Wednesday, August 08, 2012

கலாச்சார  காவலர்கள்..............!


கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரபடை  தனது பணியை  ஆரம்பித்து  விட்டது !  இவர்களது அமைச்சரும் எம.எல் .எ  நண்பர்களும் சட்டமன்றம் நடந்த   கொண்டிருக்கும்   போது "கெட்டவார்த்தை படம்" பார்த்தவர்கள்!  மங்களூர்
பக்கத்தில்    பிறந்தநாள் விருந்தின்   பொது  தனி நபர்  விட்டிற்குள்  புகுந்து   பெண்களை அடித்து விரட்டியிருக்கிறார்கள் !t

இப்போது புதிதாக கல்லுரி மாணவிகள்  நெற்றியில்  போட்டு  வைத்துக்   கொள்ள   வேண்டுமாம்!கிறிஸ்தவர்கள்  இஸ்லாமியர்கள் போட்டு  வைக்க மாட்டார்கள். iஇந்துயார் கிரிததுவர்  யார  ,முகம்மதிய    யார் என்று அடையாளம் தெரிந்துகொள்ள  சவுகரியமாக இருக்கும்!சண்டாளர்கள்
எப்படி  யோசிக்கிறார்கள் ஐயா!

ராஞ்சி நகரத்துல  பெண்கள் "ஜீன்ஸ் " போடக்குடாதாம் ! போட்டா? ஆசிட்ட உத்துவாங்கலாம்! அரசு என்ற அமைப்பு இருக்கா ? 

ஒரு சம்பவம்  நினைவு தட்டுகிறது! காஞ்சிபுரம் சாமிகள்  விதவைகளைப் ப்பார்க்க மாட்டார்கள் ! அவர்கள் தலையை முண்டனம் செய்தால் பார்ப்பார்கள்           
அதற்கு விதி விலக்கு   உண்டு.திர்தக்கரையில் பார்க்கலாம் .காஞ்சி மகாசுவாமிகள் 
இந்திரா அம்மையாரை  சந்திக்க ஏற்பாடாகியிருந்தது .பிரதமரை எந்தக்கரைக்கு  வரச்சொlல்லமுடியும்.மடத்திலுள்ள  கிணற்றின்  ஒரு பக்கம் பிரதமரும் மறுபக்கம் சுவாமிகளும் அமர்ந்து சந்தித்தனர்!

சட்டம்மட்டுமல்ல !    சாத்திரங்களும்  வளையும் !! 4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அநியாயம் ஐயா !

ஹரிஹரன் said...

gg

ஹரிஹரன் said...

தோழரே, வணக்கம் நலமாக உள்ளீர்களா?
நான் விடுமுறையில் இந்தியா (கோவை) வந்தேன். அந்த நாள் என்னுடைய நண்பன் வீட்டிற்கு வந்தான் என்பதற்காக மதியம் சிக்கன் செய்யலாம் என்று கடைத்தெருவிற்குச் சென்றேன். ஒரு கடையில் சிக்கன் ஸ்டாக் இல்லை, இன்னும் சில கடைகள் திறக்கப்படவில்லை. சரி வேற கடைக்கு முயற்சி செய்யலாம் என முயன்றபோது ஒரு கடையின் முன் சிலர் பைக்கில் நின்றார்கள். அவர்கள் பைக்கில் இந்துத்துவா வின் அடையாளம் அவர்கள் `நிறத்தில்` ஒட்டப்பட்டிருந்தது. ஏன் கடையைத்திறந்தாய், இன்று கோகுலஷ்டமி யாயிற்றே என்று அவரை கேள்விகேட்டு கடையை மூடச்சோன்னார்கள். இந்த சம்பவத்தை சில அடிதூரத்தில் பார்த்தேன்.பின்னர் கடைக்காரரை நெருங்கி ஒரு முழுக்கோழியைக் கொடுங்கள் என்றேன். அந்த குரூப் என்னை வெறித்தது `அடையாளத்தை` தேடி. நான் சிக்கன் வெட்டும் காட்சியில் கவனம் ச்லுத்தினேன். இடத்தை காலி செய்த்தது அந்த கும்பல். பின்னர் தான் மற்ற கடைகள் மூடிய விஷ்யமும் எனக்குப் புரிந்தது. கோவை கலாச்சாரக் காவலர்கள் மற்றொரு parrelal நிர்வாகத்தை நடத்த முயற்சிக்கிறர்கள்.

ஹரிஹரன் said...
This comment has been removed by the author.