Saturday, December 07, 2013

"அஜானியா "என்ற தென் ஆப்பிரிக்காவும் 

மூன்று களவாணிகளும் .......!!!


அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர் எங்கள் "கருப்புக் கண்ணன் "' என்றும் ஆர்.ஜி என்றும் அழைக்கப்படும் ஆர்கொவிந்தராஜன் ! 
இன்சூரன்ஸ் ஒர்க்கர் என்ற எங்கள் இதழில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு "அஜானியாவின் எழுச்சியும் - தென ஆப்பிரிக்காவின் வீழ்ச்சியும் " என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார் !
தென் ஆப்பிரிக்காவின் ஆதிப் பெயர்  "அஜானியா " !

பிரிட்டிஷ் அரசும் சரி  , மற்ற முதலாளித்துவ நாடுகளும் சரி நிறவெறி அரசு என்று வரும் போது மறந்தும் "தென் ஆப்பிரிக்கா " என்று குறிப்பிட மாட்டார்கள் ! காமன் வெல்த் மாநாட்டில் கூட தெற்கு ஆப்பிரிக்க நிறவெறி அரசு என்றுதான் குறிப்பிடுவார்கள் ! 

தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசை எதிர்த்து காந்தி ஆடிகள் நடத்திய போராட்டம் உலகம் அறிந்த ஒன்று !

அவருக்குப்பிறகு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அந்த போராட்டத்தை நடத்தியது !

ஒரு கட்டத்தில்தான் தலவர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு செயல்பட் வேண்டியதாயிற்று !

நிற வெறி அரசு அவர்களைப் பிடிக்க  துடித்து ! மேலைநாடுகள் ஒரு சதிவலயைப்பின்னின ! நிறவெறியை எதிர்ப்பதாக அமெரிக்கா அறிவித்து (!)
ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிக்க வேண்டும் ! 

தலைமறைவாக இருக்கும் ஆ.தே கா தலைவரோடு அமெரிக்க தூதுவர் பேச்சுவார்த்தை நடத்துவார் ! என்று திட்டம் போட்டனர் !

ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவர் வாடகைகார் ஒட்டுனர் வேடத்தில் அமெரிக்க தூதரை பார்க்க வந்தார் !

திட்டமிட்ட படி நிற வெறி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட அநத தலைவர் கைது செய்யப்பட்டார் ! 
 
தேச துரோக குற்றம் சாட்டப்பட்டு 27 ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டெலா தான் அவர் !

நெல்சன் மண்டேலாவின்  இறுதிநிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா.முன்னள் ஜனாதிபதிகள் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் jr மூன்று  பேரும் வருகிறார்கள் !


















  








4 comments:

hariharan said...

நெல்சன் மண்டேலாவை அமெரிக்க தூதரகம் கைதுசெய்ய உதவியிருக்கிறதா?

kashyapan said...

அதில் என்ன சந்தேகம் ! சி.ஐ.ஏ தான் ஏற்பாடு ! 8-12-13 டைம்ஸ் ஆப்.இந்தியாவில் கூட செய்தியாக வந்துள்ளதே ! ---காஸ்யபன்.

கரந்தை ஜெயக்குமார் said...

நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

'பரிவை' சே.குமார் said...

மிகப்பெரிய தலைவன்...
கருப்புச் சூரியன்...
அதன் கதிர்கள் கொடுத்த தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும்...