ஹரிஹரன் அவர்களே!
நீதிபதி கட்ஜு சொன்னது சரிதான் ...!
பதிவுலக நண்பர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கத்தாரிலிருந்து தோழர் ஹரிஹரன் மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு "சம்ஸ்கிருத மொழி 5சதம்,"மதம்" 95 சதம் "அறிவியல்" என்று அவருடைய வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அது பற்றி விளக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
எண்பது வயதை (77) நெருங்கிக் கொண்டிருக்கும் நான் இன்றும் மார்க்சிய மாணவன் தான்.எந்த ஒருமொழியும் அதன் தோற்றம்,வளர்ச்சி ஆகியவற்றை கணக்கிட்டால் அறிவியல் ரீதியானது தான்.பயன்பாட்டில் அதன் அழுத்தம் முன்பின்னாக மாறலாம்.
சம்ஸ்கிருதம் தேவ பாஷை என்றும் அது அந்தணைரகளின் மொழி என்றும் கிருத்துவத்தை வளர்க்கவந்த பாதிரிமார்கள் சொன்னார்கள். அன்றைய இனவாத அரசியலுக்கும்,பிரிட்டிஷ் அடிவருடிகளுக்கும் அது சௌகரியமாகப்போனது..
உண்மையில் அறிவியல் கருத்துக்கள்,தத்துவ விசாரணைகள் சம்ஸ்கிருத மொழியில் நிரம்பிக்கிடக்கின்றன. ஒரே ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் :
பொருட்களில் உயிருள்ளவை உயிரற்றவை என்று உள்ளன ! உயிருள்ளவகளுக்கும் உயிரற்றவைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதாவது உயிர் என்றால் என்ன? இதை இன்றய அறிவியல் விளக்கியுள்ளது!
"எந்த ஒரு பொருள் தனக்கு தேவையானதை தனக்கு வெளியிலிருந்து எடுத்துக் கொள்கிறதோ , எந்த ஒரு பொரூள் தனக்குத் தேவையற்றதை தன்னிலிருந்து வெளியேற்றி கொள்கிறதோ அது உயிருள்ள பொருளாகும் "
இதனை ஆங்கிலத்தில் catabolism ,metabolism என்கிறார்கள்.
எல்லா மதத்தினரும் "நீத்தார் நினைவினை" சடங்காக அனுசரிப்பார்கள்.இந்துக்கள் புரோகிதரை வைத்து இதனை செய்வார்கள். அவர் "பிராணோவா அன்னம்!
தத் வ்ரதம் !அன்னம் ந நிந்தயேத் !
அன்னமேவ பிராணன் !
என்று ஓதுவார். அதன் அர்த்தம் அவருக்கும், திருப்பிச் சொல்பவருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதன் பொருள்
உயிர் என்பது உண்வு மட்டுமே !
அதிகமாகவோ குறைவாகவோ உண்ணாதே !
உணவை வெறுக்காதே !
உணவுதான் உயிர் !
கடவுளை நம்பாதவர்கள்,வேதத்தை மட்டும் நம்பி கடவுளை நம்பாதவர்கள், என்று தத்துவ வாதிகள் உள்ளனர். கபிலர்,ய்க்யவல்கியர்,பதஞ்சலி என்று அறிவியல் ரீதியாக சிந்திப்பவர்கள் உண்டு .
ஹரிகரன் அவர்களே ! நீங்களோ,நானோ அவனோ அவர்களோ எற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நீதிபதி கட்ஜு சொன்ன உண்மை பளிச்சிடவே செய்கிறது..!
1 comments:
இது நாள்வரை கொன்டிருன்த சம்ஸ்கிருதத்டின் மீதான வெறு ப் பு 'அறிவால்' மாறிவிட்டது. அதை தெவ பாஷை என்றுகொண்டாடியதால் எற் பட்ட வெறு ப் பு ! இன்திய்யவில் செத்து ப் போன ஒரு மொழியை ஏன் செம்மொழி அன்தஸ்து கொடுத்து கொண்டாடுகிறார்கள் என்றும் அதன் மீது வெறு ப் பு வர காரணம், இன்னொன்று மதவெறி சக்திகள் சம்ஸ்கிருதத்தை ப் பொற்றும் போது ஐயம் எழுன்தது.
வடமொழி என்று கூற ப் படும் சம்ஸ்கிருதத்திற்கும் பல ஐரோ ப் பிய மொழிகளுக்கும்அனெக ஒற்றிமை உள்ளதை ஒரு பதிவில் எழுதியிருன்தேன். ஆரியர்களின் வரலாறு குறித்து அறிவதற்கும் சம்ஸ்கிருதத்தின் வரலாறு அவசியமாக இருக்கிறது.
கட்ஜுவின் கருத்துக்கள் நம்மோடு அனேக விசயஙKளில் ஒத்து போகின்றன. சிரமம் எடுத்து
விலக்கியதற்கு மிக்க நன்றி தொழரே.
Post a Comment