Thursday, December 06, 2012

 திரைப்பட விமரிசனம் :

"டாக்டர் B .R. அம்பேத்கர் "

( ஊமைகளின் நாயகன்)


டிசம்பர் 6ம்  தேதி  காவல் துறை,ராணுவம் ,துணை ராணுவம்  பாதுகாப்புப் பணியில் இருக்க, டிசம்பர்மாதத்து மென்குளிரில் கம்பளிஆடைகளப் போர்த்திகொண்டு "பொதிகை " ஒளிபரப்பிய டாக்டர் அம்பேத்கர் (தமிழ் ) திரை படத்தை பார்த்தேன்.

1998ம ஆண்டே தணிக்கை முடிந்தாலும் 2000 ஆண்டுதான் படம் திரைக்கு .
வந்தது .காரணம்,அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.தமிழில் வந்தபோது அதனை வெளியிட தமிழ் நாட்டு தேசபக்தர்கள்  மறுத்து விட்டார்கள். தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர்கள் கலஞர் சங்கம் முன்கைஎடுத்து இயக்குனர் லெனின் அவர்களின் உதவியோடு தமிழகத்தில்  சில  நகரங்களில்  திரையிட்டார்கள். இன்று  தமிழ்  கூறும்  நல்லுலகம  இந்த அற்புதமான  படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றார்கள்.

தன்னந்தனியாக ஒரு மனிதன் தன சகமனிதர்களின் இழிவைப் போக்க
என்ன செய்யவேண்டுமோ அதனைச்செய்த மாமனிதரின் காவிய படைப்பு .

அண்ணல் சிகாகோவில் படிப்பதில் ஆரம்பிக்கிறது படம்.சாலையின்
 மறுபக்கம் நிக்ரோக்கள். மற்றோரு பக்கம் வெள்ளையர்கள் .  வெள்ளை பேராசிரியர்கள் கறுப்பர்களின் இழிநிலை போக்க குரலெழுப்புவது 
    இளம் அம்பேத்கரை   உசுப்புகிறது..லண்டன் செல்கிறார் படிப்பு முடிந்து
இந்தியா வந்து சமஸ்தானத்தில்வேலைக்கு சேருகிறார். தங்க இடம் கிடக்கவில்லை. அரசராலும் உதவ முடியவில்லை  .பார்சி சத்திரத்தில்  தங்குகிறார். அவர் பார்சி அல்ல என்று தெரிந்த விடுதி காப்பாளன் அவருக்கு தொழுவம் போன்ற இடத்தில் தங்க வைக்கிறான் வெளிநாடு சென்று படித்த இளைஞன் பிறப்பினால் இழிவு படுத்தப்படும் காட்சி பார்வையாளனை கலங்க வைக்கிறது.

கல்லுரியில்பெராசிரியராக இருக்கிறார்.தொண் டைகிழிய வகுப்பு எடுத்துவிட்டு ஆசிரியர் அறையில் நீர்  அருந்த போகும் பொது சக பேராசிரியர் தடுக்கிறார்."நி விட்டிலிருந்து தண் ணிர்   கொண்டுவந்து குடி என்கிறார். இது தீட்டகிவிடும் என்கிறார்.தீட்டு போக மந்திரம் உண்டே ! நான் சொல்லட்டுமா என்று அம்பேத்கர் கூறி மந்திரத்தை சொல்கிறார் .
(நான்  கைதட்டிவிட்டேன்.அருகிலிருந்த மனைவி புன்சிரிப்போடு ஆமோதித்தார்)

ஆடும்மாடும் குடிக்கும் குளத்தில் அந்த மக்கள் குடிக்கக்கூடாது என்கிறார்கள். போராட்டம்நடத்த முடிவாகிறது அவரோடு அணியிலுள்ள சித்தாலே ,சகஸ்ர புத்தே கெய்க்வாட்  போன்றவர்களின்  உதவியையும் பெற்றுக் கொள்கிறார். போராட்டத்தின் ஒரு பகுதியாக "மனுஸ்மிருதியை ",
 எரிக்கிறார்கள். சித்தாலே "ஆகுதி"  மந்திரத்தை சொல்லி நெருப்பில் ஏடுகளை போடுகிறார்.(கை தட்டினேன். புன்னகையும் கிடைத்தது)

முதல் வட்டமேசை மாநாட்டில்  காங்கிரஸ் கலந்து கொல்லவில்லை . அம்பேத்கரும் ராவ் பகதூர் சீனிவாசனும் கலந்து கொள்கிறார்கள். இரண்டாவது  மாநாட்டில் காந்தியும் கலந்து கொள்கிறார்.

