பாபர் மசூதி இடிப்பும்
அரவிந்தன் நீலகண்டனும் .......!
சமீபத்தில் பதிவர் நண்பர் ஒருவர் "மசூதி இடிப்பு" என்று தன்னுடைய முகநூ லில் குறிப்பிட்டிருந்தார். இந்துத்வா நண்பர்களின் தத்துவ ஆசானான அரவிந்த நீலகண்டன் கொதித்து எழுந்து "மசூதியா ? இடிப்பா? " என்று கேட்டார். அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு சர்சைக்குரிய கட்டடம் (disputed structure ). மசூதி என்றால் வாய் வெந்து போகும் அவர்களுக்கு !!
அது என்னசர்ச்சை ? உருவாக்கினவர்களே அவர்கள் தான் ! இந்த மாதம் 22ம தேதி "Ayodhi : the dark night " என்ற புத்தகம் வெளி வருகிறது அந்த புத்தகம் 1949ம ஆண்டு டிசம்பர் மாதம் 22-23ம தேதி நள்ளிரவில் நடந்தது பற்றி சொல்கிறது.மசூதி இருப்பது இந்துத்வா வாதிகளுக்கு கண்ணை வலித்தது. சுதந்திரம் பெற்ற உடன் இந்துத்வாவின் இந்துமகா சபாவின் செல்வாக்கை அதிகரிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்பது
அவர்களின் உடனைத்தேவை. சதி திட்டம் தீட்டப்பட்டது.
அபிராம் தாஸ் என்ற 6அடி உயரம் கொண்ட தடியன் இவனை "நிர்வாணி
அக்கரா " என்ற மடத்தை சேர்ந்தவன் என்று கூறிக்கொள்கிறார்கள்.இவனுடைய சகோதரன் இந்து சேகர் ஜா , ஜுகல் கிஷோர் ஜா ஆகியவர்களோடு சேர்ந்து காரியங்களை முடிக்கத்திட்டமிட்டனர்.
22ம தேதி இரவு 12 மணிக்குமேல் இவர்கள் கள்ளத்தனமாக " ராம் லாலா "
சிலைய மசூதியின் நடுவில்கொண்டு வைத்துவிட வேண்டும். வெளியிலுள்ளவர்கல் இவர்களின் சமிக்ஞைக்காக காத்திருப்பார்கள்.
சமிக்ஞை வந்ததும் சுயம்புவாக ராமச்சந்திர முர்த்தி சீதையோடு எழு ந்தருளி விட்டார் என்று இரவோடு இரவாக தண்டோரா
போடுவார்கள். அகில இந்திய இந்து மகாசபாவின் தலைவன் அதேசமயத்தில் ப்சாபாத்தில் "ராமர் தோன்றினார்" என்று சுவரொட்டிகளை அடித்து அயோத்தி முழுவதும்
ஒட்டுவான்.
காடு மாதிரி இருந்த பாபர் மசூதி கட்டிடத்திற்கு காவலாக முகம்மது இஸமாயில் என்பவன் இருந்தான் அவன இந்த முவரும அடித்து விரட்டி விட்டு சிலையை வைத்து விட்டார்கள்.காலையில் அப்பாவி ஜனங்களை உசுப்பிவிட சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகிவிட்டது.
கலக்டர் வந்தார். கலக்டர் கே.கே நாயர். இவன் ஒரு செட்டப்பு கேசு. கேரளத்திலிருந்து வந்த இந்து மகாசபை ஆதரவாளன். சுயம்புவாக வந்த ராமர்-சீதா இருவருக்கும் பூஜை புனஸ்காரம் செய்ய மசூதிக்குள் அனுமதி கொடுத்தான்.
சர்ச்சை ஆரம்பமானது இப்படித்தான் .
Ayodha : The dark night ,(harper collins )Autors : Krishna Jha and Dhirendra K jha
ஆதாரம் :டைம்ஸ் ஆப் இந்தியா (6-12-12)
1 comments:
அந்த நாயர் கலெக்டர் உத்தியோகத்தை விட்டுவிட்டு ஜன்சங்கத்தில் பின்னாடி சேர்ந்திருக்கிறார்.
Post a Comment