கிரிகெட் சூதட்டமா .......!!!
ஒரு பயல ஒண்ணும் செய்ய முடியாது ....!!!
எங்க ஊருல இருந்து மாமா வந்திருந்தாரு! தேக்க "திநேலி " தான் சொந்த ஊரு! தாசில்தாரா இருந்து ரிடையர் ஆனவரு! ஒரு ஆள மதிக்க மாட்டாரு ! ஒரு ஆள்ட பேசினா நாலு பெர்கூட சண்டைவரும்!
"என்ன வெக்கை டே உன்கூர்ல? "
"இன்னக்கி 47.5 மாமா!"
மாமாவை இன்னிக்கு ராத்திரி பங்களுருக்கு விமானத்துல அனுப்பணம்! அங்கேருந்து திருவனந்தபுரம் போய் அம்பை போய்டுவாரு!
"ஏம்பா! எ.சி ரூம்புலயெ இந்தப்பாடா இருக்கே! சனங்க என்ன பாடுபடும் " என்றார் மாமா! "ஒருசவுகரியம் டே இங்க! கரண்ட் கட்டு இல்ல! எங்கவூருன எப்ப சொல்லமுடியாது ! வள்ளிசா கரண்டுஇல்லனுதான் வச்சுக்கணும் "
"நீரு விரவனல்லுர்ல சிம்னி விளக்குல தானவே படிச்சேரூ "
"சின்னபுள்ளய இருக்கும் பொது தெருவுல "டங் டங் "நு ஆட்டிகிட்டுபோன! இப்ப எனத்துக்குல கோமணம் கட்டுத!"
மேல பேசினா அசிங்கமசிங்கமா போசுவாரு !
"நாங்க 46ம் ஆண்டுல இங்க இருந்த போது கரண்டு கிடையாது ! எப்படீருந்தோம்னே தெரியல!"
"இப்பவும் என்ன கிழிச்சிப் புட்டணுவ! சைக்கில் ரிக்சா இழுக்கன்! செருப்பு தைக்காண்! ஜீஸ் விக்கான் !அவனுக்கு மட்டும் வெக்கைஇல்லயா !"
மாமா எழுந்து குளிர்ந்த தண்ணிரைகுடித்தார் !" பேப்பர்ல என்னடே போட்டுருக்கான் ?"
"ஸ்ரீசாந்தை கைது பண்ணியிருக்காங்க ?
"அவன் ஒரு அகராதி புடிச்ச பயல்லா"
"சூதாட்டம் ஆடியிருக்கான்!?"
"ஷாருக்கான் என்ன ஆட்டமாடுதான்! சீனிவாசன் என்ன ஆட்டம் ஆடுதான் !" மாமா சூடானார்!
"அம்ம்புட்டு பயலும் திருட்டு பயலுக ! ஒரே அமுக்க அமுக்கிடுவான் பாரு! "
"யாரை? ஸ்ரீசாந்தையா!"
"ம - - சாந்தை ! தேர்தல்ல தோத்துப் போனான் ! அறிவிச்சாங்க! அப்புறம் ஜெயிச்சாநாக ! மந்திரி ஆயிடான்னாக !"
"மாமா இது அப்படி இல்லை மாமா!கையும் களவுமா பிடிச்சு இருக்காங்க !"
"ஜாடேஜா என்னால ஆச்சு ?
"அது...!"நான் இழுத்தேன்
"அசாருதீன் என்ன ஆச்சு! காங்கிரஸ்ல சேர்ந்தான் ! எம்பிஆனான்! "

"அப்பம்"
"ஒரு பயல ஒண்ணும் பண்ணமுடியாது!" மாமா முடிவா சொன்னார் !!!
4 comments:
நல்ல உரையாடல்...
சாமீ...!
உண்மைதான் இதெல்லாம் ஐபிஎல்லை பிரபலபடுத்த நடக்கும் நாடகமோ என்று கூடத்தோன்றுகிறது!
மொத்தத்தில் ஏமாறுகிறவர்கள் என்னவோ மக்கள்தான்.
இப்படி ஒரு வழி இருக்கிறதா? அசருத்தீன் காங்கிரசுக்குப் பணம் கொடுத்தாரா வாங்கினாரா?
Post a Comment