்க்சை எற்றுக்கொண்டவன் நான். மனிதநேயத்தின் உச்சபட்ச வளர்ச்சிதான் மார்க்சிசம் என்று உளமாற நம்புபவன்.மனிதன் என்ற தகுதியே மனித நேயத்தால் தான் வருகிறது.---காஸ்யபன்.

இராஜராஜேஸ்வரி said...

தசை சிதைவு நோய் குறித்த மனித நேயமிக்க தமபதிகளின் தேடுதல் பகிர்வுகளை பயனுள்ள வகையில் அளித்தமைக்கு பாராட்டுக்கள்.. நன்றிகள்..

சிவகுமாரன் said...

||வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் மொழி அதில் தெறித்தது///

|||மார்க்சை எற்றுக்கொண்டவன் நான். மனிதநேயத்தின் உச்சபட்ச வளர்ச்சிதான் மார்க்சிசம்////

ஆன்மிகம், மார்க்சிசம் - இரண்டின் உச்சக்கட்டமும் மனிதநேயம் தான்.
பல கொழுத்த ஆன்மீக வாதிகளுக்கும் சில பழுத்த மார்க்சிய வாதிகளுக்கும் இது ஏனோ புரிவதில்லை.

kashyapan said...

சிவகுமரன் அவர்களே! கொழுத்த ஆன்மீகம் தமிழகத்தில் "பிள்ளை "- முதலி சண்டையாக மாறியுள்ளது. சகமனிதன் பசியால் துண்புறும் போது ஒருகவளம் சோறுஅளிப்பவனை தர்மவான் என்று பொற்றுகிறோம்.அது மனிதனாய் பிறந்தவன் செய்யவேண்டிய ஒன்று.அதற்கே பாராட்டும் மனநீலை வந்து விட்டது.அமெரிக்காவிலும் லஞ்சம் உண்டு அங்கு சட்டத்தை மீறி காரியம் செய்ய லஞ்சம். இங்கே சட்டப்படி செய்யவே லஞ்சம். இதில் கோழுத்த ,பழுத்த எல்லாம் வெறும் வார்த்தையாகிவிட்டது.ஆன்மீகத்தின் உயர்ந்தநிலைக்கும்,மார்க்சீயத்தின் உன்னத் நீலக்கும் முரண்பாடு இல்லை. விவெகானந்தரை ஏற்காமல் இருக்க முடியுமா? ராமகிருஷ்ணரை ஏற்காமல் இருக்க முடியுமா? அதற்காக ராமகிருஷ்ண மடத்தையோ,விவாகானந்த கெந்திரத்தயோ எற்கவேண்டும் என்பதில்லயே! சங்கரரின் உபநிஷ்தை எற்கலாம்.சங்கர மடத்தை எற்க முடியவில்லை!---காஸ்யபன்

சிவகுமாரன் said...

மிகச்சரியாக சொன்னீர்கள் அய்யா. நான் மடங்களையும், மடாதிபதிகளையும் ஆதரிப்பதில்லை.
வள்ளலார்,விவேகானந்தர்,போன்றோருக்குப் பிறகு மனிதநேயமிக்க ஆன்மீகவாதிகள் அரிதாகி விட்டனர்.

சிவகுமாரன் said...

மிகச்சரியாக சொன்னீர்கள் அய்யா. நான் மடங்களையும், மடாதிபதிகளையும் ஆதரிப்பதில்லை.
வள்ளலார்,விவேகானந்தர்,போன்றோருக்குப் பிறகு மனிதநேயமிக்க ஆன்மீகவாதிகள் அரிதாகி விட்டனர்.