இடைக்கால அரசு ,அரசியல் நினைய சபை,அரசியல் சட்ட முன்வரைவு ,இந்து 
சீர்திருத்த சட்டம்,என்று அரசியல் நிகழ்வுகள் அவருடைய கடுமையான
உழைப்பை  கோருகின்றன. பிறந்தது  இந்துவாக  .நான்    போகும்போது  இந்துவாகபோகமாட்டேன்  என்கிறார். மௌல்விகள்,பாதிரியார்கள், சாமியார்கள்,இந்து மகா சபா தலைவர்கள், சீக்கிய குருமார்கள் அவரை தங்கள் மதத்தில் சேர மொய்க்கிறார்கள். யாருமே தாழ்த்தப்பட்டவனின் உரிமை பற்றி பேச மறுக்கிறார்கள். இறுதியில் புத்தமதத்தில் சேருகிறார்.


அம்பேத்கராக மமுட்டி வாழ்ந்திருக்கிறார். அவரூ க்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. வட்டமேசைமாநாட்டில்,சட்டசபையில், காந்தியோடு என்று அவர் பேச்சும் குரலும் அதன் கம்பிரமும் மனத்தில் ரிங்கரித்துக்  கொண்டே
இருக்கிறது.

முதல் மனைவி ரமாபாயாக சொனால் குல்கர்னி,சவிதா பாயாக மிருனாள் குல்கர்னி அருமையாக செய்துள்ளனர். மறைந்த மோகன் கோகலே காந்தியாக வாழ்ந்திருக்கிறார்.

"நான் கபிர் சொல்கிறேன்! இது குருடர்களின் உலகம்"என்ற பாடல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஐந்து பாடல்களும் அருமை. இசை அமைத்த அமர் ஹல்திகர் சிறப்பாக செய்துள்ளார்.

..கலை இயக்குனர் புகழ் பெற்ற நிதின் தேசாய் . தேசிய விருது இந்தப்படத்திக்காகவும் பெற்றுள்ளார். அசோக் மேத்தாவின் நேர்த்தியான படப்பிடிப்பு சிறப்பாக உள்ளது. சிறந்தபட விருதினையும் பெற்றுள்ளது.

அம்பேத்கர் ஒருபத்திரிகைய நடத்துகிறார் "அதன் பெயர் "மூக் நாயக் " .
ஊமைகளின் தலைவன் என்று அர்த்தம்.. 

அந்த ஊமைகளை பேச வைத்தவர் அண்ணல் அம்பேத்கர்!.  

அவர்களை உரக்கப் பேசவைப்பது நமது கடமை !!

4 comments:

venu's pathivukal said...

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் தோழர்...

உளப்பூர்வமான வாழ்த்துக்கள்
எஸ் வி வி

அப்பாதுரை said...

பார்க்க வேண்டும். டிவிடி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

காந்திக்கு இருந்த தைரியமும் திடமும் அம்பேத்கருக்கு இல்லை என்று படித்தேன். அதற்குக் காரணம் உங்கள் கட்டுரையைப் படித்ததும் புரிந்தது.

kashyapan said...

அப்பதுரை அவர்களே! you tube ல் ஆங்கிலத்தில்கிடைக்கிறது! பாருங்கள் !---காஸ்யபன்.

hariharan said...

you tube ல் முழுப்படமும் கிடைத்தது, நான் முன்பே பார்ஹ்த்டுவிட்டேன், மம்முட்டி கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அம்பேத்கர் வளர்ச்சிக்கு ஒரு மஹாராஜ உதவியாக இருந்திருக்கிறார்.