"பக்த ராமதாசும் "
நவாபும்......!!!
பதிவுலக நண்பர் மோகன் ஜீ அவர்களின் பதிவு ஒன்றுக்கு பின்னூட்டம் போட்ட போது "பக்த ராமதாஸ் பற்றி குறிப்பிட்டிருந்தேன்! அதை யோட்டி என்னுடைய நினைவுகள் பின்னோக்கி சென்றது!
நான் சிறுவனாக இருந்த போது நாடகங்கள்பார்க்க கல்லிடைக் குறிச்சி செல்வோம்! அப்போது கல்லிடை ரயில் நிலையம் முன்பு ஒரு நாடகக்கொட்டகை இருந்த நினைவு இருக்கிறது! அங்கு மதுரை தேவி பாலசங்கீத நாடக சபா குழுவினர் நாடகம் போடுவார்கள் ! "கிருஷ்ண லீலா ",,"சுவாமி ஐயப்பன் " பக்த ராமதாஸ் " என்று நாடகங்கள் நடக்கும்!
அந்த நாடகக்கம்பெனியின் முதலாளி ராஜமாணிக்கம்பிள்ளை ! மிகச்சிறந்த நடிகர்! நுற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள்,தோழிலாளர்களை வைத்து நாடகம் போடுவார்! சிறந்த தேசபக்தர்! சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்!
அவர் "பக்த ராமதாஸ் " நாடகம் போட்டால் கூட்டம் மொய்க்கும்!
அவர்தான் நவாபாக நடிப்பார்! இந்தியா பூராவும் சென்று நாடகங்களை போட்டுள்ளார்!
ஒருமுறை மைசூரில் "பக்த ராமதாஸ்" நாடகத்தை மைசூர் மகாராஜா ஜெய சாமராஜ்முன்னிலையில் போட்டார்!
நவாபாக அவர் நடித்ததைக் கண்டு சொக்கிப்போன மகாராஜா தன அரண்மனையிலிருந்து தன்னுடைய ராஜ உடை ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்து "இனி இந்தக்காட்சியில் இந்த உடையப் போட்டுக்கொண்டு நடிக்கவேண்டும் " என்று கூறி "இன்றிலிருந்து உமக்கு "நவாப்" "என்ற பட்டத்தை அளிப்பதாக அறிவித்தார்!
அன்றிலிருந்து ராஜமாணிக்கம் பிள்ளை "நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை "
ஆனார்!
3 comments:
நடிப்புக்கு ராஜமாணிக்கம் சொன்ன ஜவாப் அவரை நவாப் ஆக்கிவிட்டதோ?
சுவாரஸ்யமான தகவல் காஸ்யபன் சார்.
சுவாரஸ்யமான தகவல்! பகிர்வுக்கு நன்றி!
சுவையான தகவல் அய்யா
Post a Comment