Wednesday, November 14, 2012

"முஹர்ரம்" பண்டிகையும் "ஹோலி" கொண்டாட்டமும்..........!!!

 

முஹர்ரம் பண்டிகை இஸ்லாமியர்களின் துக்க நாட களிலோன்று. தியாகத்தின் முலம் மக்களின் நன்மையை விழையும் பெரியவர்களின் இழப்பை  நினைந்து போற்றும் தினமாகும்  .

ஹோலி பண்ண்டிகயோ கொண்டாட்டமும் குதூகலமும் கொண்டு ஆடிப்பாடிகளிக்கும் நாளாகும்.

முகம்மதியர் ஆட்சிக்காலத்தில் "அவத் " என்ற பகுதியை நவாப்  வஜாஹித் அலி  அவர்கள் ஆண்டுவந்தார்கள். இன்றைய லக்னோ ,கான்பூர் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும் அது. கலை,இலக்கியம், இசை,நாட்டியம் ஆகியவை செழித்து வளர்ந்த இடம். இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து இந்தியாவிற்கான புதிய கலாச்சார அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருந்த பூமி அது.,அற்புதமான உருது கவிஞர்கள் தங்கள் படைப்புகளை  கொட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
( ஆரம்ப காலத்தில்முன்ஷி பிரேம் சந்த் தன்னுடைய கதைகளை உருது மொழியில் தான் எழுதினார்.)


இஸ்லாமியர்கள் வானத்து சந்திரனின் பயணத்தை ஒட்டி தங்களுடைய நாட்களை கணித்துக் கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட வருடம் முஹர்ரம் பண்டிகையும் ,ஹோலி பண்டிகையும் ஒரே நாளில் வந்தது.

நவாப் வஜாஹித் அலி அவர்கள் முஹர்ரம் பண்டிகையை வழக்கமான
தொழுகையோடு
நடத்தினார்கள்    அரண்மனையை விட்டு வெளியில் வந்த நவாப ஹோலிகொண்டட்டம் எதுவும் இல்லாதது கண்டு விசாரித்தார்கள்..
"முகர்ரம் என்பது இஸ்லாமிய அன்பர்களின் துக்க தினம்.அன்று நாம் கொண்டாட்டமும்,குதூகலமும்,விருந்தும் கேளிக்கையுமாக இருப்பது சரி யில்லை .அதனால் இந்த ஒருவருடம் நாம் ஹோலி கொண்டாட வேண்டாம் "என்று பெரியவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று அதிகாரிகள் கூறினர் .நவாப அவர்கள் கண்கள் கசிந்தன. " எனது அரூமை இந்து நண்பர்களின் பெருந்தன்மை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இஸ்லாமிய நண்பர்களே வாருங்கள் நாம் ஓவ்வொரு இந்துவின் விட்டிற்கும் போய் அவர்களோடு இணைந்து" ஹோலி ".பண்டிகையைகொண்டாடுவோம்" என்று கூறினார்.

அன்றிலிருந்து "அவத் நாட்டில் " இஸ்லாமியர்களும் ஹோலிபண்டிகையை
கொண்டாட ஆரம்பித்தார்கள்.

பி.கு ( இந்த செய்திக்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம். " ஹிம்ச
விரோத சங்கம் என்ற அமைப்பிற்கும் இஸ்லாமிய அமைப்பிற்கும் இடையே நடந்த ஒரு வழக்கில் உச்ச நிதிமன்ற நிதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் அளித்த தீர்ப்பில் இதனை குறிப்பிட்டிருக்கிறார்.(2008) )

ட்டிருக்கிறார்.

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

நல்ல தகவல்! நன்றி!

Matangi Mawley said...

Beautiful anecdote! Kudos to Justice Katju for citing this illustration... And kudos to you, sir- for bringing it to us...

hariharan said...

மதநல்லிணக்கம் காலத்தின் தேவை சாதாரணமக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள், அதைத் தடுப்பது அடிப்படைவாதிகள் அவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அறிய தகவல்களை கொடுத்திருக்கிறார். மீடியாவைப் பற்றியும் அவருக்கு நல்ல அக்கறை இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் ஐயா... நல்லதொரு தகவல்....

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

மோகன்ஜி said...

மனதை நெகிழ்த்தும் சம்பவம். ஹரிஹரன் சொல்வது சிந்திக்கத் தக்கது.

அப்பாதுரை said...

படிக்கவே நிறைவாக இருக்கிறது.. இதையெல்லாம் ஏன் பாடப்புத்தகங்களில் பாடமாக வைக்கவில்லை?