Thursday, December 20, 2012

செல்வராஜ் தோழா சாகித்ய அகதமி

தன்னை புதுப்பித்துக் கொண்டது !!!

"தேநீர்" செல்வராஜ் ,அதற்கு முன்பு "மலரும் சருகும்" செல்வராஜ், இன்று
"தோல் " செல்வராஜ் என்ன அற்புதமான பரிணாமம்!  தோழா தமிழகத்து முற்போக்கு இயக்கம் காத்திருந்த தருணம் இது!

சாகித்ய அகாதமி தன்னை புதுப்பித்துக் கொண்டது என்று தான் பதிவு
செய்ய வேண்டும்!

உன் கையைப் பிடித்துக் கொண்டு தோழர்  ஜீவா  அவர்கள்  உன்னை  "ஜனசக்தி"  பத்திரிக்கை அலுவலகத்தில் கொண்டு சேர்த்தாரே ! நினைவிருக்கிறதா !

கலை இலக்கிய பெருமன்றத்தை ஆரம்பிக்க காரைக்குடியில் நடந்த கூட்டம்
நினைவு தட்டுமே!

"மலரும் சருகும்" எழுதி தலித் இலக்கியத்தின் முன்னோடிதமிழனாச்சே நீ !

பாம்பனார் எஸ்டேட் சென்று அங்கு உன் "தேநீர்" பற்றி கருத்துரையாற்ற  சென்ற பொது அந்த பாடசாலை வாத்திமார் என்னைச் சுற்றி நின்று உன்னை
புகழ்ந்ததை கேட்டு சொக்கிப் போனவன் நான் !

சுதந்திர போராட்ட வீரர் வாழவிட்டான்- லட்சுமி  அம்மாள்  தம்பதியர்  இருவருமே சிறையில் இருந்தவர்கள்.    லட்சுமி அம்மாளுக்கு சிறையில் பெண் குழ்ந்தை பிறந்தது .அந்தக் குழந்தைக்கு "பாரத புத்திரி " என்று பெயர் வைத்தார்கள்!
தோழா!அந்த பாரதபுத்திரியை சாதி மறுப்புத்திருமனம் செய்து கொண்டவன் நீ ! 

 ஆரம்ப காலத்திலிருந்து தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வழி நடத்தினாய் !

" செம்மலரில்" நீ  எழுதிய மூலதனம் நாவல் பெரும் வரவேற்பை பெற்றது!

பார்க்கும் போதெல்லாம் பேகம்பூர் தோல் பதனிடும் தொழிலாளர்கள் பற்றி   பேசுவாய் !
 அவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த எ\.பாலசுப்பிரமணியம் , மதனகோபால்,, தங்கராஜ் ஆகிய கம்யுனிஸ்டுகளை காவிய நாயகர்களாக படைத்தாய்!

இந்திய இலக்கியத்தில் தோல் பதனிடும் தொழிலாளர்களை  ,அவர்களுக்காக ,அவர்களொடு இணைந்து போராட்டம் நடத்திய வரலாற்றை
காவியமாக்கிய  தோழனே !

உனக்கு இந்திய தொழிலாளி வர்க்கத்தின் வாழ்த்துக்கள் !!!
 \







     

5 comments:

hariharan said...

தொடர்ன்து இடதுசாரி எழுத்தாளர்கள் இலக்கிய உயரிய விருதான சாகித்ய அகாடமி பெற்றுவருகிறார்கள் என் பது மகிழ்ச்சியான செய்தி!

kashyapan said...

ஹரிஹரன் அவ ர்களே! சாகித்ய அகடமி விருதினை இடது சாரி எழுத்தாளர்கள் பெறுகின்றனர் ! மற்றவர்கள் விருதினை வாங்குகிறார்கள் என்றும் கூறலாம்.இந்த ஆண்டும் பாலகுமாரன்,வாசந்தி, என்று மோதியதாகக் கேள்வி! எது எப்படி இருந்தாலும் செல்வராஜுக்கு இது belated,but well deserving என்று தான் கூறவேன்டும்!" கம்யூனிஸ்ட் இயக்கம்,அதன் செயல்பாடு,அதன் தலவர்களின் பங்கு ஆகியவற்றை இலக்கியமாக்கியுள்ளார் ! இது மிக முக்கியமானது !" என்று மார்க்சிஸ்ட் கட்சி தலவர்G. ராமகிருஷ்ணன் பாராட்டிய பொது "தோழரே! நான் ஒரு கருவி ! அவ்வளவுதான் ! "என்று with all his humility சொல்லும் பக்குவம் யாருக்கு வரும்! அவருடைய "மலரும் சருகும் " காலத்தால் அழியாதது ! "தேநீர் " காலத்தை வென்று நிற்க்கிறது. " தோல் ' இந்திய நவீன இலக்கியத்தின் மைல் கல் ! கு.சி.பா, செந்தில் நாதன், செல்வராஜ் மூவரும் த.மு.எ.ச வுக்கு கிடைத்த மும்மணிகள்! அவர்களொடு இணைந்துபணியாற்ற வாய்ப்பு கிடத்தது என்னுடைய வாழ்க்கையின் பெருமிதம் என்று கருதுகிறேன்! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

hariharan said...

