Saturday, September 21, 2013

திரைப்பட நூற்றாண்டு விழாவும் ,

அந்த  மூன்று இளைஞர்களும் .......!!!

திரைப்பட விழா பற்றிய சர்ச்சை தொடங்கி விட்டது ! சுமர் நாற்பது நாற்பத்தி ஐந்து வருடங்களுக்குமுனாபாக தமிழ் திரைப்பட உலகை மூற்றிலும்மாற்றி அமைக்க வேண்டும் என்று கருதி திரைப்பட  உலகிற்குள் நுழைய முன் வந்தனர் மூன்று  இளைஞர்கள் ! 

கமலா ஹாசன்,பாரதிராஜா, லெனின் ஆகியோர்தான் அந்த மூவரும்!
எல்டாம்ஸ் ரோடின் காம்பவுண்டு சுவர்களின்மேல்  உட்கார்ந்து கொண்டு உலக சினிமா பற்றியும், தமிழ் சினிமா பற்றியும் அலசி ஆராய்வார்கள் ! சிலநாட்கள் விடியும்வரை  பேசுவார்கள் !

அவர்களுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது ! அன்றிருந்த நிலையில் திரை  உலகத்திற்குள்  ஆதிக்கம் செலுத்தி வந்த எம்.ஜி.ஆர்,சிவாஜி  ஜெமினி ஆகிய star  களை மீறி எதுவும் செய்யமுடியாது ! இந்த star system  உடைக்கப்படவேண்டும் ! வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்கள் !

காலம் மாறியது ! கோடம் பாக்கம் குச்சிலுக்குள் இருந்த தமிழ் திரைப்படம் "பதினாறு வயதினிலே "என்ற படத்தின் மூலம் studio system தனை உடைத்துகொண்டு வெளியே வந்தது !

நடிகனின் பெயரை விட இயக்குனரின் பெயர் ரசிகர்களிடையே முதன் முறையாக பேசப்பட்டது !

இயக்குனருக்கு star அந்தஸ்து வந்தது !

பாரதி ராஜா star இயக்குனரானார் !

அதிலிருந்து கீழெ இறங்க மனமில்லாத அவர் அங்கேயே தங்கி அதோடு ஐக்கியமாகிவிட்டார் !

முன்றில் ஒன்று கழிந்தது!

கமலஹாசன்  தொடர்ந்தார் ! திரைப்பட தயாரிப்பின் அன்றய நெளிவு சுளிவு களுக்கு ஏற்ப அவர் தன்னை மாற்றி கொண்டார் ! "சகலகலாவல்லவன் " ஆனார் ! அருகிலேயெ வந்து கொண்டிருந்த ரஜனி கைகோர்த்துக் கொண்டார் ! எம்.ஜி.ஆர்,சிவாஜி க்குபதிலாக கமல்,ரஜனி star system வந்தது ! கமல் அதில் முங்கி முழுகிப்போனார் !

மூன்றில்  இரண்டாவதும் கழிந்தது !

80 ஆண்டுகளில் தா.மு.எ.ச கலைஇரவுகளை நடத்தும்! குறிப்பாக திருப்பரம்குன்றம் கலை இரவு விசேஷ் மாக இருக்கும் ! ஒரு முறை 
லெனின் வந்திருந்தார் ! அவரோடு அருகில் அமர்ந்து பேச வாய்ப்பு கிடைத்து! தமிழ் திரைப்படம் பற்றியும் அதனை கேரளம், மே.வங்கம் , மற்றும் சர்வதேச தரத்திற்கு கொண்டுசெல்வது பற்றியும் அவரிடம் விவாதித்தேன்! அப்போது தான் எலடாம்ஸ் ரோடு இளைஞர்கள் பற்றி குறிப்பிட்டார் !

"தன்னந்தனியாக நான் நிற்கிறேன் ! உங்களைப் போன்ற   முற்பாக்கு எழுத்தாளர்கள் தான் கைகொடுக்க வேண்டும் " என்றார் !

த.மு.எ.க.சாவின் விருது நகர் மாநாட்டில் "முற்போக்கு எழுத்தாளர்கள் " கைகொடுத்து வருகிறார்கள் என்பதை பகிரங்கமாக செயற்படுத்தினார் லெனின் !

இன்று வெறும் அரங்கங்களில்   அடைபட்டுக் கிடந்த திரைப்படத்தை மக்கள்மத்தியில் த.மு.எ.க.ச கொண்டு சென்று கொண்டிருக்கிறது !

லெனின் அவ்ர்களே நாம் கைகோர்த்து நடை போட வேண்டிய தூரம் இன்னும் அதிகம் !

Miles to go ! comrade !!!














 




5 comments:

venu's pathivukal said...

மிகச் செறிவான பதிவு..
மேதா விலாசங்கள் புறப்பட்டும், விலாசங்கள் காணாமல் போன
புதிய தடத்தைத் தேடும் பாதையில், பீம்சிங்.லெனின் மட்டுமே அதே சிந்தனைத் தொடர்ச்சியில் தத்தளிப்பதும், மாற்று சினிமாவுக்கான முற்போக்கு இயக்கவழியில் நம்பிக்கை வைத்திருப்பதும் நிறைவைத் தருகிறது....அது மட்டுமே போதாது... பயணம் தொடர வேண்டியிருக்கிறது...

வாழ்த்துக்கள்....

எஸ் வி வேணுகோபாலன்

kashyapan said...
This comment has been removed by the author.
kashyapan said...

மிக்க நன்றி தோழர் எஸ்.வி அவர்களே!---காஸ்யபன்

கரந்தை ஜெயக்குமார் said...

லெனின் மட்டும் பாதைமாறாமல் பயணிப்பது பாராட்டத் தக்கது ஐயா. மனதாரப் பாராட்டுவோம்

'பரிவை' சே.குமார் said...

லெனின் மட்டும் இன்னும் தொடர்ந்து பயணிக்கிறார்... தொடரட்டும் அவரது பயணம்...
வாழ்த்துக்கள்.