Monday, July 30, 2012

ji naakaraajan

ஜி.நாகராஜனின் குட்டிக் கதை;....... (நினைவிலிருந்து எழுதுகிறேன்)           அந்த ஊரின் மடத்தின் முன்னால் ஜனங்கள் கூடி இருக்கிறார்கள்.அவர்கள் முகம் சோகமாயிருக்கிறது . ஒருவருக்கொருவர் "குசு குசு" வென்று பேசிக் கொள்கிறார்கள்  "சுவாமிகள் சமாதியாகி விட்டார் ' என்று பெரியவர்கள் பேசிக்கொள்கின்றனர். மடத்தின் முன்னால் பந்தல் போடப்பட்டிருக்கிறது . எல்லாரும்உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் எதுவும்புரியாமல் குறுக்கும் நெடுக்குமாக ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் ஒருவருக்கொருவர் "சுவாமிகள்சமாதியாகிவிட்டார் " என்று ரகசியக் குரலில் அவர்களும் பேசிக் கொள்கிறார்கள்சாமியாரை வெளியே கொண்டு வந்தார்கள். அதைப் பார்த்தசிறுவன் ஒருவன் "டேய்! சாமியார் செத்துப் போய்டார் டா! என்று கத் தினான் சின்னப் பயலுகள் "ஏய் ! சாமியார் செத்துப் போயிட்டார் டா !" என்று கூச்சலிட்டார்கள். பெரியவர்கள்அவர்களைவிரட்டி,விரட்டிஒட்டினர்                                (ஜி .நகராஜன் மறைந்விட்டார். மதுரைடவுன் ஹால் ரோடில்பிடிக்கு           அடங்காத  மீசையும் வெள்ளை ,வேட்டி,ஜிப்பாவில்கம்பிரமாக நட்ந்துசென்ற நாகராஜனோடு பேசிப் பழகி இருக்கிறேன்.அழுக்கு சட்டையும்,நாலுமுழ் வேட்டியுமாக உருக்குலைந்து எல்.ஐ.சி ஆபிஸ் கவுண்டரில் வந்து  கூட்டத்தின்  மத்தியில் வந்து " டேய் ! ஐஞ்சு ரூ கொடுடா! " என்றுகேட்டதையும் அனுபவித்திருக்கிறேன்! மறக்கமுடியாத ,மறக்கக் கூடாத .இலக்கியகர்த்தா ஜி.நாகராஜன்)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய அனுபவம்...
பகிர்ந்தமைக்கு நன்றி சார் !

www.eraaedwin.com said...

உபயோகமான பதிவு தோழர். மிக்க நன்றி