எங்கே அவர்கள் ..........?
குஜராத் மாநிலத்தின் கடலோர கிராமம். முஸ்லிம் மீனவர்கள் வசிக்கிறார்கள்.உப்பு சத்தியாக்கிரகத்தின் பொது காந்தியின் வருகை அவர்களிடையே மின்சாரத்தைப் பாய்ச்சியது.கிராமத்திலிருந்து ரிஸ்வான் அடிக்கடி பக்கத்து நகரத்துக்கு சென்று வருவான்.அவன் மூலம் சுதந்திரக்காரர்கள் பற்றிய செய்தியை அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
நகரத்தில் பாபுலால் தான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு. தலைவர்களிட மிருந்து வரும் தகவல்களை சுற்றறிக்கை முலம் மற்றவர்களுக்கு சொல் வது அவருடைய பொறுப்பு. சுற்றரிக்கைகளை நகலெடுக்க அவரிடம் சிறிய மெஷின் இருந்தது. போலிசாரின் கண்களில் மண்ணைததூவி பணியாற்றிவந்தார். ஆனாலும் போலிஸ் மோப்பம் பிடித்துவிட்டது.தப்பி லால கிராமங்களில் சுற்றிவந்தார்.ரிஸ்வான் விட்டில் பதிங்கியிருந்தார். போலிஸ் மோப்பம் பிடித்து விட்டது.லால் தப்பி ஓடிவிட்டார்.
ரிஸ்வானின் எட்டு வயது மகள் படுசுட்டி. ரிஸ்வானின் மனைவி தைரிய சாலி . போலிஸ் விசாரித்தால் சமாளித்து விடுவாள். உயிரே போனாலும் ரிஸ்வான் சொல்ல மாட்டான் .
சின்னஞ்சிறு மகள் போலிசின் விசாரணையை தாக்குப்பிடிபாளா? போலீசார் வீடு வீடாக விசாரித்துக்கொண்டு வருகிறார்கள். வீட்டில் இருந்த பெரியா மரப்பெட்டிக்குள் மகளை வைத்து முடி அதன் மீது சாமான்களை வைத்து மூடிவிட்டார்கள் . போலிஸ் விசாரணை சமாளித்தத விதம் பற்றி அந்த முஸ்லீம் தம்பதியினர் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டே பெட்டியத்திறந்து "ஆயிஷா,ஆயிஷா " என்று கூப்பிட்டனர் . . தூங்கும் குழந்தையை ரிஸ்வான் தூ க்கினான். உயிரற்ற சடலமாக "ஆய்ஷா " வந்தாள் .
முப்பது வருடத்திற்கு முன்னால் த.மு எ. ச நடத்திய திருப்பரம்குன்ற நாடகப் பட்டறையில் இந்தக்கதையை சொன்னேன் .நான் பொறுப்பேற்றுக்கொண்ட குழு இதனை ஏற்றுக்கொண்டது
ராமமூர்த்தி என்ற தோழார் இதனைட நாடகமாக எழுதி இயக்கினார். ரிச்வானாக மாணிக்கம் என்ற தோழரும் ,லால் பாத்திரத்தில் கோவிந்தராஜன் என்ற தோழரும் நடித்தார்கள்.
ராமமுர்த்திதான் இன்றைய வேல ராமமுர்த்தி என்ற சிறந்த சிறுகதை ஆசிரியர்.
பேராசிரியர் பழனி சோ.மாணிக்கம் தான் அன்றைய மாணிக்கம். அருப்புக்கொடையில் வாலிபர் சங்க பிருமுகராக இருக்கும் கோவிந்தராஜன் லால் பாத்திரத்தில் நடித்தார்.
தனியார் தொலைக்காட்சி வராத தூர்தர்ஷன் காலத்தில் நடிகர் மனோஜ் குமார் "எங்கே அவர்கள் என்று?" சுதந்திரப்போராட்ட வீரர்கள் பற்றி ஒரு தொடர் ஒளிபரப்பினார். அதனை தொடர்ந்து பார்ப்பேன். அதில் வந்த ஒரு "எபிசோடு " தான் இந்தக் கதை .
2 comments:
பகிர்வுக்கு ரொம்ப நன்றி ஐயா...
உங்கள் நினைவுகளில் பதிந்து கிடக்கும் அத்தனையும் பொக்கிசங்கள்! இளம் தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அத்தனையும் உரங்கள்!...இக்பால்
Post a Comment