Friday, August 03, 2012

அவர்களின் ஆட்டம் முடிந்தது ..............!


                  நடிகர் அனுபம் கேர் உட்பட பத்து பதினைந்து பேர் கடிதம எழுதினார்கள் ."ஆளும் கட்சி கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள்
ஒத்துழைக்கவில்லை.மக்கள்  ஆதரவு இல்லை " நாங்கள் சாகும்வரை
உண்ணாவிரதம் என்பதை முடித்துக்கொள்கிறோம்" என்று  அன்னஹசாரே  
அணி அறிவித்து விட்டது.அரசியல் ரீதியாக தேர்தல்  முலம்  போராட்ம
தொடரும் என்று அறிவித்து விட்டார்கள்  .

                           இது இப்படித்தான்  முடியும் என்று சென்ற ஆண்டு இடுகையிட்டபோது   
பதிவர்கள் பலர் கோபப்பட்டனர்

90 களின் ஆரம்பத்தில்புதிய சீர்திருத்தம் வந்தபோதே  மடைதிறந்து  விட்டார்கள்.லஞ்சம் கொடுப்பதை சட்டபுர்வமாக்கி விட்டார்கள்  .கம்பெனி  விசயங்களை , தேவைகளை  அரசோடு பேசி முடிவு
செய்யl லோபியிங் என்பார்கள் அதற்கான சிலவை  கம்பெநி கணக்கில்
சேர்க்க அனுமதித்து விட்டார்கள்   .லஞ்சம் சட்டபுர்வமாக  ஆக்கப்பட்டுவிட்டது .

ஒடிசாவிலும் ,ஜார்கண்டிலும் வன்குடி மக்களின் நிலத்தைப் பிடுங்கி    
பகாசுர நிறுவனகளுக்கு குறைந்த கிரயத்திற்கு கொடுத்துள்ளார்கள்  
இதில்  கை மாறிய தொகை   கோடிகளாகும்  .நான்கு  நாள்  உண்ணாவிரதம் சென்ற  ஆண்டு நடத்தினார்கள்.80 லட்சம்   சிலவு. பகாசுரக்கம்பெனிகள் 
 கொடுத்துள்ளன  . கொடுத்தவனும்  வாங்கினவனும் ஒப்புக்கொண்ட தாகும் இது  .

அலைக்கற்றை சிக்கலில்  மாட்டிக் கொண்ட அரசியல் தலைவர்கள் தவிர    பகாசுர   கம்பெனிகளின் பெரிய அதிகாரிகள் கம்பி எண்ணுகிறார்களே !எதற்காக!

புது டெல்லியில் தேசப்பிதா காந்தி  அடிகள் இறந்தபோது  இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 7லட்சம் பேர். குருசேவும்  ,புல்கானினும்   வந்த பொதுlகல்கத்தாவில் பத்து லட்சம்  .இடது
  முன்னணி முதன் முறையாக ஆட்சி அமைத்த பொது வந்த
மக்கள் 13 லட்சம் இது தான் ஆவணம் பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும்.ராம்லிலா மைதானத்தின் கொள்ளளவு இருபதினாயிரம்   .
தொலைக்காட்சிகள் பத்து லட்சம் என்று புளுகின .அச்சு இதழ்கள்
ஆமாம்  என்றன. 

இப்போது அதே பத்திரிகைகள் ஆராயிரம்பேர் தான்  என்கிறது  .அண்ணாவின் ஆதரவாளர்களுக்கும்  பத்திரிகையுஆளர்களுக்கும்
இதனால்மோதல் ஏற்பட்டது.ஹசாரே அதற்காக மன்னிப்பு கேட்டுக்
கொண்டார்

மராட்டிய மாநிலத்தில்  ரெலேகான்  பகுதியில் வசித்து வருகிறார்  ஹசாரே
கடந்த 24 ஆண்டுகளாக அங்கு தேர்தலே நடக்கவில்லை!

லஞ்சம் கொடுத்தவர்களுக்கவும் வாங்கினவர்களுக்காகவும் 
நடந்த நாடகம் முடிந்தது !

11 comments:

சிவகுமாரன் said...

யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக முடித்துள்ளீர்கள் சார்... (உண்மை)

kashyapan said...

சிவகுமரன் அவர்களே! யாரை நம்பவேண்டும் என்று உங்களுக்கும்,ஹசாரேக்கும் தெரியும்!.உங்களூக்கு தயக்கம்! ஹசாரேக்கு விருப்பமில்லை! அந்தத்தெரிந்தவர்கள், இந்த நாட்டு மக்களை நீங்கள் உட்பட நம்பி செயல்படத்தான் செய்கிறார்கள்! காலம் கனியும்! காத்திருப்போம் !---காஸ்யபன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஒவ்வொரு நூற்றாண்டும் பல சவால்களை நம் நாட்டின் முன் வைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றபடியேதான் நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஒரு தனிமனிதனின் வாழ்வில் அவன் மரணத்துக்கு முன்னால் எத்தனை சரிவுகள்? சவால்கள்? எத்தனை போராட்டங்கள் எனும் போது யுகயுகங்களாய் நீளும் ஒரு தேசத்தின் வாழ்வென்பது எத்தனை ப்ரும்மாண்டமான போராட்டமாய் இருக்கக் கூடும்?

