Sunday, May 26, 2013

"என்  நோற்றான் கொல்  "

எனும் "தாத்தா ".........!!!

எனது மகன் சத்திய மூர்த்தி  நாகபுரியில் என்னோடு வசிக்கிறான்! அவனுடைய ஒரே மகன் நிகால் காஷ்யப்! நன்றாகப் படிப்பான்! எட்டாவது வகுப்பில் படிக்கும் போதே  I .I .T ,மும்பையிலோ , டெல்லியிலோ படிக்க தன்னை தயார்படுத்திக் கொண்டு வருபவன்! 

C .B .S .E   பள்ளியில் படித்து வந்தான்! சென்ற ஆண்டு 10 வகுப்பு தேர்வு எழுதினான் !  எங்கள் குடும்பத்தில் ஆதர்சமாக இருந்த தலைவர்களில் ஒருவர்  மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தலைவர் 
தோழர் சித்தாராம் எச்சூரி! அவர் C .B S .E  தேசிய அளவில் முதல் மாணவனாக வெற்றிபெற்றவர்! number one in the national merit list ! அவரைமாதிரி வரவேண்டும் என்று என் பேரன் காஷ்யப் இடம் சொல்லுவேன்! அவனும் "செஞசுடுவன் தாத்தா " என்று சொல்லுவான் !

சென்ற ஆண்டு 10th தேர்வில் 8.6/ 10 வாங்கி வெற்றிபெற்றான் ! என்னை வந்துபார்க்கும்போது அவன் கைகளில் ஒருகவரைக் கொடுத்தேன்! 
அதில் பத்து ஆயிரம் ரூ நோட்டுக்களை வைத்திருந்தேன்!

எனது மகள் ஹன்ஸா  காஷ்யப்! அவளுடைய கணவர் Dr .ராமன் திருச்சியில் N .I .T ல் பேராசிரியராக  இருக்கிறார்! அவர்களுடைய ஒரே மகன் அபினவ் H .R .

திருச்சியில் அபினவ் 10 th தேர்வு எழுதியுள்ளான்! அவனிடமும் எச்சூரி பற்றி கூறி அவர் மாதிரி merit ல் வரவேண்டும் என்று  சொல்லுவேன் ! "கண்டிப்பாக தாத்தா " என்பான்! 

கோடை ஆதலால் அவனும் அவன் தாயாரும் பங்களூரு,ஊட்டி என்று சுற்றுலா போயிருக்கிறார்கள்!

நேற்று மாலை தொலை பேசியில் அபினவ் 9.8 /10 மதிப்பெண் எடுத்து வேற்றி பெற்றுள்ளதாக என்மகள் கூறினாள் !
அவனுக்கும் ஒரு கவர் காத்திருக்கிறது! 
இரண்டு பேரன்களும் சமூக அக்கரையும்,ஆரோக்கியமான, மன 
அமைதியான, நீண்ட ஆயுளோடு வாழ, நண்பர்களும்,பதிவர்களும்,தோழர்களும் வாழ்த்தி அருள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்!
















6 comments:

இராஜராஜேஸ்வரி said...

இரண்டு பேரன்களும் சமூக அக்கரையும்,ஆரோக்கியமான, மன
அமைதியான, நீண்ட ஆயுளோடு வாழ,
இறைவனைப்பிரார்த்திக்கிறோம் ...

இராஜராஜேஸ்வரி said...

"என் நோற்றான் கொல் " எனும் "தாத்தா ".........!!!

மனம் நிரைந்த இனிய வாழ்த்துகள்...!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தாத்தாவைப் போல் பேரன்களும் சமூக அக்கறையோடு நீடூழி வாழ இந்தச் சிற்றப்பனின் வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

எப்படிப்பட்ட பெருமை!
குன்றிலிட்ட விளக்கின் ஒளியாகப் பிரகாசிக்கட்டும் இவர்கள் வருங்காலம்.

சிவகுமாரன் said...

தங்களின் பேரன்களுக்கு என் வாழ்த்துக்கள். என் பையன் இந்த வருடம் 10 ஆம் வகுப்பு (CBSE) தேர்வு எழுதவிருக்கிறான். 10/10(?) வாங்கினால் கவர் கிடைக்குமா?

kashyapan said...

அன்பு சிவகுமரன் அவர்களே! மே மாதம் 30ம்தேதி கிளம்பி,சென்னை,திருச்சி,மதுரை என்று சுற்றிவிட்டு இன்றுதான் நாகபுரி வந்தேன்! அவ்னுக்கும்கவர் கிடைக்கும் !---காஸ்யபன்.