I heard his speech in radio interview
http://www.radiospathy.com/2012/12/blog-post_22.html?m=1

veligalukkuappaal said...

1)ஹரிஹரன்/தொடர்ந்து இடதுசாரி எழுத்தாளர்கள் இலக்கிய உயரிய விருதான சாகித்ய அகாடமி பெற்றுவருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி!/அது காலத்தின் கட்டாயம் அல்லவா! மக்களைப்பற்றிய எழுத்துக்களுக்கு தகுந்த மரியாதை வந்து சேர வேண்டும்! தோழர் செல்வராஜ் அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.
2)தமிழக இடதுசாரி இயக்கத்தின், தமுஎச-வின் அடிவேர்களில் முக்கியமானவர் தோழர் செல்வராஜ். அன்றைய மதுரை மாவட்டத்தின் பண்ணைப்புரத்தில் தலித் சமூகத்தில் பிறந்தவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பாடகராக இருந்த பாவலர் வரதராசனின் இளையசகோதரர். கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் வரதராசனும் அவரது சகோதரர்களான பாஸ்கர், ராசையா, அமர்சிங் (கங்கை அமரன்) ஆகியோரும் பாடாத கிராமங்களும் நகரங்களும் தமிழ்நாட்டில் இல்லை. செல்வராஜ் அவர்களின் நினைவோடையில் இருந்து தீக்கதிரில் எழுதப்பட்ட ஒரு குறிப்பு எப்போதும் என் நினைவில் இருக்கும், அது இதுதான்: ”கம்யூனிஸ்ட் இயக்கத்தின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மூத்த தோழரான டி.செல்வராஜ் தீக்கதிர் வண்ணக்கதிரில் (2.10.2005) கூறி யிருப்பதை அப்படியே தருகின்றேன்: "பாவலர் வரதராசன் இசைக்குழு அமைப்பதற்கு முன்பே எனக்கு அவரைத் தெரியும். 1958ஆம் ஆண்டில் கேரள மாநிலம் தேவிகுளம் தாலுகாவில் (இப்போதைய இடுக்கி மாவட்டம்), தேயிலைத்தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்கப் பணிக்காக தமிழகத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழுவால் முழுநேர ஊழியராக அனுப்பப்பட்டவர் அவர். அப்படிப்பட்ட சூழலில்தான் கேரள மாநிலத்தில் இருந்த தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிப் பாடு தலைமையிலான கம்யூனிஸ்ட் மந்திரிசபையைக் காப் பாற்றும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தேவிகுளம் சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள அமைச்சரவையைக் கவிழ்த்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தனது சக்தி முழுவதையும் திரட்டித் தேர்தல் களத்தில் குதித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் பி.டி.பொன்னூசின் துணைவியார் தோழர் ரோசம்மா பொன்னூஸ்.

"அப்போது முழுநேர ஊழியராக இருந்த தோழர் வரதராசனின் பிரச்சார ஆயுதம் அவரது இசைஞானமும் கவிதையாக்கும் திறமையும்தான். இசைக்கருவிகள் ஏதும் கிடையாது. தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று 'மைக்' கில் அவர் பாட ஆரம்பித்தார் என்றால் மக்கள் சாரை சாரை யாக பாட்டின் நாதம் கேட்டு கூடுவதே பெரும் காட்சியாக இருக்கும். நடுநிசியில் கூட மக்கள் அந்தப்பாடல்களைக் கேட்கக் கூடுவார்கள்.... இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போனது. அதற்குப் பிறகுதான் பாவலர் வரத ராசன், தோழர் ஐ.மாயாண்டி பாரதியின் ஆலோசனை அடிப்படையில் தனது சகோதரர்களை இணைத்து இசைக் குழு அமைத்து தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார்".
(இளையராஜா தன்னை ஒரு மேல்சாதிக்காரராக அல்லது மேல்சாதி ஆதரவாளராக காட்டிக்கொள்ள முயற்சித்து பல வேலைகளை செய்தார். அப்போது நான் எழுதிய கட்டுரை ஒன்றில் இக்குறிப்பை பயன்படுத்தினேன்)

veligalukkuappaal said...
This comment has been removed by the author.