நாம் ஒவ்வொருவரும் நம்மளவில் கைகளுக்கும் மனதுக்குள்ளும் பொத்தி வைத்துக் காத்துநிற்கும் சிறு பொறிதான் சரியான நேரத்தில் ஒரு ஊழித் தீயாய் விஸ்வரூபமெடுத்து அழிக்க வேண்டியவற்றை அழித்தும் காக்க வேண்டியவற்றைக் காத்தும் நிற்கும்.

பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே.

நல்ல வழியிலேயே செல்லும் சாதுக்களை நன்கு பாதுகாக்கவும், பாப கார்யங்களைச் செய்வோர்களை அழிப்பதற்கும் யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன் எனும் கண்ணனின் சங்கொலி கேட்க இருக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை காஸ்யபன்ஜி.

அந்த சேனையின் அணிலாய் நாமிருப்போம்;
நம் பிள்ளைகள் அல்லாது போனாலும்
பேரப்பிள்ளைகள் இருப்பார்கள்.

உப்பைத் தின்றவர்கள் நீர் பருகும் வேளை விரைவில் வரும்

அப்பாதுரை said...

ஏமாறுகிறோமே என்று ஏமாளிகள் பொருமுவதிலும் அங்கலாய்ப்பதிலும் பயனுண்டா?

kashyapan said...

அப்பதுரை அவர்களே! நலமாக ஊர் போய்ச்சேர்ந்தீர்களா? தகவலுக்காக காத்திருந்தேன்.! பின்னூட்டம் உங்கள் ஊரிலிருந்துதான் இட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்! வாழ்த்துக்கள்! ---காஸ்யபன்

சிவகுமாரன் said...

என் சித்தப்பா சுந்தரபாரதி கம்யூனிச மேடைகளில் இப்படிப் பாடுவார்
" எங்க கடையில வியாபாரம் சரியில்ல- நாங்க
கடையை தெறக்காம இருப்பதில்லை - நீங்க
எல்லா கடையிலும் ஏறி எறங்கிப்புட்டு
எங்கக்கிட்ட வாராம வழியுமில்லை "

அப்பாதுரை said...

அட்டகாசம் சிவகுமாரன். ஏற்கத் தயங்கினாலும் :)

அப்பாதுரை said...

அன்னாவை கொண்டாடியவர்கள் இப்போது என்ன நினைக்கிறார்கள்? ஏமாற்றப்பட்டதாக எண்ணுகிறார்களா?

nerkuppai thumbi said...

இதற்கு முந்தைய (அன்னா ஹஜாரே இயக்கம், செயல்கள் பற்றிய) சில பதிவுகளை படிக்காதிருக்கலாம்.

அரசு இயந்திரத்திற்கு லஞ்சம் வாங்கும் பழக்கம் பண்டு தொட்டே, சுதந்திரம் என்று பேசப்போனால் அறுபது ஆண்டுகளாக இருந்து வருவது தான். அது காலப் போக்கில் அளவிலும், வீச்சிலும், முறைகளிலும், உருவத்திலும், பெரியதாகி இப்போது லஞ்சம் கொடுக்காமல் பணி நடப்பது exception என்று ஆகி விட்டது. இதில் அதிகாரிகளே குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். (அதாவது அரசியல் வாதிகளின் பங்கு குறைவு).
பொது மக்களுக்கும் இதற்கு மேல் தாங்கமுடியாது; எதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருப்பது கண்கூடு. ஆனால், இந்த உணர்வுக்கு வடிகால் இல்லை; அன்னா ஓலம் இடத்தொடங்கியது அந்த உணர்வுகளுக்கு ஒரு ஆக்க பூர்வ வடிவம், செயல் வழி ஏற்படுத்தித் தரும் என்று கனாக் கண்டார்கள். ஆனால் அண்ணாவை ஒரேயடியாக லஞ்சம் கொடுத்தவர்களுக்கவும் வாங்கினவர்களுக்காகவும்
நடந்த நாடகம் முடிந்தது ! என்று தூக்கி கடாசுவது சரி இல்லை.

kashyapan said...

நெற்குப்பை தும்பி அவர்களே! ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உங்களார்வத்தை மதிக்கிறென். சென்ற ஆண்டு அன்னா நான்கு நாட்கள் உண்ணவிரதமிருந்தார். அதற்கு ஆன செலவு 50 லட்சம் வசூல் 80 லட்சம்.மிட்டல் என்ற முதலாளி (கனிமம்) 30 லட்சம் கொடுத்துள்ளார்.வசூல் போக மிச்சம் உள்ள பனத்தை கேசர் வால் கணக்கில் போட்டுளார்கள். அது எப்படி பொடலாம் என்று சண்டை. இது சாம்பிள் தான்...காஸ்யபன்.